ஆடுகள் 200 வெட்டி அண்டாவில் கறி விருந்து.. ஒரே நாளில் நடந்த 2 தேர் திருவிழா! நாமக்கல், தஞ்சை ஹேப்பி
தஞ்சாவூர்: சித்திரை மாதம் இன்று துவங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், தேர்த் திருவிழாக்களும் நடந்தன.. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடுகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. அதேபோல, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில், அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சாமி தரிசனம் செய்தனர். இதில் ஒரு சில கோயில் நிகழ்வுகளை பார்ப்போம்.
தமிழ் ஆண்டின் 12 மாதங்களில் முதல் மாதம் வருவது சித்திரை மாதம்.. வருடத்தின் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக உலகெங்கும் வாழும் தமிழரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல்நாளே அதிரடி
அதாவது, குரோதி வருடம் நிறைவடைந்து விசுவாவசு வருடம் ஆரம்பமாகி உளளது.. விசுவாவசு வருடத்தின் முதல் நாளான இன்று கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்திலுள்ள, திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவிலில் புத்தாண்டு தின கொண்டாட்டம் இன்று நடந்தது..
அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத தரிசனமும், அதைத்தொடர்ந்து காய்கனிகள் படைக்கப்பட்டு சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.. இரவு 8 மணி வரை சர்வ தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இன்றைய தினத்தையொட்டி பக்தர்களுக்கு கைநீட்டம் வழங்கப்படுகிறது தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக திருப்பதியில் இருந்து 7 ஆயிரம் லட்டுகள் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
திருச்செந்தூர் கோயில்
அதேபோல, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணி அளவில் விஸ்வரூப தரிசனமும், 6.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
அதேபோல, தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் இன்று காலையிலேயே குவிந்துவிட்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை மற்றும் நாழி கிணற்றில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள.
மலையை குடைந்து கோயில்
அதேபோல, நாமக்கல் மலையின் மேற்குப்புறத்தில், நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்ம சாமி திருக்கோயிலும் இன்று கூட்டம் வழிந்து நிறைந்தது.. இங்குதான், லட்சுமி நரசிம்மர் மூலவர் மலையைக்குடைந்து குடவரைக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு நேர் எதிர்புறத்தில் உள்ள அனுமான் கோயிலில், 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரும், அரங்கநாதர் கோயிலில் கார்க்கோடகன் என்ற பாம்பின்மீது ரங்கநாதர் அனந்த சயன நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடவமும் பங்குனி மாதத்தில், இந்த 3 கடவுள்களுக்கும் ஒரே நாளில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. அந்தவகையில், கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தேர்விழா துவங்கப்பட்டது.
இன்று கோட்டையிலுள்ள நரசிம்ம சுவாமி தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து நாமகிரித்தாயார் மற்றும் நரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. பிறகு, தேர் சக்கரங்களுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தஞ்சாவூர் 200 ஆடுகள்
அதேபோல, தஞ்சை மாவட்டம் சோழபுரத்தில் அருள்மிகு வீரனார் திருக்கோயில் அமைந்துள்ளது. 3 கரை சமுதாய மக்களுக்குச் சொந்தமான இந்த கோயிலில், 2 வருடங்களுக்கு ஒரு முறை கிடாவெட்டு திருவிழா நடைபெறும்.அந்தவகையில், வீரனாருக்காக நேர்ந்துவிடப்பட்ட 200 ஆடுகளை கோவில் வளாகத்தில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இரவு வெட்டப்பட்டது. பிறகு, 2000 கிலோ கறியை கமகமவென பெரிய அண்டாக்களில் சமைத்து, கறி சோறு வீரனாருக்குப் படையலிடப்பட்டது..
பிறகு, கறி சோறு கிராம மக்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்டது.கிடா விருந்தில் கோனூர் நாட்டைச் சுற்றியுள்ள 32 கிராமத்தைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் கலந்துகொண்டு வீரனாரை வழிபட்டு அசைவ உணவை சாப்பிட்டார்கள். நேற்று முன்தினம் நடந்த இந்த கிடாவெட்டு நிகழ்வும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications