ஆடி அமாவாசை.. சொரிமுத்து அய்யனார் கோவிலில் 5 நாட்கள் தங்க அனுமதி.. எதற்கெல்லாம் அனுமதி இல்லை?
திருநெல்வேலி: ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் இன்று முதல் 5 நாட்களுக்கு தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16ஆம் தேதி நடைபெற உள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், சொரிமுத்து அய்யனார் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்துக்கும் காரையார் அணைக்கும் இடையே உள்ள அடர்ந்த காட்டில் முண்டந்துறை காப்புக் காட்டில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்துவார்கள். காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 15 நாட்கள் கொண்டாப்படும். ஆடி அமாவாசைக்கு 7 நாட்களுக்கு முன்பும், ஆடி அமாவாசைக்குப் பிறகு 7 நாட்களும் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக, ஆடி அமாவாசையிலிருந்து 7 நாட்களுக்குப் பிறகு, ஏராளமான பக்தர்கள் கோயிலில் கூடாரங்கள் அமைத்து தங்கள் பிரார்த்தனைகளைச் செய்வார்கள். இந்த நிலையில் முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வழிபட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் 13, 14 மற்றும் 19, 20 கோவிலில் தூய்மை பணி நடைபெறுவதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புலிகள் காப்பக துணை இயக்குநர் உத்தரவால் பக்தர்கள் தங்களது உடமைகளோடு 15 கி.மீ., துாரம் உள்ள மலையில் உள்ள கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. பேருந்தில் கனமான சாமான்கள் மற்றும் ஆடுகள், சேவல்களை கொண்டு செல்ல முடியாத நிலையும் உள்ளது.
புலிகள் காப்பக இணை இயக்குநரின் கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தனியார் வாகனங்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும், பக்தர்களை 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வழிபட அனுமதிக்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. பக்தர்கள் அனுமதிப்பது குறித்து புலிகள் வன காப்பகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தான் முடிவு செய்ய முடியும் அவர்களுக்குத்தான் அங்கு உள்ள நிலை தெரியும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் மனு குறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் நலன் கருதி பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் வனத்துறை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, நான்கு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமிரபரணி ஆறு மற்றும் அது உருவாகும் வனத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்ந்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்முறையில் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் முந்தைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி 5 நாட்கள் வரை வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்கும் குடில் அமைக்கும் பொருட்களை எடுத்து செல்ல 13ஆம் தேதி காலை 11 மணி வரை மட்டும் பாபநாசம் சோதனை சாவடியில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படும். அன்று காலை 11 மணிக்கு மேல் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் காரணத்தால் அரசு பஸ், தனியார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் பாபநாசம் சோதனை சாவடியில் அனுமதிக்கப்பட மாட்டாது.
14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் மட்டுமே கோவிலுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது. 18ஆம் தேதி குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும்.
தங்கும் குடில் பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு 18ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், 19ஆம் தேதி காலை 6 மணி முதல் காலை 11 மணி வரையிலும் பாபநாசம் கோவில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும். கீழே இறங்கும் பக்தர்களுக்காக அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும். 19ஆம் தேதி காலை 11 மணிக்கு பிறகு 21ஆம் தேதி வரை தூய்மை பணிகள் மற்றும் கோவில் உழவார பணி காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.
22ஆம் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி கோவிலுக்கு சென்று வரலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், கெமிக்கல் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள், மண்எண்ணெய், மாசு ஏற்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
மது, குட்கா உள்ளிட்டவற்றை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். கோவில் தவிர்த்த வனப்பகுதிக்குள்ளும், ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இல்லை. பொது இடங்களில் இயற்கை உபாதை கழிக்காமல் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 200 கழிவறைகளை மட்டுமே பயன்படுத்திட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications