48 நாட்களில் அதிசயம்.. இந்த பரிகாரத்தை வீட்டில் ட்ரை பண்ணுங்க.. தீராத கடனும் தீரும்! பணமும் கொட்டும்
சென்னை: குடும்பத்தில் எவ்வளவு சிக்கல் இருந்தாலும், கடனை மட்டும் வாங்கிவிட கூடாது என்பார்கள்.. அதிக வட்டிக்கு கடன் வாங்கி விட்டால், வட்டிக்கு குட்டி போட்டு, மன உளைச்சலை தந்துவிடும். அப்படியே கடன் அடைப்பதாக இருந்தாலும், அதற்கேற்ற வருமானமும் முக்கியம். அந்தவகையில், நிதி நெருக்கடியையும், கடன் தொல்லையையும் தீர்க்க எளிய பரிகாரங்கள் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதில் 2 எளிய பரிகாரங்களை பார்ப்போம்.
எந்த காரணத்திற்காக கடன் வாங்கினாலும், அது அடைய சனீஸ்வர பகவானின் அருள் அவசியமாகும்.. சனி பகவான் அனுக்ரகம் செய்தால்தான் கடனை முழுமையாக, விரைந்து அடைக்கமுடியும். கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும்.. அதிலும், ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடைபெறும் காலங்களில் கடன் வாங்காமல் இருப்பதே சிறப்பு.

தோரண கணபதி வழிபாடுகள்
தீராத கடன் பிரச்சனை இருந்தால், தோரண கணபதியை வழிபட்டு வரவேண்டுமாம்.. மயிலாடுதுறை, வாரணாசி, பிள்ளையார்பட்டி, சிருங்கேரி சாரதா பீடம் உள்ளிட்ட திருத்தலங்களில் தோரண கணபதி உள்ளதால், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், அந்த திருத்தலங்களுக்கு சென்று கணபதியை வணங்கி வரலாம். அல்லது தோரண கணபதியை நம்முடைய வீட்டிலேயே முறையாக வழிபடலாம். இதற்கு தோரண கணபதியின் புகைப்படத்துக்கு 2 கைப்பிடி அளவு பச்சரிசி, 2 கைப்பிடி வெல்லம் இரண்டையும் வாழை இலையில் வைத்து ஒன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும்.
தோரணம் கணபதியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக நைவேத்தியமாகப் படைத்துவிட்டு, நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். பிறகு, பிசைந்து வைத்திருக்கும் பச்சரிசியையும், வெல்லத்தையும் உங்கள் கைகளால் 3 உருண்டைகளை பிடித்து வாழையிலையில் வைத்து பிரார்த்திக்க வேண்டும். இந்த உருண்டைகளை ஜீவராசிகளுக்கு உணவாக வழங்கிவிடலாம்.
துளசி மாலை வழிபாடு
இந்த பரிகாரத்தை செவ்வாய், வெள்ளி நாட்களில், கடன் பிரச்சனை தீரும் வரை, செய்து வந்தால் நிதிப்பற்றாக்குறை விலகும். கடன் தொகையையும் அடைத்துவிடலாம்.
கடன்தொல்லை அதிகமாக இருந்தால், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பெருமாளை தரிசிக்கலாம்.. வீட்டின் பூஜை அறை அல்லது கோயில்களில் துளசி மாலையோடு பெருமாள், தாயாரை வழிபாடு செய்யும்போது, நிதி நெருக்கடியை சீராக்கும்.. செவ்வாய்க்கிழமைகளில் பெருமாள் வழிபாட்டை செய்து வருபவர்களுக்கு, பெரிய அளவில் இன்னல்கள், பணக்கஷ்டங்கள் வராது என்பார்கள்.
தேங்காய் சிரட்டை கரும்புச்சாறு
தேங்காய் சிரட்டையிலிருந்து நெருப்பு கங்கு தயார் செய்து கொண்டு, சுத்தமான வெறும் கரும்புச்சாறு அல்லது சுத்தமான தேன் ஊற்ற வேண்டும். இப்போது வெளிவரும் புகையில், ஒரேயொரு அல்லிப்பூவை காட்ட வேண்டும். இதில் அல்லிப்பூ வாடி வதங்கிவிடும்.. வாடிய பூவை, ஒரு பாட்டிலில் போட்டு, மூடி போடாமல், பூஜை அறை அல்லது பணப்பெட்டி வைக்கும் இடத்தில் வைத்துவிட்டால் போதும்.
தினமும் காலையில் எழுந்ததுமே, 48 நாட்களுக்கு தீபாராதனை காட்டி வரவேண்டும். மாதவிலக்கு தவிர மற்ற நாட்களில் இப்படி பூஜை செய்த பிறகு 48வது நாள் அல்லி மலரை ஓடும் நீரில் அல்லது மனிதர்கள் கால் படாத இடத்தில் போட்டுவிடலாம். இந்த பரிகாரம் பண வரவை பெருக்கக்கூடியது.. கடன் தொல்லை இருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications