பல்லி விழும் பலன்கள்: அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? கெளளி சாஸ்திரம் சொல்லும் ரகசியங்கள்!
Palli Vizhum Palangal: சிலருக்கு பல்லியை பார்த்தாலே பயம் ஏற்படும். குறிப்பாக பெண்கள் பலர், பல்லியை விரட்டும் வரை அச்சத்துடன் இருப்பார்கள். ஆனால் நம் வீடுகளில் நம்முடன் வாழும் உயிரினங்களில் ஒன்றாக பல்லியும் இருக்கிறது. சுவர்களில் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகள், சில நேரங்களில் எதிர்பாராத விதமாக மனிதர்களின் உடலிலும் விழுவதும் உண்டு.
பழங்கால ஜோதிட நம்பிக்கைகளின்படி, பல்லி என்பது கேது கிரகத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அதனால் பல்லி கத்துவது, உடலில் விழுவது போன்ற நிகழ்வுகளுக்கு தனிப்பட்ட பலன்கள் கூறப்பட்டுள்ளன. இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவானதே கெளளி சாஸ்திரம். அந்த வகையில், எந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

தலையில் பல்லி விழுந்தால்
ஒருவரின் தலையின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் மனக்கவலை அல்லது கலக்கம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. வலது பகுதியில் விழுந்தால் துன்பகரமான சம்பவங்கள் நிகழலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஆனால் தலைமுடியில் மட்டும் விழுந்தால் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
முகத்தில் பல்லி விழுந்தால்
நெற்றியில் பல்லி விழுவது மிகவும் சுபமானதாக கருதப்படுகிறது. இது செல்வ வளமும், புகழும் அதிகரிக்கும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. புருவத்தில் விழுந்தால் செல்வந்தர்களின் ஆதரவு கிடைக்கும். கன்னம் அல்லது கண்களில் விழுந்தால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். முகத்தில் விழுந்தால் உறவினர்களின் வருகை ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
காதில் பல்லி விழுந்தால்
இடது காதில் விழுந்தால் லாபம் கிடைக்கும். வலது காதில் விழுந்தால் ஆயுள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
தோள் மற்றும் கைகளில் பல்லி விழுந்தால்
இடது அல்லது வலது தோளில் பல்லி விழுந்தாலும் வெற்றி மற்றும் முன்னேற்றம் கிடைக்கும். இடது கையில் விழுந்தால் மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வலது கையில் விழுந்தால் சில சிரமங்கள் ஏற்படலாம். மணிக்கட்டில் விழுந்தால் உடல்நலத்தில் கவனம் தேவைப்படும்.
மார்பில் பல்லி விழுந்தால்
மார்புப் பகுதியில் பல்லி விழுவது லாபம், சுப நிகழ்வுகள் மற்றும் குடும்ப மகிழ்ச்சியை குறிக்கும் என்று கூறப்படுகிறது.
காலில் பல்லி விழுந்தால்
கால் பாதத்தில் பல்லி விழுந்தால் விரைவில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். வெளிநாடு அல்லது தூரப்பயண யோகம் கூட அமையலாம்.
பிறப்புறுப்பு அல்லது பிருஷ்டத்தில் விழுந்தால்
பிறப்புறுப்பு பகுதியில் பல்லி விழுந்தால் பணக்கஷ்டம் அல்லது மனவருத்தம் ஏற்படலாம் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில் பிருஷ்டத்தில் விழுந்தால் பணவரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தொப்புளில் விழுந்தால்
தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலை உயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் அல்லது பரிசுகள் கிடைக்கும் யோகம் உண்டாகும்.
தொடையில் விழுந்தால்
தொடையில் பல்லி விழுந்தால் பெற்றோருக்கு மனவருத்தம் அல்லது குடும்பத்தில் சிறிய கவலைகள் ஏற்படக்கூடும் என சாஸ்திரம் குறிப்பிடுகிறது.


Click it and Unblock the Notifications
