மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன்! சபரிமலையில் தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
திருவனந்தபுரம்: மண்டல பூஜை- மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு இணையவழியில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது என திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது. அது போல் பக்தர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டமும் இன்று தொடங்குகிறது.
இந்த ஆண்டுக்கான சபரிமலை சீசன் வரும் நவம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மகரவிளக்கு பூஜை என 62 நாட்கள் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.

இந்த சீசனில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.
தினமும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் மூலமும் ஐயனை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அத்துடன் பக்தர்களுக்கான விபத்து இன்சூரன்ஸ் திட்டம், கடந்த ஆண்டு 4 மாவட்டங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இன்று கேரளாவில் எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் ரூ 5 லட்சம் காப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சபரிமலையில் பணியாற்றும் தேவஸ்வம்போர்டு நிரந்தர மற்றும் ஒப்பந்த கூலி தொழிலாளர்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை பயணத்தில் மரணமடையும் பக்தர்களின் உடலை கேரளாவுக்குள் கொண்டு செல்ல ரூ.30 ஆயிரமும், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல ரூ. 1 லட்சமும் ஆம்புலன்ஸ் கட்டண தொகையாக வழங்கப்படும்.
நிலக்கல் முதல் சன்னிதானம் வரை உள்ள பாதைகளில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தால் இதுவரை உதவித் தொகை ஏதும் வழங்கப்பட்டதில்லை. ஆனால் இந்த ஆண்டு மரணம் அடைபவர்களுக்கு ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இன்சூரன்ஸ் உதவித் தொகை கிடைக்க ஆன்லைன் புக்கிங் முன்பதிவு கூப்பன் பரிசீலிக்கப்படும் என்பதால் அனைத்து பக்தர்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications