Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளியலறையில் வாஸ்து படி இந்த 1 பொருளை வைத்தால் பணத்தட்டுப்பாடு நீங்கும் தெரியுமா? அதிர்ஷ்டமான நீலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் வீட்டு குளியலறையில் பக்கெட் என்ன நிறத்தில் இருக்கிறது என்பது உங்கள் பொருளாதார நிலையை தீர்மானிக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.. வெறும் குளிக்கும் இடமாக மட்டும் பார்க்காமல், அங்குள்ள பொருட்களை சரியான திசையில் வைப்பதன் மூலம் தீராத பணக்கஷ்டத்தையும் போக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா???

வீட்டின் ஒவ்வொரு பகுதியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.. அந்த வகையில் குளியலறை மற்றும் கழிப்பறை என்பது எதிர்மறை ஆற்றல் அதிகம் தேங்கக்கூடிய இடமாக வாஸ்து சாஸ்திரத்தில் கருதப்படுகிறது..

குளியலறை வாஸ்து

நம்முடைய அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல நெருக்கடிகளுக்கு குளியலறையில் நாம் செய்யும் சிறு தவறுகளே காரணமாக அமைகின்றன.. எனவே முறையான வாஸ்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தடையின்றி நிலைக்கச் செய்ய முடியும்..

குளியலறை மற்றும் கழிப்பறையை அமைப்பதற்கு வடமேற்கு அல்லது வடக்கு திசையே மிகவும் உகந்தது.. எக்காரணம் கொண்டும் தெற்கு அல்லது தென்மேற்கு திசைகளில் இவற்றை அமைக்கக்கூடாது..

சமையலறை மின் சாதனங்கள்

குறிப்பாக சமையலறைக்கு அருகிலோ அல்லது அதற்கு நேர் எதிரிலோ குளியலறை வருவதை தவிர்க்க வேண்டும்.. குளியலறையில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களான கீசர் மற்றும் ஸ்விட்ச் போர்டுகளை தென்கிழக்கு திசையில் பொருத்துவது பாதுகாப்பானது.. அதேபோல் குளிக்கும்போது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து குளிப்பது நேர்மறை எண்ணங்களை உருவாக்கும்..

நிறங்களுக்கும் வாஸ்துவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.. குளியலறை சுவர்கள் மற்றும் டைல்ஸ்கள் நீலம் அல்லது பச்சை நிறத்தில் இருப்பது சிறந்தது..

அதேபோல் நாம் பயன்படுத்தும் பக்கெட் மற்றும் மக்குகளையும் நீல நிறத்தில் தேர்ந்தெடுப்பது அதிர்ஷ்டத்தை தரும்.. கருப்பு நிறத்தை குளியலறையில் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.. பக்கெட்டுகளில் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.. ஒருவேளை தண்ணீர் இல்லை என்றால் அவற்றை கவிழ்த்து வைக்க வேண்டும்.. கண்ணாடியை எப்போதும் வடக்கு அல்லது கிழக்கு சுவரில் மட்டுமே பொருத்த வேண்டும்..

பாத்ரூம் கதவுகள்

பராமரிப்பு என்று வரும்போது குளியலறையை தினமும் கழுவி தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.. அழுக்குகள் சேராமல் இருந்தாலே குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும்.. குளியலறை கதவுகளை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அங்கிருக்கும் எதிர்மறை ஆற்றல் வீட்டின் மற்ற பகுதிகளுக்கு பரவிவிடும்..

காற்றோட்டத்திற்காக ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.. குளியலறை எப்போதும் ஈரமாக இருக்கக்கூடாது.. பயன்படுத்திய பிறகு தரையை உலர வைப்பது பொருளாதார ரீதியான நஷ்டங்களை தடுக்கும்..

படிகாரம் - செல்வம்

இடம் பற்றாக்குறை காரணமாக குளியலறை மற்றும் கழிப்பறையை ஒன்றாக அமைத்திருந்தால் இரண்டிற்கும் இடையே ஒரு ஸ்கிரீன் போடுவது வாஸ்து தோஷத்தை குறைக்கும் என்பார்கள்..

அதேபோல வாஸ்து தோஷங்களை நீக்க படிகாரம் ஒரு சிறந்த தீர்வாகும்.. ஒரு சிறிய கிண்ணத்தில் படிகாரத்தை போட்டு யாரும் பார்க்காத இடத்தில் வைப்பதன் மூலம் தீய சக்திகள் விலகும்.. இந்த படிகாரத்தை குளிக்கும் நீரிலும் கலந்து பயன்படுத்தலாம்.. முறையான திசை அமைப்பும் தூய்மையான பராமரிப்பும் இருந்தால் குளியலறை என்பது வெறும் அழுக்கு நீக்கும் இடமாக மட்டுமல்லாமல் அதிர்ஷ்டம் தரும் இடமாகவும் மாறும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+