சனிப்பெயர்ச்சி! கும்ப ராசி டூ மீனத்திற்கு இடம் பெயர்ந்தார்! பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் எவை?

Subscribe to Oneindia Tamil

காரைக்கால்: புதுவை அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக தொடங்கியது. சனிப் பெயர்ச்சியையொட்டி இன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. அது போல் எந்தெந்த ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டியவை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

வாக்கிய பஞ்சாங்கப்படி, இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனீஸ்வரர் இடம் பெயர்ந்தார். இதையொட்டி சனீஸ்வரர் கோயிலில் சிறப்பு தீபாராதனை தொடங்கியது.

sani peyarchi 2026 thirunallar 2026

கோவில் வளாகத்தைச் சுற்றி 15 சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.300, ரூ.600 மற்றும் ரூ.1,000 மதிப்பிலான சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. போலி டிக்கெட்டுகளைத் தவிர்க்க 'ஹாலோகிராம்' ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பக்தர்கள் முதலில் நளன் குளத்தில் புனித நீராடுவது வழக்கம். இதற்காகக் குளத்தில் புதிய நீர் நிரப்பப்பட்டுத் தயார் நிலையில் உள்ளது. குளத்தில் சோப்பு அல்லது ஷாம்பு பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குளத்தைச் சுற்றிப் போதுமான பாதுகாப்பு வேலிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே விழுப்புரம்- நாகை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி ரயில் எண் 06133 என்ற எண்ணில் இயக்கப்படும் MEMU சிறப்பு ரயில் இன்றும் நாளையும் இரு நாட்களுக்கு விழுப்பரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் அதே நாளில் மதியம் 1.05 மணிக்கு நாகை சென்றடையும். இந்த சேவை இரு நாட்களுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல் ரயில் எண் 06134 என்ற எண்ணில் இயக்கப்படும் சிறப்பு ரயில் நாகை ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இந்த ரயிலும் இரு சுற்றுப்பயணங்களாக இயக்கப்படும்.

இந்த ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இருக்கும். பயணிகளின் வசதிக்காக பல்வேறு நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், கடலூர் போர்ட், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால் மற்றும் நாகூர் உள்ளிட்ட நிலையங்களில் நிறுத்தம் பெற்று இறுதியாக நாகப்பட்டினம் சென்றடையும்.

அது போல் நாகையில் இருந்து புறப்படும் மறுமார்க்க ரயில் மேற்கண்ட ரயில் நிலையங்கள் வழியாக வந்து விழுப்புரத்தை அடையும். பக்தர்கள் நீண்ட நேரம் வெயிலில் நிற்பதால் அதன் தாக்கம் ஏற்படாமல் இருக்க மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே குடிநீர், அன்னதானம், பிஸ்கெட் உள்ளிட்டவை கோயில் சார்பில் வழங்கப்படுகிறது.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி பகவான் தனது ராசியை மாற்றுவார். இவர் மீண்டும் அதே ராசிக்கு திரும்பி வர முப்பது ஆண்டுகள் ஆகும். கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்ந்துள்ளதால் தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம், சிம்மம் உள்ளிட்ட ராசியினர் பரிகாரங்கள் செய்து வழிப்பட வேண்டும் என்கிறார்கள். இந்த சனிப்பெயர்ச்சிக்காக போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+