Tirumala: திருப்பதியில் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள்! 10 மணிக்கு ரிலீஸான 10 நிமிடத்தில் மொத்தம் காலி! ஆல் ரெட்
திருப்பதி: திருமலை திருப்பதியில் அங்கபிரதட்சிணம் செய்ய வேண்டுதலா? அப்படியென்றால் வரும் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான முன்பதிவு டோக்கன்கள் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட்ட அடுத்த 10 ஆவது நிமிடங்கள் மொத்தம் தீர்ந்துவிட்டன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவர்கள் சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவைகள், திவ்ய தரிசனம், இலவச தரிசனம் ஆகிய முறைகளில் ஏழுமலையானை மனதார தரிசிக்கிறார்கள்.
ஜனவரி மாதம் வரை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. தற்போது பிப்ரவரி மாதத்திற்கான ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் இலவச அங்கப்பிரதட்சிணம் செய்வதற்கான டோக்கன்கள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது. அதன்படி காலை ஹைஸ்பீட் இன்டர்நெட்டுடன் அங்கப்பிரதட்சிணம் செய்ய போகும் நபர்களின் பெயர், வயது, பாலினம், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையின் எண்ணுடன் பக்தர்கள் தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் டிக்கெட் விற்பனை தொடங்கிய அடுத்த 10ஆவது நிமிடம் மொத்தம் விற்றுத் தீர்ந்துவிட்டது. வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்கள் அனைத்திலும் சிகப்பு கலர் இருக்கிறது. இன்று இந்த டிக்கெட் பெற முடியாதவர்கள் அடுத்த மாதம் வரை காத்திருங்கள். மார்ச் மாதத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
பொதுவாக திருமலை திருப்பதியில் அங்கப்பிரதட்சிணம் செய்ய பக்தர்கள் நேரிடையாக டிக்கெட் வாங்கினர். இதற்கு 2 அல்லது 3 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் எழுந்தது. இதனால் இணையதளம் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து நாட்களிலும் தலா 1500 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். வெள்ளிக்கிழமைகள் தவிர்த்து அனைத்து தினங்களும் வழங்கப்படும். அதாவது பெண்களுக்கு 750 , ஆண்களுக்கு 750 டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.
அங்கபிரதட்சிணம் என்பது ஒரு வகையான நேர்த்தி கடன். இதை உடலும் மனதும் ஒரு சேர வைத்து செய்தால் மட்டுமே செய்ய முடியும். 3 கி.மீ. தூரத்திற்கு கோயிலை சுற்றி வரும் நிகழ்வு இது. கர்ப்பிணிகள் அங்கப்பிரதட்சிணம் செய்யக் கூடாது. அங்கப்பிரதட்சிணம் செய்பவர்கள் அந்த சலுகையை பயன்படுத்தி சுவாமி தரிசனம் செய்ய முடியாது. அதற்கு அவர்கள் ரூ 300 தரிசன டிக்கெட்டோ அல்லது இலவச தரிசனத்திலோ தரிசனம் செய்ய வேண்டும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications