Aadi Perukku 2026: ஆடிப்பெருக்கு எப்போது? தாலி சரடு மாற்ற நல்ல நேரம் எது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி பெருக்கு வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படும் நிலையில் திருமாங்கல்ய சரடு மாற்ற நல்ல நேரம் எது, எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஆடி மாதம் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு விசேஷம். பொங்கல் வைத்தல்,. கூழ் வார்த்தல் உள்ளிட்டவை செய்யப்படும். ஆடி மாதம் நல்ல மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருகி ஓடி வரும். அதிலும் காவிரி நீர் வந்து விவசாயம் செழிக்கும்.

Aadi perukku

ஆடி மாதம் முக்கியமான பண்டிகை ஆடி பெருக்கு. இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவர். அதிலும் காவிரி நதி பாயும் பகுதியில் இந்த கொண்டாட்டம் நடைபெறும். புதுவெள்ள நீரை வணங்கி பூக்களை தூவி விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்குவர்.

ஆடி பட்டம் தேடி விதை என்பார்கள். ஆறு பாயும் கரைகளில் 18 படிகள் அமைத்திருப்பார்கள். இந்த நாளில் விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை!

ஆற்றுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே கொண்டாடலாம். வீட்டில் கோலமிட்டு காவிரியை, வைகையை, தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளை கொண்டாடலாம்.

ஆடி பெருக்கில் பெண்கள் திருமாங்கலயத்தை மாற்றிக் கொள்வது வழக்கம். இதன் மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்பது ஐதீகம். திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்குவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி பெருக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் மாற்றிக் கொள்வார்கள். அவ்வாறு மாற்றிக் கொள்ள நல்ல நேரம் எது என்பதை பார்க்கலாம்.

அதாவது காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரையும், மாலையில் 3.15 மணி முதல் 4.15 மணி வரையும் மிகச் சிறந்த நல்ல நேரமாக பார்க்கப்படுகிறது. அன்று காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம் இருந்தாலும் இந்த நல்ல நேரத்தில் சரடு மாற்றினால் பிரச்சனை இல்லை. ஒரு வேளை ராகுகாலம் என உங்களுக்கு நெருடலாக இருந்தால் மாலை நேரத்தில் கொடுக்கப்பட்ட நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+