திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனம்! ஏழுமலையான் உங்களை அழைக்கிறாரா இல்லையா? 2 மணிக்கு தெரிந்துவிடும்
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் தரிசனத்திற்கு லக்கி டிப் முறையில் பதிவான டிக்கெட் முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகிறது.
வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 30-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வைணவ கோயில்களில் கொண்டாடப்படும் இந்த விழாவை காண பலரும் பல்வேறு பெருமாள் கோயில்களுக்கு செல்வர். அந்த வகையில் ஏழுமலையான் கோயிலிலும் வைகுண்ட துவார தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்கலாம். சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதால் டிசம்பர் 30, 31, ஜன.1 ஆகிய தேதிகளில் லக்கி டிப் முறையில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரிலீஸ் செய்வதாக அறிவித்தது.
அதன்படி நவம்பர் 27ஆம் தேதி காலை 10 மணி முதல் நேற்று வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் விண்டோ ஓபனில் இருந்தது. சுமார் 25 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கு 1.75 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் யாரெல்லாம் இந்த குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்த குலுக்கல் முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகிறது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு வரும் டிசம்பர் 30ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக ஜனவரி 8ம் தேதி வரை என மொத்தம் 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டும், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய 3 நாட்களுக்கு அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அறங்காவலர் குழுவில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.
இதற்காக இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க ஆன்லைனில் நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை நான்கு நாட்கள் பதிவு செய்யும் பக்தர்களுக்கு டிசம்பர் 2ம் தேதி ஆன்லைனில் எலக்ட்ரானிக் குலுக்கல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் டிசம்பர் 2ம் தேதி டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த டிக்கெட் பெறும் பக்தர்களுக்கு மட்டுமே இந்த 3 நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்து சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்படும். இந்த 3 நாட்கள் நேரடியாக இலவச தரிசனம் மற்றும் வேறு எந்த டிக்கெட்டுகளும் இருக்காது.
அதைத்தொடர்ந்து, ஜனவரி 2ம் தேதி முதல் 8ம் தேதி வரையில் 7 நாட்களுக்கு தினம் தோறும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு ரூ.300 சிறப்பு நுழைவது தரிசன டிக்கெட்களையும், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி டிக்கெட்டுகளை ஒரு நாளைக்கு ஆயிரம் டிக்கெட்டுகள் என ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வரும் டிசம்பர் 5ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு தினந்தோறும் ஆயிரம் டிக்கெட்டுகள் என டிசம்பர் 5ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இந்த டிக்கெட்களை பெறும் பக்தர்களுக்கு ஜெய பேரை ஜெயபேரி துவார பாலகர்கள் சன்னதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
மேலும் இந்த டிக்கெட்கள் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுவதும், திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்பட்டு வந்த டிக்கெட்டுகளும் முற்றிலும் இந்த நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு நிகழ்வு தரிசனங்களும், ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications