அழகன் முருகனுக்கு ஆடிக்கிருத்திகை விழா.. தமிழகம் முழுவதும் முருகன் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்
மதுரை: ஆடிக்கிருத்திகை பண்டிகையை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் காவடி சுமந்தும் பால்குடங்கள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருத்தணி முருகன் கோவிலில் இன்று தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
சிவபெருமானின் அருளால் ஆடி கிருத்திகை தினத்தில் சூரனை அழிக்க முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தார். அந்தக் குழந்தைகளை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்தனர். கார்த்திகைப் பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் கார்த்திகை நட்சத்திரமாக மாறினார்கள். முருகக் கடவுளை ஆராதித்தவர்களுக்கு நட்சத்திரப் பட்டம் கிடைத்தது. அதுமட்டுமின்றி, கிருத்திகை நட்சத்திர நாளில், முருகப் பெருமானை வழிபடும் வழக்கமும் ஏற்பட்டது என விவரிக்கின்றன ஞானநூல்கள்.

இதன் காரணமாகத்தான், முருகக் கடவுளுக்கு 'ஆறு எண்' என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆறுமுகங்களைக் கொண்டிருக்கிறான் அழகுக் குமரன். அப்பன் சிவனாரின் மந்திரம் ஐந்தெழுந்து நமசிவாயம் எனில், மால் மருகனின் மந்திரம் ஆறெழுத்து 'சரவணபவ'. ஆறுமுகத்துடன் ஆறிரு கரங்கள் என்றும் காட்சி தருகிறான் கந்தவடிவேலன்.
சூரனை அழித்து, தேவர்களைக் காத்த ஆறுமுகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. மூன்று கிருத்திகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தை கிருத்திகை விசேஷம். அதேபோல், கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரமும் சிறப்பு வாய்ந்தது. இதேபோல, ஆடி மாதத்தில் வருகிற கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.
ஆடிக்கிருத்திகை தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். ஆடி அஸ்வினி தினத்தில் ஆடிக்கிருத்திகை விழா திருத்தணி முருகன் கோவிலில் கோலாகலமாக தொடங்கியது. இன்றைய தினம் ஆடிக்கிருத்திகை தினத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. பக்தர்கள் வருகையை முன்னிட்டு திருவள்ளுவர் மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை தினத்தன்று முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இன்று ஆடி மாத கார்த்திகை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆடி மாத கார்த்திகை தினத்தை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அதிகாலை 4மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து விளாபூஜை, சிறுகாலசந்தி பூஜை நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பொதுதரிசனம், சிறப்பு, கட்டணம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிநாதசுவாமி திருக்கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான, சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் கட்டுமலை கோவிலான இதில், 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம், மேலும் தந்தை சிவபெருமானுக்கே ஓம் எனும் பிரணவ மந்திரப்பொருளை குருவாக இருந்து உபதேசம் செய்து, சுவாமிக்கே நாதன் ஆனதால், இங்கே முருகப்பெருமான் சுவாமிநாத சுவாமி என போற்றப்படுகிறார்
ஆடி கிருத்திகை முன்னிட்டு மூலவர் சாமிநாத சாமி தங்க கவசம் வைரவேலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் சுவாமியை காண ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர் தொடர்ந்து இன்றிரவு திருக்கோயிலின் நேத்திரபுஷ்கரணி என்ற திருக்குளத்தில் தெப்போற்சவமும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், ஆறாம் படை வீடான பழமுதிர்சோலை முருகப்பெருமான் ஆலயங்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications