நாளை புரட்டாசி 1! திருமலை திருப்பதியில் 3 கி.மீ. தூரத்திற்கு நீண்டு இருக்கும் பக்தர்கள் கூட்டம்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகிறார்கள். அதிலும் பண்டிகை, விடுமுறை, விழாக்காலங்கள், பிரம்மோற்சவங்களின் போது இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும்.

திருப்பதியில் நேற்றைய தினம் அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைதான் தெரிந்தது. பக்தர்களின் அதிக வருகையால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பின.
அது போல் தங்கும் அறைகளுக்கு வர சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள கிருஷ்ணதேஜா கெஸ்ட் அவுஸ் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் ரூ 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
நேற்றைய தினம் 80,735 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். 40,524 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை கணக்கிடப்பட்டது. அதன்படி ரூ 3.19 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
நாளை முதல் புரட்டாசி மாதம் பிறக்கிறது. பிரம்மோற்சவமும் தொடங்கவுள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கூட்டம் அலை மோத போகிறது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications