அடிக்கடி அடகு கடைக்குப் போகும் தங்க நகை.. என்ன செய்தால் எளிதில் மீட்கலாம்.. ஆன்மீக டிப்ஸ்
சென்னை: தங்க நகையோ, நிலம் சொத்துக்களோ அடகு வைத்த பொருட்களை எளிதில் மீட்கவும் மீண்டும் அடகுக்கு செல்லாமல் தடுக்கவும் எளிய பரிகார முறை ஒன்று உள்ளது. ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ள அந்த பரிகாரத்தை எந்த நாளில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தங்கத்தை இடுப்புக்கு கீழே அணிவதில்லை. காது, மூக்கு, கழுத்து என நகைகளை அணிவதன் மூலம் அது உடம்பில் உள்ள முக்கிய புள்ளிகளை தொடுவதன் மூலம் உடம்பில் தேஜஸ் அதிகரிக்கிறது. இதன் மூலம் தங்கம் அழகை தருவதோடு ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது என்பதை நமது முன்னோர்கள் உணர்ந்து ஆபரணங்களை அணியத் தொடங்கியுள்ளனர்.

தங்கம் எல்லோருக்கும் சேர்ந்து விடாது தங்கம் வாங்கவும் ஜாதகத்தில் கிரக அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். பொன்னவன் எனப்படும் குரு கிரகம் நன்றாக இருந்தால் மட்டுமே தங்கத்தை வாங்கவோ சேமிக்கவோ முடியும்.
தங்கத்தை விரும்பாக பெண்கள் இருக்கமாட்டார்கள். தங்கத்தின் மீதான ஆசையும் மோகமும் நாளுக்கு நாள் அதிகரிப்பதனால்தான் தினம் ஒரு நகைகக்கடைகள் நாடு முழுவதும் திறக்கப்படுகின்றன. தங்கத்தின் மீதான நமது ஆர்வம், 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தின்போது தொடங்கியதாக கூறப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் லக்னத்திலும் 4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் இருக்க வேண்டும். அதே போல 1,5,9 ஆகிய திரிகோண வீடுகளிலும் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவர்களின் வீடுகளில் தங்கம் நிரந்தரமாக இருக்கும். மறைவு ஸ்தானங்களில் இருக்கக் கூடாது.
இன்றைக்கு தங்கத்தை திரி புஷ்கர யோகங்கள் அமையும் நாட்களில் வாங்கினால் அடகு கடைக்கு போகாமல் தங்கும். திரி புஷ்கர யோக அமைப்பு ஞாயிறு செவ்வாய் சனி கிழமைகளில் துவிதியை சப்தமி துவாதசி திதிகளில் விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம்,கார்த்திகை, உத்திராடம், நட்சத்திரங்களில் அதாவது மேற்கண்ட கிழமைகள் திதிகள் நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து அமையும் நாட்கள் திரிபுஷ்கர யோகம் உள்ள நாட்கள் ஆகும். இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் அடகு கடைக்குப் போகாமல் வீட்டில் தங்கம் தங்கும்.
ஜாதகத்தில் குரு கிரகம் புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களின் சாரம் பெற்று இருந்தாலும் அடிக்கடி தங்கம் வாங்கும் யோகம் அந்த ஜாதகருக்கு உண்டு என பண்டைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஜென்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், லக்னத்திற்கு 5ஆம் வீட்டில் உள்ள கிரகம் லக்னத்திற்கு 2ஆம் வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது 2ஆம் வீட்டில் இருந்தாலோ அந்த ஜாதகர் தங்கம் அதிகம் வாங்குபவர்கவும், அந்த தங்கத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் எனவும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம்,ஹஸ்தம், அசுவினி,பூசம், அபிஜித்,ரோகிணி,உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி.
ஞாயிறு செவ்வாய் கிழமைகளில் மேஷம் விருச்சிகம் சிம்மம் லக்கினங்களில் மேலே சொல்லப்பட்ட நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் மிருகசிரீடம் ரேவதி சித்திரை அனுஷம் நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் வாங்க அதிர்ஷ்டம் தரும்.
சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம்,மிருகசிரீடம், ரேவதி, சித்திரை,அனுஷம்,ஹஸ்தம், அசுவினி,பூசம்,அபிஜித் நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திங்கள் வெள்ளி வியாழன் புதன் கிழமைகளில் சுப லக்கினங்களில் வாங்க நன்மை உண்டாகும். ஒருவேளை முதலீட்டிற்காக தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்தால் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.
ஒரு நபரின் ஜாதகத்தில் பாப கிரகமான ராகு, சுபகிரகமான சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களுக்கும் நட்பு பெற்ற வீட்டில் ராகு, சுக்கிரன் இணைந்து இருந்தாலோ அந்த ஜாதகருக்கு கூடுதல் வருமானம் மூலம் செல்வம், நகை சேமிப்பு பெருகும். ஒருவேளை முதலீட்டிற்காக தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்தால் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.
நம் அனைவருக்குமே வாழ்வில் ஏதாவது ஒரு சமயம் பண நெருக்கடியான நிலை உண்டாகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் நமக்கு தேவையான அளவு பணம் கிடைக்க நமக்கு சொந்தமான நகை, வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை அடகு வைத்து பணம் பெறுகிறோம். இப்படி அடகு வைத்து பணம் பெற்ற பலர் தங்களின் பரம்பரை சொத்தாக இருந்த மேற்கூறிய நகை, நிலம், வீடு போன்றவற்றை மீட்க முடியாமலே போன நிலை ஏற்பட்டிருக்கிறது.

அடகு வைக்கப்பட்ட உங்களின் சொந்த வீடு, நிலம், நகைகள் போன்றவற்றை சீக்கிரம் மீட்க ஒரு வெள்ளை தாளில் அடகு கடை அல்லது வங்கியின் பெயர் அடகு எண், அடகு வைத்த தேதி, அடகு பொருள் ஆகியவைகளை தெளிவாக எழுதி, பூஜை அறையில் காமாட்சி விளக்கேற்றி அதன் பாதத்தில் அடகு தகவல்கள் அடங்கிய அந்த காகித தாளை வைத்து வணங்கி விட்டு பிறகு பொருளின் பெயரை மட்டும் கூறி அதோடு "வர வர ஸ்வாகா" என்று 108 முறை உச்சரிக்கவும் உதாரணமாக "1 பவுன் சங்கலி அரை பவுன் கம்மல் வர வர ஸ்வாகா, 3 சென்ட் நிலம், 1 ஏக்கர் நிலம் வர வர ஸ்வாகா" என்று கூறி துதிக்க வேண்டும்.
இந்த பரிகார பூஜை செய்பவர் மாதத்தில் வரும் அவரின் பிறந்த நட்சத்திரம் அன்று தொடங்கி செய்து வர வேண்டும். பிறகு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6 முதல் 7 மணிக்குள் செய்ய வேண்டும். தங்களின் பிறந்த நட்சத்திரம் தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகார பூஜையை தொடங்க வேண்டும்.
மூன்று பௌர்ணமி தினத்தன்று நீங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் இருக்கும் பைரவர் சந்நிதியிலோ அல்லது பைரவர் கோயிலிலோ பைரவரை செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து, விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி பைரவரை மனமுருக வழிபட்டு வந்தால் உங்களின் செல்வ சேமிப்பு நிலை உயர்ந்து, கூடிய விரைவில் நீங்கள் அடகு வைத்த நகை, நிலம், வீடு, வாகனம் போன்ற எதையும் மீட்டுவிடலாம்.












Click it and Unblock the Notifications