சமையலறையில் கழுவாத பாத்திரத்தை போட்டு வைக்காதீங்க! ஸ்லாப் இப்படி இருக்கா? கடனிலிருந்து விடுபட டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்பத்தில் நாம் அறியாமல் செய்யும் பிழைகளே, கடன் பிரச்சனைகளும், இன்னல்களும் பெருகிவிட காரணம் என்கிறார்கள்.. அந்தவகையில், சின்ன சின்ன விஷயத்திலும் நாம் கவனம் செலுத்தினால், மிகப்பெரிய துயரத்திலிருந்து விடுபடலாம். ஒருசில டிப்ஸ்களை பார்ப்போம்.

எப்போதுமே சூரிய மறைவுக்கு பிறகு வீட்டைப் பெருக்குவது, துடைப்பது, தூங்குவது கூடாது.. சமையலறை, குளியலறை உட்பட வீட்டில் எங்கெல்லாம் குழாய்கள் உள்ளதோ, அதிலிருந்து தண்ணீர் சொட்டக்கூடாது.. குழாய்களில் நீர்சொட்டுவது, குடும்பத்தில் வறுமையை அதிகப்படுத்திவிடுமாம். எனவே, உடைந்த குழாய் என்றாலும் உடனே மாற்றிவிட வேண்டும்.

spirituality vastu tips kitchen slab

விஷ ஜந்துகள்: சுவற்றில் ஈரம் தங்கக்கூடாது.. வீடுகளில் ஒட்டடை சேர்ந்துவிடக்கூடாது.. பூரான் போன்ற விஷ ஜந்துகள் வீட்டில் உலவக்கூடாது.. எனவே எப்போதுமே வீட்டை சுத்தமாக ஈரமின்றி துடைத்திருக்க வேண்டும்.. உபயோகமில்லாத பொருட்களை வீட்டில் சேர்த்து வைக்கக்கூடாது.. அதிக நேரம் ஈரத்துணிகளை அப்படியே வைத்திருக்கக் கூடாது.

வீட்டில் அரிசி, பால், சர்க்கரை, பருப்பு, உப்பு போன்றவற்றை, முழுமையாக இல்லாமல் செய்யக்கூடாது. தீருவது போல இருந்தாலே, மீண்டும் வாங்கி வைத்துவிட வேண்டும். உணவுப் பொருட்களை வீணடிக்கக் கூடாது.. கீழே கொட்டவும் கூடாது.. வாசலில் செருப்பு, துடைப்பம் போன்றவற்றை அலங்கோலமாக போடக்கூடாது..

சமையல் பாத்திரம்: கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே கிச்சனில் இருக்கக்கூடாது. சப்பாத்தி கட்டையில், மாவு தேங்கி கிடந்தாலோ அல்லது ஒட்டிக்கிடந்தாலே, வீட்டிற்குள் பணம் வருவதில் சிக்கல் வரும்.. சப்பாத்தி கட்டையை தலைகீழாக வைக்கக்கூடாது... முக்கியமாக அரிசி, கோதுமை மாவு இருக்கும் பாத்திரங்களின் மீதும் வைக்கக்கூடாது, இது குடும்பத்தில் வறுமையை பீடிக்க செய்துவிடும்.

அதேபோல, கிச்சன் ஸ்லாப்பிலேயே சப்பாத்தியை திரட்டக்கூடாது. கிச்சன் ஸ்லாப் கிழக்கு நோக்கி இருந்தால், சப்பாத்தி மாவை கிச்சன் ஸ்லாப்பில் வைத்து திரட்டலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே, ஸ்லாப்கள் இருந்தாலும்கூட, அதன்மீது மரப்பலகையை வைத்து சப்பாத்தியை திரட்டுவது நல்லது.

நரசிம்மர்: இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவதால் வறுமையை விரட்டிவிடலாம்.. அத்துடன், கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி , திருமண தடை விலகி நன்மை பெறலாம். அதேபோல, வெள்ளிக்கிழமைகளில் முருகனுக்கு விளக்கேற்றி, செந்நிற மலர்கள் சூட்டி, கற்கண்டு நைவேத்தியம் செய்து, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, வழிபட்டு வந்தால பட்ட துயரெல்லாம் பஞ்சாய் பறந்தோடும்.

பைரவர்: கொடுத்த கடன் வசூல் ஆக வேண்டுமானால், பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால பலன் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+