Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயிர் காக்கும் ஆகாச கருடன்.. தீய சக்தியிடம் இருந்து காக்க தற்கொலை.. வீடு சுபிட்சமாக வாஸ்து டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகாச கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போன்றவை அணுகாது. அப்படி மீறி தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையப்போனால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காக்கும். ஆகாச கருடன் கிழங்கு வீட்டில் செழித்து வளர்ந்தால் வீடு சுபிட்சமடையும் என்பது நம்பிக்கை.

ஆகாசக் கிழங்கில் 16 வகைகள் உள்ளன. இதன் இலையும் கிழங்கும் நமக்கு பலன் தரக்கூடியன என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பவை மிகச் சிறப்பு வாய்ந்தவை. இவை அஷ்ட கர்மமான மாந்திரீக கர்மங்களுக்கு உதவும் என்கிறார்கள் ஜோதிடர்கள். இதற்கு சாகா மூலி என்ற பெயரும் உண்டு.

Akasa Garudan Kilangu benefits and Vastu tips Tamil

கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும். இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும். இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம்.

கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது. அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும். அவ்வளவு சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு. கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போன்றவை அணுகாது. அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.

வீட்டில் கட்டிப்போட்ட கிழங்கு அழுகிவிட்டால் அந்த கெட்ட சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து தனது உயிரை கொடுத்து விட்டது என்று அர்த்தம்.
இதனால் அந்த வீட்டில் இருப்போர் பல பிரச்சனைகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளலாம். பின்னர் அதற்குரிய பரிகாரங்கள் மேற்கொண்டு அல்லது பூஜைகள் செய்து விட்டு புதியதாக ஒரு கிழங்கை வாங்கி இதே போல் கட்டி வைத்து விடலாம்.

நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இம் மூலிகைகிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம்முன்னோர்கள் சூட்டினார்கள் என்பது சுவாரஸ்யம். பொதுவாக பூமியில் ஊர்ந்துசெல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்துசெல்வதை பார்த்தால் ஓடி ஒளிந்துகொள்ளும். அதே போன்று இக்கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்றுவிடும், ஓடிவிடும்.

இம் மூலிகை கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்கவிட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப்போலவே தோற்றம் தரும். ஆகாசகருடன் என்ற இம் மூலிகைக்கு மாபெரும் சக்தி உண்டு. "சாகா மூலி" என பெயரும் இதற்குண்டு. ஆம் இம் மூலிகை கிழங்கு சாகாது. இக்கிழங்கை ஒரு கயிற்றில்கட்டி தொங்கவிட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர்வாழும் சக்திகொண்டது. முளைவிட்டு கொடியாக படர்ந்துவிடும்.

இம் மூலிகைகிழங்கிற்கு சில அமானுஷ்யசக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும்தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர்வினைகளை ஈர்த்து தன்னைத்தானே அழித்து கொள்ளும் தன்மைகொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீயவிளைவுகளில் இருந்து காக்கப்படுவர்.

இந்தக் கிழங்கை நஞ்சு முறிவிற்காக கொடுப்பர். இதற்கு கொல்லன் கோவை, பேய்ச் சீந்தில் என்றும் அழைப்பர். இந்த ஆகாச கருடன் ஆகாய பூதத்தின் சக்தியை அதிகம் கொண்ட கிழங்காதலால் இதில் உயிர்ச்சக்தி அதிகம் உள்ளது. இந்தக் கிழங்கை நாம் படுக்கும் இடத்திலோ, பூஜை செய்யும் இடத்திலோ, அமர்ந்து வேலை செய்யும் இடத்திலோ கட்டி வைத்தால் நமது தலைக்கு அது ஆகாய பூதத்தின் சக்தியை கொடுத்து வரும். இதனால் நமது ஆயுள் பெருகும். ஞானமும் நம்மைத் தேடி வரும்.

பெரும்பாலான வீடுகளில் இந்த கிழங்கை திருஷ்டிக்காக வீடுகளில் கட்டி தொங்க விடுகின்றனர். வராந்தாவின் மேல் தளத்திலோ அல்லது நிலவரையின் நடுப்பகுதியிலோ இதனை கட்டி வைப்பதால் வீட்டிற்குள் எந்தவித விஷமுள்ள ஜந்துக்களும், சிறிய பூச்சிகளும் கூட வருவதில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதன் வாசம் அவைகளுக்கு பிடிப்பதில்லையாம். உங்கள் வீட்டில் எந்த வகையான விஷ பூச்சிகளும் வராமல் இருப்பதற்கு இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் வீட்டில் தீய சக்திகளன்றி நல்ல சக்திகள் இருக்குமேயானால் இந்த கிழங்கு முளைவிட்டு பசுமையான கொடிகளாக வளரக்கூடியது. மிகவும் அழகாக காட்சியளிக்கும். பசுமை தன்மை இருக்கும் வரை உங்கள் இல்லம் மகிழ்ச்சிகரமான இல்லமாக இருக்கும். வீட்டில் திருஷ்டி முழுவதும் கழிந்துவிடும். இல்லத்தில் பொன்னும் பொருளும் சேரும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+