ஆதார் கார்டு ரெடியா? சபரிமலையில் பக்தர்களுக்கு சிறப்பு வரவேற்பு.. இருமுடி பையில் இது மட்டும் வேணாமே
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல காலம் நாளை தொடங்குகிறது.. இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி சபரிமலையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் சில அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல காலம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இதனால், சபரிமலை வரும் பக்தர்களுக்காக பல்வேறு முன்னேற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் மேற்கோண்டு வருகிறது. சபரிமலை தரிசனத்திற்கு தினசரி ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. வரும் 30ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்து விட்டது.
இன்று நடை திறப்பு: இன்று நடை திறக்கப்படுவதைத் தொடர்ந்து உணவு, தங்குதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சபரிமலைக்கான முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இதன்வழியே தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் கடந்து செல்வார்கள்..
தமிழக - கேரள எல்லையான குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, எரிமேலி வழியாக பம்பைக்கு வாகனங்களில் செல்லலாம். மேலும் பாதயாத்திரையாக செல்பவர்கள் வண்டிப்பெரியாறில் இருந்து 14 கி.மீ.தூரம் உள்ள சத்திரத்தை அடைந்து அங்கிருந்து புல்மேடு வனப்பாதை வழியே 12 கி.மீ. நடந்து சென்றும் சன்னிதானத்தை அடையலாம்.
வனத்துறையினர்: இது வனப்பாதை என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 7 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செல்ல வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். இங்குள்ள நுழைவுப்பாதையில் பக்தர்கள் வரிசையாக செல்ல கம்புகள் கட்டி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளன... பிற்பகல் 2 மணிக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் இந்த பகுதிகளில் தங்க தற்காலிக பந்தல்கள் அதிகளவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, புல்மேடு வனப்பாதையின் தொடக்கப் பகுதியில் நுழைவாயில் அமைத்து பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.. காட்டு மரங்களின் இலைகளால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பு நுழைவுவாயிலும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் செய்து கொள்வதற்கான வசதியும், சன்னிதான தகவல்களை தெரிந்து கொள்வதற்கான தகவல் மையமும் இங்கு உள்ளது. சத்திரம் வனத்துறை பிரிவு அதிகாரி பி.பிரசாந்த் தலைமையில் 17 அலுவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேண்டுகோள்: இந்த பாதை அடர்வனப்பகுதி என்பதுடன் கடுமையான மேடு, பள்ளமாக இருக்கும் என்பதால், இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் உள்ளவர்கள் முடிந்தவரை இந்த பாதையை தவிர்ப்பதே நல்லது என்றும், 2 கி.மீ. இடைவெளியில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவச உதவிக்கு பக்தர்கள் 24 மணி நேரமும் 91884 07523 என்ற எண்ணில்தொடர்பு கொள்ளலாம்" என்றும் வனத்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இருமுடி கட்டில் சில பொருட்களை தவிர்க்க வேண்டும் என தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்திருந்தது.. காரணம், பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களில் பெரும் பகுதி வீணாக எரிக்கப்படுவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு விளக்கம் தந்திருந்தது.
இருமுடி கட்டு: அவையெல்லாம் பூஜை பொருட்களாக இருந்தாலும்கூட, தீயின் ஆபத்தை கருத்தில் கொண்டு அவற்றை எரிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டது. அதன்படி இருமுடியில் எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் எடுத்து செல்லக்கூடாத பொருட்கள் பன்னீர், ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் ஆகியவை ஆகும்.
அதேபோல, அரிசி, நெய் தேங்காய், வெல்லம், வாழைப்பழம், வெற்றிலை, அரிக்கா கொட்டை, நாணயங்கள் போன்றவை இருமுடிகட்டில் அனுமதிக்கப்பட்ட பொருட்கள் ஆகும்.
ஆதார் கார்டு: அதேபோல, பம்பை, எருமேலி, வண்டிப் பெரியார் ஆகிய இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 41 நாள் மண்டலகாலம் டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications