சபரிமலையில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை.. ஐயப்பனுக்கு பூஜித்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரசி பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது. வியாழக்கிழமை அதிகாலை 5.40 மணிக்கு மேல் தந்திரி கண்டரு ராஜீவரரு தலைமையில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. நெற்கதிர் கட்டுகளுக்கு பூஜை செய்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும். அதன்படி திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்பேரில் நாளைய தினம் வியாழக்கிழமை நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

வியாழக்கிழமை அதிகாலை 5.40 மணி முதல் 6.15 மணி வரை தந்திரி கண்டரு ராஜீவரரு தலைமையில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதற்காக பாலக்காடு மற்றும் கொல்லம் மாவட்டங்களில் இருந்து நெற்கதிர் கட்டுகள் சன்னிதானத்திற்கு எடுத்து வரப்பட உள்ளன. அவ்வாறு எடுத்துவரப்படும் நெற்கதிர் கட்டுகளுக்கு பூஜை செய்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
நிறை புத்தரசி பூஜை விழாவிற்காக செட்டிகுளங்கரா கோயில் வளாகத்தில் உள்ள வயலில் இருந்து சபரிமலை நிறைபுத்தரி பூஜைக்காக நெல் பயிரிடப்பட்டிருந்தது இந்த நெற்கதிர்கள் இன்று அறுவடை செய்யப்பட்டுள்ளன. அறுவடை செய்த நெற்கதிர்கள் திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் அனந்தகோபன் சபரிமலை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் வழங்கப்பட்டு இந்த நெற் கதிர்கள் சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நெற்கதிர்கள் சபரிமலை ஐயப்பன் சன்னதியில் வைக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நாளைய தினம் பூஜைகள் நடத்தப்படுகிறது நாளைய தினம் நாள் முழுவதும் நெய்யபிஷேகம் அஸ்டாபிஷேகம் உஜபூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்களை வீடுகளில் வைத்து பாதுகாத்து வந்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், நோய் நொடிகள் அற்றுப்போகும் என்பது நம்பிக்கை. விவசாய அபிவிருத்திக்கும், அவர்களின் எதிர்கால சுபிட்சமான வாழ்க்கைக்கும் வேண்டி இந்த பூஜை நடைபெறுகிறது.
நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகளுக்கு பின் நாளைய தினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16ஆம் தேதி மாலையில் மீண்டும் திறக்கப்படும். 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெற்ற பின்னர் நடை அடைக்கப்படும். அதன்பிறகு ஓணம் பண்டிகையையொட்டி 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் போல தமிழ்நாட்டில் விவசாயம் செழித்து, வளம் பெருகுவதற்காக, ஆண்டுதோறும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில், நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும்.இதன்படி கன்னியாகுமரி பகவதியம்மன், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, திக்குறிச்சி மகாதேவர், நாகராஜா உள்ளிட்ட முக்கிய கோவில்களில், நிறை புத்தரிசி பூஜைகள் நடைபெற உள்ளது. திருக்கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான வயல்களில் இருந்து, நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, அவை, குமரி அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து, மேள- தாளங்கள் முழங்க, ஊர்வலமாக, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு, நெற்கதிர்கள் எடுத்து வரப்பட்டு பூஜை செய்யப்படும். அதன்பின், பக்தர்களுக்கு, அந்த நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. நிறை புத்தரிசி பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்களை வீட்டின் முன் கட்டி வைத்தால், வளம் செழிக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications