அமர்நாத் யாத்திரை.. பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் பயணம்.. ஹர ஹர மகாதேவ் என எதிரொலித்த முழக்கம்
ஸ்ரீநகர்: புனித அமர்நாத் யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பனிலிங்கத்தை தரிசிக்க செல்லும் சிவ பக்தர்களின் முதல் குழுவின் பயணத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். புனித பயணத்தை தொடங்கிய பக்தர்கள் எழுப்பிய ஹர ஹர மகாதேவா முழங்கம் எங்கும் எதிரொலித்தது.
புனித அமர்நாத் யாத்திரை இன்று முதல் தொடங்குகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்முவில் உள்ள பகவதி நகரில், அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கச் செல்லும் குழுவை அனுப்பி வைத்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.
தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோயில். குகைக்குள் 40 மீ உயரத்தில் உள்ள சிவலிங்கம் மூலம் இந்த குகை முக்கியத்துவம் பெறுகிறது. குகையின் மேற்கூரையில் இருந்து பனிக்கட்டி வடிந்ததால் உருவான ஸ்லாக்மைட் என அறிவியல் கூறினாலும், இந்துக்கள் இது லிங்க வடிவில் சிவபெருமான் இருப்பதாக உறுதியாக நம்புகின்றனர்.
மொத்தம் 62 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் தொடங்கியுள்ளது.
அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களின் வசதிக்காக ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அமர்நாத் யாத்திரை வழித்தடம், தட்பவெப்ப நிலை, ஆன்லைன் சேவை விபரங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன. 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், 75 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும், கர்ப்பிணி பெண்களும், ஏற்கனவே உடல் உபாதை கொண்டவர்களும் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள கூடாது.
யாத்ரீகர்கள் கண்டிப்பாக தங்கள் ஆதார் விபரங்களை கொண்டு வர வேண்டும். ஆபரேட்டர்களின் அறிவுறுத்தல் படி உடை, கம்பளி, காலனி உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும்.
தடைசெய்யப்பட்ட உணவுப் பட்டியலில் புலாவ், ப்ரைடு ரைஸ், பூரி, பாதுரா, பீட்சா, பர்கர், ஸ்டஃப்டு பராத்தா, தோசை, வறுத்த ரொட்டி, ஊறுகாய், சட்னி மற்றும் வறுத்த பப்பட் ஆகியவை அடங்கும். கூடுதலாக, சௌமைன் நூடுல்ஸ் அல்லது வறுத்த உணவுப் பொருட்களும் கூடுதலாக அனைத்து வகையான இனிப்பு பொருட்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை இன்று அதிகாலை தொடங்கியுள்ளது. அமர்நாத் யாத்திரையின் முதல்கட்டமாக, அடிப்படை முகாமிற்கு செல்லும் யாத்திரை இன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவால் இன்று அதிகாலை 4 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். யாத்ரீகர்கள் இன்று மாலையில், அடிப்படை முகாமை சென்றடைவார்கள். முகாமில் இருந்து நாளைக் காலை, அதாவது ஜூலை 1 முதல், இந்த இரண்டு அடிப்படை முகாம்களிலிருந்தும் பக்தர்கள் அமர்நாத் குகைக்குச் கால்நடையாக நடக்கத் தொடங்குவார்கள்.
அமர்நாத் யாத்திரை தொடங்கியவுடன், பகவதி நகரில் மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஜம்முவில் உள்ள யாத்ரி நிவாஸ் பேஸ்கேம்ப் பகவதி நகருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். யாத்ரீகர்கள் தங்கள் ஆவணங்கள், மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் அனுமதிச் சீட்டுகளை சரிபார்த்த பிறகு யாத்ரி நிவாஸுக்குள் நுழைந்தனர். யாத்ரி நிவாசில் இடம் கிடைக்காதவர்கள், வெளியில் உள்ள தனியார் ஓட்டலில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கினர்.
தினமும் 70 ஆயிரம் பயணிகளுக்கு தங்கும் வசதி மற்றும் உணவுக்கு பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், கடந்த ஆண்டு குகைக்கு அருகில் ஏற்பட்ட மேகவெடிப்பை கருத்தில் கொண்டு, இம்முறை புனித குகைக்கு அருகில் யாரும் இரவில் தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல, குகைக்கு அருகில் இருந்த கூடாரங்கள் மற்றும் லங்கர்களும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.
பயங்கரவாத அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, ஜம்மு முதல் காஷ்மீர் வரையிலும், சர்வதேச எல்லையில் இருந்து கட்டுப்பாடு கோடு வரையிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளனர். ஜூலை 1 முதல் 62 நாட்கள் நடைபெறும் இந்த அமர்நாத் யாத்திரையில் கலந்துக் கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப், ஜம்மு காஷ்மீர் போலீஸ், இந்திய ராணுவம் மற்றும் பிஎஸ்எஃப் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை முதன்முறையாக வெடிகுண்டு தடுப்பு நாய்ப் படையுடன், ஆளில்லா விமானப் பிரிவுகளும் யாத்திரை பாதையில் நிறுத்தப்படுகின்றன.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications