Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமலை திருப்பதியில் தித்திக்கும் லட்டு.. கோயில் தேவஸ்தானத்தில் பூந்தி மறைந்த கதை! அருமை பிரசாதம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் என்று சொன்னதுமே, தேவஸ்தானத்தின் பிரசாதமான லட்டுதான் நம்முடைய நினைவிற்கு வந்துபோவது மெகா சைஸ் லட்டுதான்.. திருப்பதி கோயிலுக்கு மட்டுமே உரித்தானது இந்த லட்டு.. இந்த பெயரில் வேறு யாருமே பயன்படுத்தவும் முடியாது.. இதுவும் தேவஸ்தானத்தின் மற்றொரு சிறப்பாகும்.. உலகப்புகழ்பெற்ற திருப்பதி லட்டு, முதன்முதலில் எப்படி அறிமுகமானது தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

கி.பி.830ம் வருடத்தில்தான் முதன்முதலாக பல்லவர் ஆட்சியில் ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டமே ஆரம்பிக்கப்பட்டதாம்.

Tirupati Devasthanam laddu

இதற்கு காரணம், அப்போது போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில், பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமானால், திருப்பதி மலையேறிதான் செல்ல வேண்டும்.. இதற்கு பல நாட்கள் ஆகும்...

திருமலை திருப்பதி

ஏழுமலையானை தரித்த பிறகும் சில நாட்கள் மலையிலேயே தங்கி ஓய்வு எடுத்துவிட்டுதான் ஊர் திரும்புவார்களாம்.. அப்படி அவர்கள் சொந்த ஊருக்கு வந்து சேரும்வரை, தேவையான உணவு அவர்களுக்கு கோயில் பிரசாதமாக வழங்கப்பட்டது. அப்போது இந்த பிரசாதத்துக்கு 'திருப்பொங்கம்' என்று பெயராம்.

பிறகு, கி.பி.1445ல் சுய்யம் என்ற தித்திப்பு பிரசாதத்தையும், 1455ல், பிரசாதமாக அப்பமும் தந்துள்ளனர்.. இது1460ல் வடையாக மாறியது. பிறகு 1468ல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547ல் மனோஹரம் என்ற இனிப்பு பலகாரம் வழங்கப்பட்டது.

1803ல் மதராஸ் மாகாணம் அமல்படுத்தியதுமே, பூந்தி பிரசாதமாக தரப்பட்டது.. இறுதியில், 1940 வருடம் முதல் பூந்திக்கு பதில் லட்டு விற்பனை அமலானது.. அப்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு லட்டு, எட்டு அனாவுக்கு விற்கப்பட்டதாம்.

தேவஸ்தானத்தில் மெகா சைஸ் லட்டு

இதற்கு காரணம் அதுவரை பிரசாதமாக வழங்கப்பட்டு வந்த அப்பம், வடை, அதிரசம், மனோகரம் போன்றவை அனைத்துமே விரைவில் கெட்டுப் போகக்கூடிய உணவுப்பொருளாகும்.. அதனால்தான் லட்டு கொண்டுவரப்பட்டது.

ஆனால், கடந்த 1803ம் ஆண்டு பிரசாதமாக பக்தர்களுக்கு பூந்தி தரப்பட்டாலும், முக்கியஸ்தரர்களுக்கு மட்டும் முழு லட்டாக தந்தார்களாம்.. பிறகு 1940ல்தான். அனைவருக்குமே லட்டு வழங்கப்பட்டது.

லட்டு, பூந்தி தயாரிப்பு

ஏழுமலையானுக்கு பிரசாதம் தயாரித்து, பூஜை செய்து வந்தவர்கள் கல்யாணம் ஐய்யங்கார் குடும்பத்தினர் ஆவர்.. பூந்தியை லட்டாக மாற்றம் செய்து பிரசாதமாக தந்ததும் லட்டு சாம்ராஜ்ஜியத்தை' உருவாக்கிய கல்யாணம் ஐயங்கார்தானாம்..

லட்டு தயாரிக்க மிராசிதாரி முறையை இவர் அறிமுகப்படுத்தினார். சமையலறையில் லட்டு தயார் செய்பவர்கள் கேமர் மிராசிதர்கள் என்று அழைக்கப்பட்டனர். 2001ம் ஆண்டு வரை மிராசிதர்கள் லட்டுகளை தயாரித்து புண்ணியத்தை அனுபவித்தனர். ஒவ்வொரு 51 லட்டுகளிலும் 11 மிராசி பிராமண குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது, பிறகு லட்டு தயாரிப்பு 1966ம் ஆண்டிலிருந்து தேவஸ்தானம் கைக்கு மாறியதாம்.

திகைப்பில் பக்தர்கள்

தேவஸ்தானத்தின் சார்பில் பிரத்யேகமாக இதற்கனவே அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்களில், ரூ.10, ரூ.50, ரூ.200 ஆகிய கட்டணம் செலுத்தி பக்தர்கள் லட்டு வாங்கி செல்வது வழக்கம்.

திருப்பதி லட்டுகளின் ஸ்பெஷாலிட்டியே அதன் மிகப்பெரிய சைஸ்தான்.. ஒரு வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும் இந்த லட்டுகள், உயர் தரத்துடன் தயாரிக்கப்படுகிறது..

சுமார் 175 கிராம் எடை கொண்ட 5100 லட்டுகளை தயாரிக்க வேண்டுமானால் 185 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 160 கிலோ நெய், 30 கிலோ முந்திரி, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கல்கண்டு, 4 கிலோ ஏலக்காய் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.. அதனால்தான், உலக புகழ் பெற்ற திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+