ஐப்பசி மாத அன்னாபிஷேகம் எப்போது? சிவனுக்கு சாத்தப்பட்ட அன்னத்தை உண்டால் என்ன பலன்?
சென்னை: ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி மற்ற மாதங்களை காட்டிலும் மிகவும் விசேஷமானது. இந்த பவுர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த ஐப்பசியில் பவுர்மணி எப்போது வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் வந்தாலே அடுத்தடுத்த விசேஷங்கள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கும். ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை மாதம் பிறந்தால் ஐயப்ப பக்தர்கள் விரதம், திருக்கார்த்திகை தீபம், மார்கழி மாதம் வந்துவிட்டால் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்டவை நடைபெறும்.

அந்த வகையில் ஐப்பசி அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமானது. மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும் சித்ரா பவுர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. அது போல் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
சிவன் கோயில்களில் தினந்தோறும் 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாத பவுர்ணமி அன்று நடக்கும் அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமானதாகும். இந்த அன்னாபிஷேகத்தை கண் குளிர பார்த்தவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பார்கள்.
அது போல் கோடி சிவலிங்கங்களை பார்த்த புண்ணியமும் கிடைக்கும். இந்த ஆண்டு ஐப்பசி அன்னாபிஷேகம் நவம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த நாளுடன் ஐப்பசி மாதம் முடிந்து அடுத்தது கார்த்திகை மாதம் தொடங்குகிறது.
நவம்பர் 15ஆம் தேதி அதிகாலை 3.53 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 3.42 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது. இந்த பவுர்ணமி தினத்தன்று அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரங்களும் இணைந்து வருகிறது.
இது போன்ற சிறப்பான நாளில் சிவன் கோயில்களில் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.லிங்கம் முழுவதும் அன்னம் சாத்தப்பட்டிருக்கும். இந்த அன்னத்தை சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும்.
வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சந்திர பகவானின் சாபம் நீங்கப்பட்ட நாளும் ஐப்பசி மாத பவுர்ணமிதான். இந்த நாளில்தான் சந்திரனுக்குரிய தானியமான அரிசியில் சிவனுக்கு அன்னமிட்டு அபிஷேகம் செய்தால் சந்திரனால் ஏற்படும் பாதிப்புகளும் நீங்கும். பிரதோஷத்திற்கு பால், இளநீர், தேன், தயிர் உள்ளிட்டவை வாங்கித் தருவது போல் அன்னாபிஷேகத்திற்கு அரிசி வாங்கிக் கொடுத்தால் நம் வீட்டில் உணவு தட்டுப்பாடு இருக்காது.
உங்கள் வீட்டில் சிவலிங்கம் இருந்தாலும் அந்த லிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யலாம். ஆனால் வீடுகளில் அன்னாபிஷேகம் செய்தால் அந்த அன்னமானது சிவலிங்கத்தில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே இருக்க வேண்டும். பிறகு அதை நீக்கிவிட்டு வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக உண்ணலாம்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications