எம்ஜிஆருக்கு சிங்கம்! ரஜினிக்கு பாம்பு! யோகிபாபுவுக்கு பன்றி! யோகத்தை அள்ளித் தரும் கரண வழிபாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்ஜிஆர் முதல் யோகிபாபு வரை தங்கள் படங்களில் விலங்குகளுடன் நடிப்பதற்கு கரண வழிபாடுதான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் கரண வழிபாட்டுக்கும் ஜாதகத்திற்கும் தொடர்பு உள்ளது என்கிறார்கள்.

பொதுவாக ஒரு சொலவடை உள்ளது. அதாவது கரணம் தப்பினால் மரணம் என்பார்கள். இது ஏதோ ரைமிங்காக, எதுகை மோனையுடன் சொல்லப்படுவது என நீங்கள் நினைத்துக் கொள்ளாதீர்கள்.

spirtuality karana vazhipaadu

ஜோதிட சாஸ்திரத்தில் முக்கியமானவை வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகியவை ஆகும். இந்த 5 அங்கங்களே பஞ்சாங்கம் ஆகும்.

திதியில் பாதி

இவற்றில் கரணம் திதியில் பாதியாகும். 30 திதிகளுக்கும் 60 கரணங்கள் வரும். அந்த வகையில் மொத்தம் 11 கரணங்கள் உள்ளன. அவற்றில் பத்திரை, சகுனி, நாகவம், கிம்ஸ்துக்ன உள்ளிட்டவை அசுப கரணங்களாகும்.

வணிசை

அது போல் வணிசை, சதுஷ்பாதமும் மத்திம சுபதன்மை கொண்டது. ஒரு உயிர் இயங்க காற்று எப்படி முக்கியமோ அது போல் கரணமும் முக்கியம் என்கிறார்கள். ஒவ்வொரு ஜாதகத்திற்கும் கரணநாதன்தான முக்கியம். அவர் பலம் பெற வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பதற்கு கரணம் சரியில்லை என்றால் மரணத்திற்கு சமமான கெட்ட சம்பவங்கள் நடைபெறும்.

கரணாதிபதி

கரணாதிபதியின் நிலையை பொறுத்து குணம், செயல்கள் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் மாறுபடும். ஜாதகருக்கு தெய்வ அருள் பெற கரண நாதனை வணங்க வேண்டும். அந்த கரணத்தில் தெய்வம், விலங்கு மற்றும் பறவைகளும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கரணநாதன்

இவற்றை வளர்ப்பதன் மூலம் கரண நாதனை வழிபாடு செய்ய முடியும் என்கிறார்கள். கரண நாதனை வழிபட்டால் வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிங்கத்தை வளர்த்தார்.

ரஜினியின் பாம்பு காட்சி

அது போல் நடிகர் ரஜினிகாந்தின் படங்களில் எல்லாம் பாம்பு காட்சிகள் அதிகம் வரும். சிவகார்த்திகேயன் வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஷேரு என்ற சிங்கக் குட்டியை தத்தெடுத்துள்ளார். அதாவது அதற்கான பராமரிப்பு செலவை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் சேதுபதி வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆதித்யா, ஆர்த்தி என்ற இரு வங்கத்து புலிகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதற்கான பராமரிப்பு செலவை அவரே ஏற்பார்.

விலங்குகள்

விலங்குகளை தத்தெடுத்து வளர்ப்பதற்கு கரணநாதன் வழிபாடுதான் காரணம் என்கிறார்கள். நடிகர் யோகிபாபுவும் பன்றி முகம் கொண்ட வாராஹி அம்மனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார். மேலும் பன்னிக்குட்டி என்ற படத்தில் பன்றியுடன் யோகிபாபு நடித்திருந்தார். அது போல் ரஜினிகாந்த் தம்பிக்கு எந்த ஊரு படம், அண்ணாமலை முதல் படையப்பா வரை பாம்பு சீன்களில் நடித்திருந்தார் என்கிறார்கள்.

அடிமைப் பெண் எம்ஜிஆர்

எம்ஜிஆரும் அடிமைப் பெண் திரைப்படத்தில் வரும் சிங்கத்தைத்தான் வளர்த்து வந்தாராம். இது போல் வளர்த்ததால்தான் எம்ஜிஆர் முதல்வரானார் என்கிறார்கள். பாம்புகளுடன் நடித்ததால்தான் ரஜினிகாந்த் இந்த வயதிலும் உச்ச நடிகராக வலம் வருகிறார். அது போல் விஜய் சேதுபதிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மவுசு கூடி வருகிறது. யோகிபாபுவுக்கும் நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன என்கிறார்கள்.

சிங்க முகம்

பவ கரணத்தில் பிறந்தால் சிங்க முகம் கொண்ட கடவுளை வணங்க வேண்டும். பாலவ கரணத்தில் பிறந்திருந்தால் புலி வாகனம் கொண்ட ஐயப்பனை வணங்கலாம். கவுலவ கரணத்தில் பிறந்திருந்தால் பன்றியை வணங்க வேண்டும்.

கரசை கரணம்

கரசை கரணத்தில் பிறந்திருந்தால் யானை வாகனம் கொண்டவர், இல்லாவிட்டால் விநாயகரை வழிபடலாம். வணிசை கரணம் என்றால் எருது, பத்திரை கரணம் என்றால் கோழி அல்லது சேவல், சகுனி கரணத்தில் காகம், சதுஷ்பாத கரணத்தில் நாய்,நாகவ கரணத்தில் பாம்பு, கிம்ஸ்துக்னம் கரணம் என்றால் புழு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட திரை நட்சத்திரங்கள் பிறந்த கரணத்திற்கான தெய்வத்தையும் வணங்குகிறார்கள். அதற்கான விலங்குகளையும் பராமரிக்கிறார்களாம். எனவே வாழ்வில் வளம் பெற உங்கள் ஜாதகத்தில் உள்ள கரணங்களை தெரிந்து கொண்டு கரண வழிபாடு செய்யுங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+