அமாவாசை நாளில் ஆடி பிறப்பு.. வீட்டு வாசலில் வேப்பிலை விளக்கேற்றுங்கள்.. குல தெய்வம் கூடவே இருக்கும்
சென்னை: ஆடி மாதம் அமாவாசை உடன் கூடி வருவது ரொம்பவே விசேஷமானது. ஆடி முதல் நாளும், கடைசி நாளும் அமாவாசையாக இருக்கிறது. உங்கள் வீட்டு குலதெய்வம் அம்மனாக இருந்தால் கட்டாயமாக ஆடி மாதம் உங்கள் வீட்டு வழக்குப்படி குலதெய்வ கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் விளக்கேற்றும் போது வேப்பிலையை அடியில் வைத்து விளக்கேற்றினால் குல தெய்வம் கூடவே இருக்குமாம்.
ஆடி பிறப்பு: தட்சிணாயன புண்ணியகாலமான ஆடி மாதம் பிறந்து விட்டது. வீட்டினை சுத்தம் செய்து வேப்பிலை, மாவிலை கொண்டு தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். இதனால் காற்றில் பரவும் கிருமிகள் வீட்டிற்குள் நுழையாது என்பது நம்முடைய நம்பிக்கை. வேப்பிலை, மஞ்சள் கலந்த தண்ணீரை வாசலில் தெளித்து தினமும் கோலம் போடுவது நன்மை தருவதோடு அன்னை மகாலட்சுமியின் அருள் நமக்கு எளிதில் கிடைக்கும்.

அம்மன் கோவில்களில் திருவிழா: இன்றைய தினம் திங்கட்கிழமை அமாவாசையோடு இந்த ஆடி 1 பிறந்து இருப்பதால் இந்த நாள் ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்த நாள். ஆடி மாதம் வந்து விட்டாலே தெருக்களில் இருக்கும் அம்மன் கோவில்களில் அம்மன் பாடல்கள் ஒலிக்க, அம்மனுக்கு காலையில் அபிஷேகங்கள் நடக்க, அம்மன் அலங்காரத்துடன் மனநிறைவோடு சந்தோஷத்தோடு இந்த மாதம் முழுவதும் நம்முடைய ஊர்களில் தங்கி அனைவருக்கும் அருளாசியை வழங்கி சந்தோஷமாக இருக்கப் போகின்றாள்.
வேப்பிலை வாசம்: நிலை வாசலில் கொஞ்சம் வேப்பிலையை சொருகி விடுங்கள். அதேபோல நிலை வாசலுக்கு கீழ் பக்கத்தில் ஒரு தாம்பூல தட்டில் இரண்டு அல்லது மூன்று இனுக்கு வேப்ப இலைகளை வைத்து அதன் மேலே மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த விளக்குக்கு பக்கத்தில் ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து விடுங்கள். ஒரு விளக்கு அல்லது இரண்டு விளக்கு உங்கள் விருப்பம் போல ஏற்றுங்கள். விளக்கை ஏற்றி வைத்துவிட்டு உங்கள் குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்துவிட்டு உங்கள் இஷ்ட தெய்வ அம்மனின் பெயரை மூன்று முறை உச்சரித்துவிட்டு, அந்த தெய்வங்கள் வீட்டிற்குள் வர வேண்டும் என்று மனம் உருகி நிலை வாசலில் பிரார்த்தனை செய்துவிட்டு, நீங்கள் வீட்டிற்குள் வந்து பூஜை அறையில் இருக்கும் விளக்கை ஏற்றி அம்பாளை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் அவ்வளவுதான்.
குலதெய்வ அருள்: இந்த ஆடி மாதம் முழுவதும் இந்த விளக்கை ஏற்றலாம் தவறு கிடையாது. முடியாதவர்கள் ஆடி முதல் நாள் காலையில் தவறாமல் இந்த விளக்கை ஏற்றுங்கள். பிறகு ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் காலையில் எழுந்து இப்படி நிலை வாசலில் விளக்கு ஏற்றி வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அம்மன் நம்முடைய வீட்டிற்கு வருகை தருவதற்கு இந்த விளக்கானது வழிவகுக்கும். அதேசமயம் ஆடி மாதம் குலதெய்வ வழிபாட்டிற்கும் மிக மிக உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வீட்டு குலதெய்வம் அம்மனாக இருந்தால் கட்டாயமாக ஆடி மாதம் உங்கள் வீட்டு வழக்குப்படி குலதெய்வ கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபாடு செய்ய வேண்டும். அதை மறக்கவே கூடாது.
எலுமிச்சம்பழம்: எல்லோர் வீட்டு வாசலிலும் வேப்பிலை வாசமும் எலுமிச்ச பழ வாசமும் அம்மனை வரவழைக்க வேண்டும். அந்த அளவிற்கு எப்போதும் நிலை வாசலில் ஒரு எலுமிச்சம் பழமும் வேப்பிலையும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழம் வாடாமல் இருக்கிறது என்னும் பட்சத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை 4 நாட்களுக்கு ஒரு முறை இந்த எலுமிச்சம் பழத்தை மாற்றினால் கூட போதும்.

துளசி இலை: வேப்பிலை மற்றும் துளசி இலைகளை வீட்டில் எப்பொழுதும் வளர்ப்பது அம்மனுடைய அருளை பெற்றுக் கொடுக்கும். இந்த வேப்பிலை மற்றும் துளசி செடிக்கு தினமும் மஞ்சள், குங்குமம் வைத்து மாலையில் விளக்கேற்றி வந்தால் குடும்பத்தில் நோய் நொடிகள் அண்டாது என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆடி மாதத்தில் விளக்கு ஏற்றும் பொழுது விளக்கிற்கு அடியில் கொஞ்சம் வேப்பிலைகளை வைத்து ஏற்றுங்கள். அது போல எல்லா விஷயங்களிலும் வேப்பிலைகளை பயன்படுத்துங்கள்.
வருமானம் பெருகும்: பீரோவில் பணம் வைக்கும் இடங்களில் கொஞ்சம் துளசி இலைகளையும் வேப்பிலைகளையும் போட்டு வையுங்கள். திடீரென வரக்கூடிய செலவுகளை விரைய கட்டுப்படுத்துவது, மருத்துவ செலவுகள், வாகன பராமரிப்பு செலவுகள் என்று அனாவசியமாக வரக்கூடிய வீண் விரயங்களை தடுத்து நிறுத்தி சுபச் செலவுகளை பெருக செய்யக் கூடிய சக்தி இந்த பொருட்களுக்கு உண்டு. தொழில், வியாபாரம் செய்யும் இடங்களில் பணம் வைக்கும் கல்லாப்பெட்டி அல்லது பீரோ போன்ற இடங்களில் சில துளசி இலைகளையும், ஒன்றிரண்டு வேப்பிலைகளையும் சேர்த்து வையுங்கள். வருமானம் அதிகரிப்பதோடு நோய் நொடிகளும் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வேப்பிலை வடிவத்தில் குல தெய்வம் கூடவே இருக்கும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications