Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புறம்போக்கு நிலம்.. சொத்தில் வில்லங்கம்.. பூர்வீக வீடு கைக்கு வரணுமா? பாசிடிவ் முடிவுக்கு பரிகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்து விவகாரம், நிலம், வீடு தொடர்பான விவகாரங்களில் சிக்கல்கள், இழுபறிகள், நீடித்து வந்தால், அவைகளுக்கு எளிய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.. போலி பத்திரங்கள், போதிய ஆவணங்கள் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும், பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.

பாடுபட்டு உழைத்த பணத்தில் வாங்கிய நிலம், வீடு மனையாகட்டும், அல்லது பூர்வீக சொத்துக்களாகும், அதில் சில சிக்கல்கள் எழுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.. குடும்ப உறவுகளையே சிதறடிக்கக்கூடிய அளவுக்கு சொத்து விவகாரங்கள் அமைந்துவிடுகின்றன.

spirituality alienated lands squatter land

சட்ட சிக்கல்கள்: அல்லது சட்ட சிக்கல்கள் நடந்து வரும்நிலையில், நீண்ட காலமாகவே அந்த சொத்துக்களை நம்மால் அனுபவிக்கவே முடியாமல் போய்விடும்.. அல்லது நிலம், வீடு தொடர்பாக வாங்கியிருக்கும் கடனையும் அடைக்க முடியாமல் போக வேண்டிய நிலைமை வரும்.

எப்போதுமே, ஒருவருக்கு ஆவணங்கள் தொடர்பான அனைத்தும் சுப பலனாக நடைபெற வேண்டுமானால், புதனும் மூன்றாமிடமும் வலிமை பெற வேண்டும் என்பார்கள்.. ஆனால், மூன்றாமிடமும் புதனும் வலிமை குறைந்து ராகு/கேதுக்களின் சம்பந்தம் பெறும் போது ஆவணங்களால் ஏற்படும் அசுப பலன்கள், மன உளைச்சலை தந்துவிடக்கூடும்..

பாகப்பிரிவினை : குறிப்பாக, ஜாதகத்தில் புதனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு பூர்வீக சொத்தின் மூலம் கையெழுத்து மாற்றம், சர்வே எண் திருத்தம், எல்லைத் தகராறு, முறையற்ற பாகப்பிரிவினை போன்ற சொத்து தொடர்பான ஆவணங்களால் தீராத , தீர்க்க முடியாத மன உளைச்சலை ஏற்படுத்திவிடும்..

இதுமட்டுமல்லாமல், போலி பத்திரங்கள் தயாரித்து விற்பவர்களிடம் சொத்தை வாங்கி ஏமாறுவது அல்லது புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவது, என பலவித மோசடிகளுக்குள் சிக்கிவிட நேரிடும். இதுபோன்ற சொத்து விவாகரத்துக்கெல்லாம், எளிய பரிகாரங்களை முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

உதாரணத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் அவதிப்பட நேர்ந்தால், சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையான சனி ஓரையில் 21 பேருக்கு இட்லியுடன், எள் சட்னி தண்ணீருடன், 48 வாரங்கள் தானம் தந்து வரவேண்டும். அதேபோல, செவ்வாய் காலை 6 மணி முதல் 7 மணி வரையான செவ்வாய் ஓரையில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து (27 எண்ணம்) 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 48 வாரம் வழிபட்டு வர வேண்டுமாம்.

நவராத்திரி: நீண்ட காலமாகவே சொத்து பிரச்சனை இழுபறியாக இருந்தால், நவராத்திரியின் முதல் நாளிலிருந்து, 9 நாட்களுக்கும் துர்கை அம்மனை வழிபடலாம்.. அதேபோல, உங்கள் குலதெய்வத்தை விடாமல் வணங்கி வருவதுடன், கருப்பு சாமி, அய்யனார் போன்ற காவல் தெய்வங்களையும் வணங்கி வரவேண்டும்.

சொத்து கடனால் வங்கியால் சட்டச்சிக்கலை சந்தித்து வருபவர்கள், தங்கள் பிரச்சினை தீரும் வரை, தினமும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான பிரதோஷ வேளையில் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட்டு வந்தால் சட்ட சிக்கல் தீர்வதுடன், பொருளாதார நிலையும் மேம்படும் என்பார்கள்.

நிலத்தகராறு: நிலத்தகராறு, சொத்து பிரச்சனைகள் தொடர்ந்து வரும்பட்சத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் பசுவிற்கு, உங்கள் கையாலேயே ஊட்டிவிட வேண்டும்.. பிறகு பசுவை வணங்கிவிட்டு வந்துவிட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவரும்போது, நில சொத்து தகராறு விரைவில் தீரும். அதேபோல, வெள்ளிக்கிழமைகளில் அன்னதானம் செய்வதாலும், தர்மம் செய்வதாலும், தட்சணை கொடுப்பாலும், சொத்து சார்ந்த பிரச்சனைகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+