திண்டிவனம் அருகே 1200 ஆண்டுகள் பழமையான முருகன், விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு!
விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த மரக்காணம் வட்டம், பெருமுக்கல் அருகே உள்ள T. நல்லாளம் கிராமத்தில் அருகே 1200 வருடங்கள் பழமையான கொற்றவை, முருகன் மற்றும் விநாயகர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளன. அவை பல்லவர் கால சிற்பங்கள் என கூறப்படுகிறது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த ஸ்ரீதரும் இணைந்து திண்டிவனம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபொழுது, திரு.கிருஷ்ணமூர்த்தி என்பவர் அளித்த தகவலின் பெயரில் T . நல்லாளம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டிவனம் - மரக்காணம் சாலையில் பெருமுக்கலில் இருந்து தெற்கே 3 கி.மீ தொலைவில் அமைத்துள்ள T. நல்லாளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழமுக்கல் கிராமத்தில் மஞ்சள் பூசப்பட்ட நிலையில் வழிபாட்டில் ஒரு சிலை காணப்பட்டது. அதனைச் சுத்தம் செய்து பார்க்கையில் , அது பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை என்று கண்டறியப்பட்டது.
சுமார் 6 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாகக் கொற்றவை வடிக்கப்பட்டுள்ளது. அழகான மூன்றடுக்கு கரண்ட மகுடம் தலையை அலங்கரிக்க , வட்டமான முகத்தில் புண் சிரிப்புடன் தடித்த உதடுகளும், செவிகளில் பத்ர மற்றும் மகர குண்டலங்களும் அணிந்து கழுத்தில் சரப்பளியுடன் தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சியளிக்கிறார்.
எட்டு கரங்களில் தனது மேல் வலது கரம் பிரயோக சக்கரம் ஏந்தியும் ஏனைய வலது கரங்கள் முறையே போர்வாள் , அம்பு மற்றும் சர்ப்பம் ஏந்தியும், மேல் இடது கரத்தில் சங்கும் ஏனைய கைகள் முறையே மலர்மொட்டு, வில், கேடயம் ஏந்திய நிலையில் காட்டப்பட்டுள்ளது.
வழக்கமாகக் கொற்றவையின் இடையருகே இருபுறமும் காட்டப்படும் வீரர்கள் இச்சிற்பத்தில் காட்டப்படவில்லை. எனினும் இடதுபுறம் கிளி காட்டப்பட்டுள்ளது. எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறது.
இக்கொற்றவை சிற்பத்தில் காணப்படும் ஆயுதங்கள், ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தும் இதன் காலம் கி.பி 8-ம் நூற்றாண்டாகக் கருதலாம். மேலும் இக்கொற்றவைக்கு அருகே சிறிது தூரத்தில் இரண்டு பலகை சிற்பங்கள் மண்ணில் சாய்ந்து கிடப்பது கண்டறியப்பட்டு அதனைச் சுத்தம் செய்து பார்க்கையில், அவை இரண்டும் கொற்றவை சிற்ப அளவை ஒத்த பல்லவர் கால முருகர் மற்றும் விநாயகர் சிற்பம் என்று கண்டறியப்பட்டது.
முருகர் : அழகிய கரண்ட மகுடம் தலையை அலங்கரிக்க, ஒரு காதில் பத்திர குண்டலமும், மற்றொரு காதில் மகரகுண்டலமும், கழுத்தில் பட்டையான சரப்பளி மற்றும் இடையில் உதிரபந்தம் அணிந்து கம்பீரமாக யானை மீது அமர்ந்து இரண்டு கரங்களுடன் முருகன் காட்சி தருகிறார். தனது வலது கையில் வேலும், இடது கையை இடை மீது ஊரு முத்தரையிலும் வைத்துக் காட்சிதரும் முருகரின் இடது பக்கம் சேவல் கட்டப்பட்டுள்ளது இச்சிற்பத்தின் தனிச் சிறப்பு.
சேவலுடன் கூடிய பல்லவர் கால முருகர் சிற்பம் இதுவரை சொற்பமாகவே ஆவணம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது. ஆடை அணிகலன் மற்றும் சிறப்பமைதியை வைத்து இச்சிற்பம் 8 ம் நூற்றாண்டு என்று கருதலாம்.
இச்சிற்ப அளவை ஒத்த விநாயகர் சிற்பமும் இதனருகே காணக்கிடைக்கிறது. அழகிய மகுடம் தலையை அலங்கரிக்க, நீண்ட காதுமடல்களுடன் பருத்த வயிறும் கொண்டு காட்சி தரும் நிலையில் மேல் வலது கரத்தில் பரசும், மேல் இடது கரத்தில் பாசமும் காட்டப்பட்டுள்ளது. கீழ் இருக்கரங்களில் உள்ள ஆயுதங்கள் தெளிவாக தெரியவில்லை. பத்மாசன கோலத்தில் அமர்த்த நிலையில் , காலின் அருகே மூன்று பூத கணங்கள் காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் தனிச் சிறப்பு. இச்சிற்பமும் 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால சிற்பமாகும்.
மேலும் இச்சிற்பத்தின் அருகே உடைந்த நந்தி ஒன்றும் காணப்படுகிறது. இச்சிற்பங்களை வைத்துப் பார்க்கையில், இவ்விடத்தில் பிரம்மாண்டமான பல்லவர் கால கோவில் ஒன்று இருந்து அழிந்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது. காலத்தின் சாட்சியாய் வீற்றிருக்கும் 1200 வருடங்கள் பழமையான இச்சிற்பங்களை ஊர்மக்கள் ஒன்றுகூடி சுத்தம் செய்து வழிபாடு செய்துவந்தால் இவ்வூரின் தொன்மை காக்கப்படும்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications