திருப்பதி ஏழுமலையான் கோவில் பட்ஜெட்விழா.. அதென்ன ஆனிவார ஆஸ்தானம்? இவ்வளவு விசேஷமா?
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானம் இன்று நடக்கிறது. ஆனிவார ஆஸ்தானத்தன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பழைய வரவு-செலவு கணக்கை முடித்து, புதிய வரவு-செலவு கணக்கு தொடங்கப்படுகிறது. ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி இன்றைய தினம் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன புண்ணிய காலம் என்றும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயன புண்ணிய காலம் என்றும் கூறப்படுகிறது. ஆடி முதல்நாள் தட்சிணயன புண்ணியாகாலம் பிறந்துள்ளது.

அந்தக் காலத்தில் ஹத்திராம்ஜி மடத்தின் மவுந்துகளிடம் கோவில் நிர்வாகம் இருந்தது. அவர்களிடம் இருந்து அனைத்து வரவு-செலவு கணக்குகள், இருப்புகள் மற்றும் நிர்வாகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் என்ற அமைப்பை உருவாக்கி பெற்றுக் கொண்ட நாளாகும்.
அதன் பிறகு திருப்பதி தேவஸ்தானத்தின் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்வது, அறங்காவலர் குழு அமைக்கப்பட்டதும் ஆண்டு பட்ஜெட் ஏப்ரல் மாதத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த ஆண்டு ஆனிவார ஆஸ்தானம் திருமலை ஏழுமலையான் கோவிலில் இன்று நடைபெறுகிறது. ஆனிவார ஆஸ்தானத்தன்று திருமலையில் உள்ள பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் வெள்ளித் தட்டுகளில் 6 பட்டு வஸ்திரங்களை வைத்து தலையில் சுமந்தபடி மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் பிரகாரத்தை வலம் வந்து மூலவர் ஏழுமலையானிடம் சமர்ப்பணம் செய்வார்கள். பிரதான அர்ச்சகர்களுக்கு பரிவட்டம் கட்டப்படுகிறது. அதில் 4 பட்டு வஸ்திரங்கள் மூலவர் ஏழுமலையானுக்கும், ஒரு பட்டு வஸ்திரம் உற்சவர் மலையப்பசாமிக்கும், மற்றொரு பட்டு வஸ்திரம் விஸ்வசேனருக்கும் அணிவித்து அலங்காரம் செய்கின்றனர்.
அர்ச்சகர்கள் கோவிலின் தங்க வாசலில் ஒரு தங்கத்தட்டில் சிறிதளவு அரிசியை பரப்பி, அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து 'நித்ய ஐஸ்வர்யோபவ' எனக்கூறி மூலவர் ஏழுமலையானை பிரார்த்தனை செய்வார்கள். அப்போது பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறப்படும். அந்தக் காணிக்கையை மூலவர் பாதத்தில் சமர்ப்பணம் செய்யப்படும். பின்னர் அந்தக் காணிக்கையை எடுத்து பிரதான உண்டியலில் செலுத்தி புதிய வரவு-செலவு கணக்கை தொடங்குகிறார்கள்.
அடுத்ததாக அர்ச்சகர்கள் பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமிகளின் வலது கரத்திலும் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சார்பாக கோவிலின் சாவியை கொடுப்பார்கள். அப்போது ஆரத்தி, சந்தனம், தீர்த்தம், சடாரி ஆகிய மரியாதைகளை செய்வார்கள். சாவி கொத்தை வாங்கி மூலவரின் பாதத்தில் வைத்து விடுவார்கள். பிறகு அந்தச் சாவியை எடுத்து மூலவரின் கதவை மூடுவதும், திறப்பதுமான நடவடிக்கையை மேற்கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை புஷ்ப பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. அத்துடன் ஆனி வார ஆஸ்தானம் முடிவடைகிறது. ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி இன்றைய தினம் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications