திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் லட்டு பிரசாதம் நிறுத்தம்! புளியோதரை, பொங்கலும் போச்சு!
திருவண்ணாமலை: வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச எரிசக்தி நெருக்கடி காரணமாக, தமிழகம் முழுவதும் வணிக சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தற்போது ஆன்மீகத் தலங்களையும் எட்டியுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் லட்டு தயாரிக்கும் மடப்பள்ளியில் (Kitchen) பயன்படுத்தப்படும் பெரிய ரக வணிக சிலிண்டர்கள் போதிய அளவில் கிடைக்காததால், லட்டு தயாரிப்புப் பணிகள் முடங்கியுள்ளன.
சிலிண்டர் விநியோகம் சீராகும் வரை இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட மாட்டாது எனத் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல் முறுக்கு, அதிரசம், எள்ளு வடை, பொங்கல், புளியோதரை உள்ளிட்ட காசு கொடுத்து வாங்கிச் செல்லும் பிரசாதங்களின் தயாரிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
மடப்பள்ளிகளில் விறகு அடுப்பை பயன்படுத்தலாமா என்பது குறித்து அறநிலையத் துறையிடம் கோயில் நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளது. ஒரு வேளை அறநிலையத் துறை அனுமதி கொடுத்தால் விறகு அடுப்புகளில் பிரசாதம் தயார் செய்து விநியோகிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோயிலில், தரிசனம் முடித்து வரும்போது வழங்கப்படும் இந்த இனிப்புப் பிரசாதம் நிறுத்தப்பட்டது பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் மடப்பள்ளி மட்டுமின்றி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய ஹோட்டல்கள் மற்றும் அன்னதானக் கூடங்களும் சிலிண்டர் கிடைக்காமல் தவித்து வருகின்றன. பல இடங்களில் கள்ளச்சந்தையில் ஒரு சிலிண்டர் ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை விற்கப்படுவதால், சிறிய வியாபாரிகள் கடைகளை மூடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு, அண்ணாமலையார் கோயில் மடப்பள்ளிக்கு முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரசாதம் பாதிக்கப்பட்ட முக்கிய கோயில்கள்
பனசங்கரி கோயில், பெங்களூர்: இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். தற்போது நிலவும் கடும் சிலிண்டர் தட்டுப்பாட்டால், கடந்த சில நாட்களாக அன்னதானம் வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. போதிய சிலிண்டர்கள் இல்லாததால் உணவின் அளவைக் குறைக்கவோ அல்லது சில நேரங்களில் நிறுத்தவோ வேண்டிய சூழல் நிலவுகிறது.
குக்கே ஸ்ரீ சுப்பிரமண்யா கோயில், கர்நாடகா: சிலிண்டர் பயன்பாட்டைக் குறைப்பதற்காக இந்த கோயில் நிர்வாகம் தங்களது பிரசாதப் பட்டியலில் (Menu) அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. அதிக நேரம் வேகவைக்க வேண்டிய காய்கறி உணவுகளைத் தவிர்த்துவிட்டு, எளிதில் தயாராகும் அவல் போன்ற உணவுகளை வழங்கத் தொடங்கியுள்ளனர்.
ஸ்ரீ காளஹஸ்தி கோயில், ஆந்திரா: இங்கு லட்டு, வடை போன்ற பிரசாதங்கள் தயாரிக்க தினமும் 30-க்கும் மேற்பட்ட வணிக சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. சப்ளை குறைந்ததால், கடந்த வாரம் பிரசாதத் தயாரிப்பு தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. தற்போது மாற்று ஏற்பாடாக உள்ளூர் ஏஜென்சிகள் மூலம் சிலிண்டர்களைத் திரட்டிப் பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
பர்காபீமா கோயில், மேற்கு வங்கம்: இந்தியாவின் 51 சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில், மார்ச் 21 (இன்று) முதல் பக்தர்களுக்கு வழங்கப்படும் 'போக்' (அன்னப் பிரசாதம்) விநியோகம் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக காலவரையன்றி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை என்ன?
திருப்பதி : திருப்பதியில் 1 வாரத்திற்குத் தேவையான சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாலும், குழாய் வழி எரிவாயு (Piped Gas) வசதி இருப்பதாலும், லட்டு விநியோகம் தடையின்றி நடந்து வருகிறது.
மதுரை மீனாட்சி கோயில்: மதுரையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில், அரசு மருத்துவமனைகள் மற்றும் முக்கிய கோயில்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், தட்டுப்பாடு நீடித்தால் இங்கும் பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications