குரு பூர்ணிமா 2023: ஆனி பவுர்ணமியில் குருவுக்கு நன்றி சொல்லுங்கள்.. நல்லறிவு கிடைக்கும்
மதுரை: குருவிற்கு நன்றி செலுத்தும் வகையில் சிஷ்யன் அவர் பாதம் வணங்கி, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து அவரை வணங்கி துதிப்பதற்காக ஏற்பட்டதே குரு பூர்ணிமா. ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. நமது மனதில் இருந்த இருளை நீக்கி ஒளி கொடுத்த கடவுளான குருவை வணங்குவதற்காகவே குரு பூர்ணிமா கடைபிடிக்கப்படுகிறது. ஜூலை 3 ஆம் தேதி குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.
மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். பிறப்பை கொடுத்த தாய், வளர்த்தெடுக்கும் தந்தை, அறிவை கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தை பார்க்கலாம் என்பதற்காக தெய்வத்திற்கு முன் குருவை வைத்து இப்படி வரிசைப் படுத்தினார்கள். அப்பேற்பட்ட குருவை வணங்கும் விதமாக "குரு பூர்ணிமா" கொண்டாடப்படுகிறது. இப்படி குருவுக்கெல்லாம் குருவாக இருக்கும் வியாசர், தட்சிணா மூர்த்தி, முருகப் பெருமான் என குருக்களை வழிபடுவது வழக்கம்.

குரு பூர்ணிமா: சம்ஸ்கிருதத்தில் 'கு' என்றால் இருட்டு எனப் பொருள்.'ரு' என்றால் விரட்டுதல் எனப் பொருள்.அறியாமையாகிய இருட்டை விலக்கி ஞான ஒளியினை ஏற்படுத்துபவரே குருவாவார். ஒரு சிஷ்யனின் வாழ்க்கை பாதையை சீர் செய்து அவனுக்கு ஞான ஒளி ஏற்படுத்தி அவனை மோட்சம் பெரும் அளவிற்கு கொண்டு செல்பவர் குரு. வியாச பூர்ணிமா கொண்டாடப்படும் இந்நாளில் சன்னியாச ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள்.
வியாச பூர்ணிமா: 'வேத வியாசர்' எனப் போற்றப்பட்ட, ஸ்ரீ வியாச மஹரிஷி, பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர். வேதங்களை நான்காகப் பிரித்து, வகைப்படுத்தித் தொகுத்ததால், இவர் 'வேதவியாசர்' என்றழைக்கப்பட்டார். வேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரம்மசூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாசமஹரிஷி தம் திருவாக்கினால் அருள, விநாயகப் பெருமான் அதை எழுதியருளினார்.
ஆனி பவுர்ணமி: குரு பூர்ணிமா எனப்படும் வியாச பூர்ணிமாவானது சூரியன் ஆனி மாதத்தில் புதனின் மிதுனராசியிலும், சந்திரன் குருவின் தனுர் ராசியிலும் இருந்து சமசப்தமமாக பார்க்கும் காலமாகும். குருவிற்க்கும் வித்யாகாரகன் புதனுக்கும் சூரிய சந்திரர்கள் ஏற்படுத்தும் தொடர்பே குருபூர்ணிமாவாகும். இந்த நாளில் குருவிற்கு நன்றி செலுத்தும் வகையில் சிஷ்யன் அவர் பாதம் வணங்கி, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து அவரை வணங்கி துதிப்பதற்காக ஏற்பட்டதே குரு பூர்ணிமா.

நல்ல அறிவு கிடைக்கும்: வேத வியாசரை அறியாதவர் இல்லை. நான்கு வேதங்களை தொகுத்தவர். மகாபாரதத்தை எழுதியவர். அதில் ஒரு கதாபாத்திரமாக விளங்குபவர். ஸ்ரீமத் பாகவதம் உட்பட்ட 18 புராணங்களை எழுதியவர். பிரம்ம சூத்திரம் புனைந்தவர். இந்தகைய பெரியோனின் பிறந்த தினமே குரு பூர்ணிமா. இந்த நாளில் வேத வியாசருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. குரு பூர்ணிமா அன்றே வியாசர் பிரம்ம சூத்திரத்தை எழுதி முடித்தார். இந்த நாளில் பிரம்ம சூத்திரத்தை பாராயணம் செய்து வியாசரை வேண்டினால் இம்மையில் நல்லறிவு உண்டாகும்.
வேத வியாசர் ஆலயம்: சிறப்பு மிக்க வேதவியாசருக்கு சென்னை வியாசர்பாடியில் சூரிய ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ரவீஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி அமைந்துள்ளது. ஞாயிறு கிழமையான இன்றைய தினம் சூரியனின் நாளில் வியாச பூர்னிமா அமைந்துள்ள நிலையில் அருள்மிகு ரவீஸ்வரரையும் வேதவியாசரையும் வணங்க நலம் பல கிடைக்கும்.
குரு பூர்ணிமா தினத்தில் நமக்கு பாடம் கற்றுக் கொடுத்த குருவை நாம் மனதார நினைத்தலும், கோயிலுக்கு சென்று வணங்குவதும் நல்லது. தற்போது நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் தினம் போலவே குரு பகவானையும் வணங்குவது நல்லது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications