ஐப்பசி பவுர்ணமி.. தமிழக சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம்..மறந்தும் இந்த தவறுகளை செய்யதீர்கள்!
சென்னை: அன்னதோஷத்தாலும் அன்ன துவேஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேக கோலத்தில் சிவ தரிசனம் செய்வது நல்லது. இதனால் அன்னதோஷம் நீங்குவதோடு உணவின் மீது வெறுப்படைய செய்யும் நோயான அன்னதுவேஷம் நீங்கும். அன்னதோஷம், அன்ன துவேஷத்தினால் பாதிக்கப்பட்டு சாப்பிட உணவு இல்லாமல் சிரமப்படுபவர்கள் ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானை தரிசனம் செய்வது மூலம் நன்மை ஏற்படும். பவுர்ணமி நாளில் நாம் மறந்தும் சில தவறுகளை செய்யக்கூடாது.
அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. உணவு இருந்தாலும் ஒரு வாய் கூட ஒழுங்காக சாப்பிட முடியாது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும். இதற்கு அன்னபூரணி விரதம் இருந்து பசியென்று வருவோர்க்கு சாப்பாடு தரவேண்டும்.
ஜோதிடத்தில் அன்னம் எனப்படும் உணவிற்கான காரக கிரகம் சந்திரன். அன்னை எனப்படும் மாத்ரு காரகனும் சந்திரனேதான். நமக்கெல்லாம் படியளக்கும் அன்னப்பூரனியான பார்வதியை வணங்க காரக கிரகமும் சந்திரனே. ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு சிறப்பு உண்டு. சிவ பெருமான் ஆலயங்களில் பவுர்ணமி நாளில் உணவு சமைத்து அபிஷேகம் செய்வார்கள். அன்னாபிஷேக கோலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் உணவு பஞ்சம் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஜோதிடத்தில் அன்னதோஷம்
அடிப்படை உணவின் காரகர் சந்திரன். சுவையான உணவுக்கு காரகர் சுக்கிரன். உணவினை குறிக்கும் போஜன ஸ்தானம் எனப்படுவது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவமான ரிஷபம் மற்றும் ஜாதக இரண்டாம் பாவமாகும். ரிஷபத்தில் சந்திரன் உச்சம் அடைகிறார். இது சுக்கிரனின் ஆட்சி வீடாகும். ரிஷபத்திலும் உணவை குறிக்கும் சந்திரனின் ஆட்சிவீடான கடகத்திலும் அசுப கிரகங்கள் நிற்க அஞ்சாமல் உணவுப்பொருட்களை வீணடிப்பார் இதனால் அன்னதோஷம் ஏற்படும். எந்த ராசி நேயர்களாக இருந்தாலும் சந்திராஷ்டம தினங்களில் சாப்பிடாமல் வீணடிப்பார். இதனாலும் அன்னதோஷம் ஏற்படும் எனவே உணவை வீணாக்காதீர்கள்.

உணவு தோஷம் யாரை பாதிக்கும்
பந்தியில் சாப்பிட உட்கார்ந்தவர்களை எழுப்புவதும் பாவமாகும். பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்குப் சாப்பிட எதுவும் கொடுக்காதவர்களையும். வயதானவர்களையும், கர்ப்பிணிகளையும் சாப்பிட விடாமல் தடுப்பவர்களையும் அன்னதோஷம் பீடிக்கும். தான் உண்டது போக ஏராளமான உணவு கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்களையும், உணவுகளை வீணாக்குபவர்களையும் அன்னதோஷம் பாதிக்கும். பெற்றவர்களுக்கு உணவு கொடுக்காதவர்களையும், பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களை அன்னதோஷம் பீடிக்கும்.

சிவபெருமானுக்கு அபிஷேகம்
அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்க்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற பச்சரிசி வாங்கி கோயிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்துபேருக்கு அன்னதானம் செய்யலாம். ஸ்ரீ அன்னபூரனியை வணங்கிவர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுபாடின்றி கிடைக்கும். சுக்கிரனின் அதிதேவதை மற்றும் சந்திர சகோதரியான தான்யலக்ஷமியை வணங்கிவர உணவு வீணாவது குறையும். அவரவர்கள் கிராம தேவதைக்கு பொங்கல் வைத்து வழிபட உணவு வீணாவது குறையும். ஸ்ரீரங்கநாதரை வணங்கிவர உணவு வீணாவது குறையும்.

ஐப்பசி 22ல் பவுர்ணமி அன்னாபிஷேகம்
நவம்பர் 8ஆம் தேதியன்று ஐப்பசி 22ஆம் தேதி பவுர்ணமி தினமாகும். இந்த நாளில் அனைத்து சிவ ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடக்கிறது. தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகமும் ஒன்று. இந்த நாளில் சிவபெருமானை தரிசிக்க அன்னாபிஷேகமும், அன்னதுவேஷமும் நீங்கும். தஞ்சாவூர் பெரியகோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் டன் சாதத்தால் அலங்கரித்து அந்த உணவை பிரசாதமாக கொடுப்பார்கள்.

தவறு செய்யதீர்கள்
நம்முடைய சமையல் அறையில் உணவு சமைக்கும் போது அரிசியை நாம் கழுவி சமைக்கும் போது அந்த அரிசியை கவனமாக சமைக்க வேண்டும். தண்ணீரில் அரிசியை வீணாக்க கூடாது. அதே போல சமைத்த உணவுகளை நாம் வீணாக கீழே கொட்டக்கூடாது. உணவு மீதமிருந்தால் அதை பறவைகள், விலங்குகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். அரிசியையோ, உணவையோ வீணாக கீழே சிந்தக்கூடாது. பவுர்ணமி நாளில் உணவு வீணாகாமல் இருந்தாலே நமது தலைமுறைக்கும் சாப்பிடும் உணவு குறைவின்றி கிடைக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications