டிவி vs டிவி

Subscribe to Oneindia Tamil

சூரியன் டிவிக்கு இப்போது கொஞ்சம் சிரமதசை போலும். அவர்களுக்குப் போட்டியா நட்சத்திர வெற்றி டிவியும், ஜெயம் டிவியும் போட்டி போட்டிக் கொண்டுநிகழ்ச்சிகளை திட்டமிட்டு வருகின்றன.

வெற்றி டிவி இப்போது நட்சத்திர டிவியின் கைவசம் வந்து விட்டதால் 'நட்சத்திர வெற்றி' என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. இப்போது சேனலேபுதுப்பொலிவோடு காணப்படுகிறது.

Revathi முன்பு சூரிய டிவியில் சீரியல்கள் கொடுத்துக் கொண்டிருந்த ரேவதியை நட்சத்திர வெற்றி டிவி இப்போது வளைத்து விட்டது. அதேபோல, நடிகை குஷ்புவை வைத்துமருமகள் என்ற மெகா சீரியலையும் சூப்பராக கொடுத்துக் கொண்டுள்ளது.

ஜெயம் டிவியும் தன் பங்கிற்கு கோடீஸ்வரியை ஸ்டார்ட் செய்து விட்டது, அதுவும் சூரிய டிவியில் முன்பு வந்த கோடீஸ்வரன் நிகழ்ச்சி எடுக்கப்பட்ட அதே செட்டில்தான்கோடீஸ்வரி சூட்டிங் நடக்கிறதாம்.

சாதாரணமாக இருந்து கொண்டிருந்த இந்த இரண்டு டிவிக்களின் விஸ்வரூபம் காரணமாக சூரிய டிவியின் வயிற்றில் புளியைக் கரைத்தது போலாகியுள்ளதாம்.இதனால் சில அதிரடி முடிவுகளை எடுக்கவுள்ளது சூரிய டிவி.

Khushbooஹலோ எப்படி இருக்கீங்க, நான் நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா, சாப்டீங்களா, தூங்கினீங்களா என்று குலுங்க குலுங்கக் கேள்வி கேட்டுஎல்லோரையும் ஜொள்ளு விட வைக்கும் உமா வழங்கும் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை சிறிது காலத்திற்கு வேறு ஒருவரை வைத்து வழங்கினால் போட்டிடிவிக்களின் தாக்குதலை சமாளிக்கலாம் என்று சூரிய டிவிக்காரர்கள் யோசித்தார்கள்.

அப்படியே அந்த யோசனையை எடுத்துக் கொண்டு விவேகமான காமடி நடிகரின் வீட்டிற்கு ஓடினார்கள். அவரும் உட்கார வைத்து உபசரித்தார். டீயை சாப்பிட்டுவிட்டு தாங்கள் வந்த செய்தியை சொல்லியுள்ளார்கள் சூரிய டிவிக்காரர்கள்.

அமைதியாக கேட்ட விவேகமானவர், எல்லாம் சரிதான், ஆனால் பெப்சி என்றால் உமா, உமா என்றால் பெப்சி என்றாகி விட்டது. எனவே நான்நடத்தினால் சரியாக வராது என்று கூறியுள்ளார்.

ஆனால் டிவிக்காரர்கள் விடவில்லையாம். இது இல்லாவிட்டால் பரவாயில்லை, வேறு ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று கேட்டுள்ளார்கள்.

இதனால் கோபமடைந்த விவேகமானவர், ஏன் சார், நான் சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பு உங்களுக்காக தயாரித்த நிகழ்ச்சியை திடீரென சமீபத்தில்ஒளிபரப்பினீர்கள். இந்த பழைய நிகழ்ச்சியை இப்போது ஒளிபரப்பினால் எனது இமேஜ் கெடும் என்று உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டும், அதைகாதிலேயே போட்டுக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப ஒளிபரப்பினீர்கள். இப்போது உங்களுக்குத் தேவையென்றால் அதை நான் கேட்க வேண்டுமா?கிளம்பிப் போங்கப்பா என்று கடுப்புடன் கூறியுள்ளார்.

இதனால் வெறுத்துப் போன சூரிய டிவிக்காரர்கள், வாரத்திற்கு ஒரு ஸ்டாரை அழைத்து வந்து நேரடி ஒளிபரப்பு என்ற பெயரில் ரசிகர்கள் மூலம் கேள்விகள்கேட்க வைத்து அவர்களை பதில் சொல்லச் செய்யும் புதிய நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளார்கள்.

முதலில் கமலஹாசனை அழைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளார்கள். இது வாரம் தோறும் தொடருமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+