Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்சய திருதியையில் கனகதாரா யாகம்..பொன்மழை பொழிய இதை செய்யுங்கள்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: அழகாபுரி, குபேரபுரி, ஐஸ்வர்யபுரி, ஆரோக்கியபுரி சம்பத்துபுரி, ஸ்வர்ணபுரி, சௌபாக்யபுரி என்று பல்வேறு வகையான பெயர்களில் பக்தர்கள் அழைத்து மகிழும் தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி குபேர கோவில் இது ஒரு ஆரோக்ய ஐஸ்வர்ய பீடமாகும். இங்கு அட்சய திருதியை நாளை முன்னிட்டு கனகதாரா யாகம் நடைபெற உள்ளது.

அட்சய திருதியை அற்புதமான நாள். இந்த நாளில் நாம் செல்வம் பெருக மகாலட்சுமியை நினைத்து கனகதாரா பாடல்கள் பாட வேண்டும். குபேரனை நினைத்து மனதார வணங்க வேண்டும். குபேர லட்சுமி அருளால் செல்வம் பெருக அன்றைய தினம் நிறைய தானங்கள் செய்ய வேண்டும்.

Akashya Trithiya : Kanakadhara yaham and lakshmi Gubera yagam

அட்சய திருதியையன்று செய்யக்குடிய சுபகாரியங்கள் அனைத்தும் மென்மேலும் வளர்ச்சியடையும். தகுதியான நபர்களுக்கு தான, தர்மம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. பசுமாட்டுக்குக் கைப்பிடி அளவு புல், வாழைப்பழம் கொடுப்பது மகாலட்சுமியின் திருவருளைப் பெற வழி வகுக்கும்.

அட்சய திருதியை நாளில் ஏழைப்பெண் ஒருத்தி இட்ட உலர்ந்த நெல்லிக்கனியைப் பார்த்து மகிழ்ந்த ஸ்ரீ ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினார். உடனே அவள் வீட்டில் பொன்மழை பொழிந்தது. குடிசை வீடு தங்கம் நிறைந்த வீடாக மாறியது. இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்தது அட்சய திருதியை நன்னாளில்தான்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் உலக மக்களின் நலன் கருதி வருகிற 22.04.2023 சனிக்கிழமை ஸ்ரீ ராஜமாதங்கி ஜெயந்தி, அன்னபூரணி ஜெயந்தி மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு சோளிங்கர் சாலையில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ மகாலட்சுமி குபேரன் கோவில்.

பொற்காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள், தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஹோமம், அன்னபூரணி ஹோமம், அஷ்ட லஷ்மி ஹோமம், சாம்ராஜ்ய லஷ்மி ஹோமம், மஹா லஷ்மி ஹோமத்துடன் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம் கனகதாரா ஹோமம் நடைபெறுகிறது.

அழகாபுரி, குபேரபுரி, ஐஸ்வர்யபுரி, ஆரோக்கியபுரி சம்பத்துபுரி, ஸ்வர்ணபுரி, சௌபாக்யபுரி என்று பல்வேறு வகையான பெயர்களில் பக்தர்கள் அழைத்து மகிழும் தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி குபேர கோவில் இது ஒரு ஆரோக்ய ஐஸ்வர்ய பீடமாகும். செல்வத்திற்காக ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரையும், குபேர சம்பத்திற்காக ஸ்ரீ லட்சுமி குபேரரையும் பிரதிஷ்டை செய்து சீரான செல்வம் நமக்கு வந்தடையவும், இழந்த செல்வத்தை மீட்கவும் தினசரி பூஜைகளும் யாகங்களும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நடைபெற்று வருகிறது.

இந்த ஹோமங்கள் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருப்பவருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில், முன்னேறவும், போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆனந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். மங்கையர்க்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும்.

யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும். 22.04.2023 சனிக்கிழமை சித்திரை 9ந் தேதி அட்சய திரிதியை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு கோ பூஜை, 7.30 மணிக்கு புண்ணியாவாசனம், யாகசாலை பூஜைகள், கும்ப அலங்காரம், கும்ப பூஜை நடைபெற்று மஹா கணபதி ஹோமத்துடன் சிறப்பு ஹோமங்கள் நோய்கள் நீங்கவும், ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி அருள் பெறவும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும் 11 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 12.00 மணிக்கு லக்ஷ்மி குபேரருக்கு மஹா திருமஞ்சனம் சிறப்பு அலங்கார மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து லக்ஷ்மி குபேரருக்கு பொற்காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள், தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இந்த நாளில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ராஜ தேவியாக விளங்கும் சாம்ராஜ்ய லக்ஷ்மியை வணங்கினால், வறுமை நீங்கும், குறையாத செல்வம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். அதனால் பக்தர்கள் அனைவரும் மேற்கண்ட வைபவத்தில் கலந்து கொண்டு திருவருளுடன் குருவருளையும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க செல்லும் அனைத்து பக்தர்களும், திருப்பதி செல்லும் முன் வாலாஜாபேட்டை - திருப்பதி மார்க்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆட்சிபுரிகின்ற லட்சுமி குபேரரை நீங்கள் வழிபட்டு திருப்பதி செல்வது மிகவும் மேலான பலன்களை தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+