திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலம்
திருப்பதி:
திருப்பதி-திருமலையில் 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (வியாழக்கிழமை)கோலாகலமாகத் துவங்கியது.
திருமலையில் கோவில் கொண்டுள்ள, அருட்கடல் அருள்மிகு வெங்கடாஜலபதி கோவிலில் ஆண்டு தோறும்இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.
புரட்டாசி மாதம் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும். சென்ற மாதம் (செப்டம்பர்) 10 நாட்கள் இந்த பிம்மோற்சவம்கோலாகலமாக நடந்து முடிந்தது.
அதன்பின் நவராத்தியின் போது ஒரு நவராத்திரி பிரம்மோற்சவம் 9 நாட்கள் நடைபெறும். இதையடுத்துதிருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை தொடங்கியது.
பிரம்மோற்சவா விழாவை திருமலாவின் தலைமை அர்ச்சகர் சிறப்பு பூஜை செய்து துவங்கி வைத்தார். கருடவாகனத்தில் பெருமாள் வலம் வரும் காட்சியை கண்டால் முக்தி கிட்டும் என்று நம்பப்படுகிறது. முக்கியமான கருடசேவை வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.
திருமலையில் என்றுமே விழாக்கோலம்தான். பெருமாளை தரிசிக்க எப்போதுமே இங்கு பக்தர்கள் கூட்டம்அலைமோதும்.
கடந்த மாதம் நடந்த பிரம்மோற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருள்பெற்றனர். தற்போது நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ளவும் லட்சக்கணக்கான பக்தர்கள்திரண்டுள்ளனர். எங்கும் "கோவிந்தா, கோவிந்தா..." என்ற பக்த கோஷம் கேட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கடும் மழை காரணமாக திருமலாவிலுள்ள 3 நீர்தேக்ககங்களிலும் நீர் நிறைந்துள்ளது. இதன் காரணமாக இது வரை நிலவி வந்த குடிநீர் பஞ்சமும் தீர்ந்துள்ளது.
பிரம்மோற்சவத்தையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஏற்கனவே கோவிலுக்குள்பைகள், சூட்கேஸ்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களும் மெட்டல் டிடெக்டர்மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பே கோவிலுக்குள் அனுப்பப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications