திருப்பதியில் இன்று முதல் 8ஆம் தேதி வரை! முன்பதிவு டோக்கன் இல்லாமல் சொர்க்கவாசல் தரிசனம் செய்யலாம்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை முன்பதிவு இல்லாமல் இலவசமாக சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அனைத்து வைணவ கோயில்களிலும் மார்கழி மாதத்தில் வளர்பிறை ஏகாதசியன்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். இந்த சொர்க்கவாசல் வழியாக நாமும் பிரவேசம் செய்தால் அடுத்த ஜென்மம் ஒன்றே நமக்கு கிடையாது என்பது ஐதீகம்!

அந்த வகையில் கடந்த ஆண்டு சொர்க்கவாசல் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டது. திருப்பதி, ஸ்ரீரங்கம், சென்னை மற்றும் 108 வைணவ தலங்களிலும் இந்த சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் இந்த சொர்க்கவாசல் 10 நாட்களுக்கு திறந்திருக்கும். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆம் தேதிகளில் இலவசமாக சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய முன்பதிவு டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டன.
அதன்படி கடந்த 3 நாட்களில் 1.80 லட்சம் பக்தர்களுக்கு நவம்பர் 29ஆம் தேதி டிக்கெட் வழங்கப்பட்டது. இன்றைய தினமான 2 ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 1500 டிக்கெட்கள் வீதம் ரூ 300 சிறப்பு தரிசன டோக்கன்களும் ஏற்கெனவே டிசம்பர் 5ஆம் தேதி வழங்கப்பட்டன.
இந்த 3 நாட்களில் ரூ 300 தரிசனம் உள்ளிட்ட எந்த சேவைகளும் இல்லை. ப்ரோட்டோகால் விஐபி இல்லாதவர்களுக்கான தரிசனமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் 8ஆம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்ய முன்பதிவு டிக்கெட் இல்லாத பக்தர்களளுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அது போல் ரூ 300 தரிசன டிக்கெட் பெற்றவர்களும் தரிசனம் செய்கிறார்கள். இலவச தரிசனத்தில் ஏழுமலையானை சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வருகை தந்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications