ஆடி மாத வாஸ்து நாள்.. பூமிநாதரை கும்பிட்டால் சொந்த வீடு கட்டும் யோகம் கை மேல் தேடி வரும்
மதுரை: மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். நல்ல மனை அமைவதும் அப்படித்தான். மனை வாஸ்துப்படி அமைய வேண்டும். கட்டிடம் கட்ட சரியான முறையில் வாஸ்து செய்ய வேண்டும். ஆடி மாதத்தில் வியாழக்கிழமை வாஸ்து நாளாக இன்று அமைந்துள்ளது. இந்த நாளில் பூமிநாதர் ஆலயத்தை பற்றியும், வாஸ்து தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் பற்றியும் பார்க்கலாம்.
பஞ்ச பூதங்கள்: கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்ல முறையில் கட்டடம் வளர்ச்சி பெறும். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யும் யோகமும் வரும்.

வாஸ்து நாள்: சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். இந்த நாட்களில் வாஸ்து பகவான் மூன்றே முக்கால் நாழிகை வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். அதாவது ஒன்றரை மணி நேரம் வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார். இந்த ஒன்றரை மணி நேரத்தில் முதல் 18 நிமிடங்கள் காலைக் கடன்களை முடித்து குளிப்பார். அடுத்த 18 நிமிடங்கள் பூஜை செய்வார். அதற்கு அடுத்த 18 நிமிடங்கள் சாப்பிடுவார். பின்னர் 18 நிமிடங்கள் வெற்றிலை பாக்குப் போடுவார். கடைசி 18 நிமிடங்கள் ஆட்சி செய்வார். இந்த நேரத்தில் பூமி பூஜை போட்டு வீடு கட்டத் தொடங்கினால், வேலைகள் வெகு சீக்கிரம் முடியும். இந்தத் தேதிகளில், கிழமைகள் மாறுபட்டு வந்தாலும், இந்தத் தேதிகள் மாறுவதில்லை. ஜூலை 27ஆம் தேதி வியாழக்கிழமை வாஸ்து நாள் இந்த நாளில் வாஸ்துபகவானை பூஜை செய்து வீடு கட்ட தொடங்கலாம்.
யார் இந்த வாஸ்து புருஷன்: நாம் கடை, மண்டபம், வீடு, பொது கட்டிடங்கள் மற்றும் ஆலயங்கள் கட்டும்போது சிலர் வாஸ்து சாஸ்திரம் பார்க்கின்றோம். சிலர் பார்க்காமலையே இறைவனை பிரார்த்தித்து கட்டிட பணிகளை துவங்குகின்றோம். ஆனால் யார் இந்த வாஸ்து புருஷன் என்று தெரியுமா. அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், "இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்," என்று கூறினர். மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும்.
வளம் தரும் வாஸ்து: வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்கள் மற்றும் வாஸ்து நேரங்களை அறிந்து, நம் வீட்டைக் காக்கும் தெய்வமான வாஸ்து பகவானை வாஸ்து நாளில் பூஜை செய்து விட்டு வீடு முதலான புதிய கட்டடங்களைக் கட்டத் துவங்க வேண்டும். அப்படி செய்யும் பொழுது மனைகளில் உள்ள குறைபாடுகள், தோஷங்களை நிவர்த்தி செய்யும் வகையில் வாஸ்து பகவானின் திருவருளை பெறலாம். வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார். இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம். ஆடி மாத வாஸ்து நாளில் பூஜை செய்து வீடு கட்ட தொடங்கினால் வைகாசி மாதத்தில் வளமாக கிரகப்பிரவேசம் செய்யலாம்.
தடைகளை நீக்கும் பூமிநாதர்: சிலர் சொந்தமாக இடம் வாங்கியும் வீடு கட்ட முடியாமல் இருப்பார்கள். தடைகளை நீக்கி சொந்த வீடு கடடும் யோகத்தை தருவார் பூமிநாதசுவாமி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது திருச்சுழி. பகவான் ஸ்ரீ ரமணர் பிறந்த வீட்டுக்கு மிகவும் அருகில் அதுவும் அமைந்து அருள்பாலிக்கும் பூமிநாத சுவாமி ஆலயம். மிக மிகப் பழமையானது. சுமார் 2,000 வருடப் பழைமை மிக்க இந்த ஆலயத்தில், சுயம்பு மூர்த்தமாக, லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் ஸ்ரீதிருமேனிநாதர். ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீமணக்கோலநாதர், ஸ்ரீகல்யாண சுந்தரர், ஸ்ரீதிருமேனிநாதர் என, நான்கு யுகங்களில் நான்கு திருநாமங்களுடன் காட்சி தந்து அருளினாராம் சிவபெருமான். தற்போது கலியுகத்தில், திருமேனிநாதராக அருள் பாலிக்கிறார்.
பூமாதேவி வழிபட்ட தலம்: பூமாதேவி, இங்கு வந்து சிவ பூஜை செய்து, தன் பாவங்களில் இருந்து நிவர்த்தி அடைந்தாள். எனவே, இங்கு வந்து ஈசனை வழிபடுவோருக்கு, ஏழேழு ஜென்மப் பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்! அதேபோல், திருமேனிநாதரை வழிபட்டால், நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீர்ந்து, நிம்மதியாக வாழலாம்; நிலத்தில் ஏதேனும் சிக்கல், விளைச்சல் குறைபாடு என இருந்தால், நிலத்தில் இருந்து மண் எடுத்து வந்து, சிவபெருமானின் சந்நிதியில் வைத்து வேண்டிக்கொண்டு பிறகு நிலத்தில் அந்த மண்ணைக் கலந்துவிட்டால், விவசாயம் செழிப்பதோடு, நிலம் தொடர்பான எல்லாப் பிரச்னைகளில் இருந்தும் விரைவில் விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வழக்குகள் தீரும்: இதே போல புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் உள்ளது. மகாவிஷ்ணு, பூமாதேவி வழிபட்ட இந்தத் தலம், வாஸ்துவிற்கு உரிய கோயிலாக போற்றப்படுகிறது. நிலம், வீடு, மனை உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் இருப்பவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்னை மற்றும் வழக்கு நிலுவையில் உள்ளோர் இங்கு வந்து வேண்டிக் கொள்ள அவை உடனடியாக நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
சொந்த வீடு யோகம்: சொந்த வீடு வேண்டும் என விரும்புவோர் இங்கு வேண்டிக் கொள்ள, விரைவிலேயே சொந்த வீடு அமையும் என்பதும் ஐதிகம். கர்ப்பகிரகத்தில் பூமிநாதர் 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாகக் காட்சி தருகிறார். பதினாறு செல்வங்கள் பெறவும், வீடு மனைகளில் யோகம் உண்டாகவும் இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு வாஸ்து நாளன்றும், இக்கோயிலில் விசேஷ ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.
சொந்த வீடு அமைய வேண்டிக் கொள்வோர், இங்கு வந்து சுவாமிக்கு பூஜை செய்து வைக்கப்பட்ட செங்கற்களை வாங்கிச் செல்கிறார்கள். அந்த செங்கலை வீட்டு பூஜையறையில் வைத்து, தொடர்ந்து பூமி நாதரை எண்ணி வழிபட்டு வந்தால், கூடிய விரைவிலேயே சொந்தமாக வீடு அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் தங்களது தொழில் சிறக்கவும் இங்கு வழிபடுகிறார்கள்.
வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்: கட்டி முடித்த வீட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டில் வாயிலாக சரி செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.
திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும். தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் கூறி வழிபட வாஸ்து தோஷம் நீங்கும்.
வீட்டில் வாஸ்து குறை நீக்கும் ஸ்லோகம்
ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:
வீட்டில் வாஸ்து குறை இருந்தால் இந்த மந்திரத்தை தினமும் 12 முறை உச்சரிக்க நலமுண்டாகும். வாஸ்து நாளில் வாஸ்து பகவானை வழிபடலாம் தோஷங்கள் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும்.
-
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட்












Click it and Unblock the Notifications