Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பர்ஸில் ஏலக்காய் இருக்கா? பணம் வீட்டில் சேர 5 ஏலக்காய்கள் போதுமே.. ஏற்றம் தரும் சிம்பிள் பரிகாரங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடுபட்டு உழைத்து சம்பாதித்த பணம், கையில் சிறிதும் தங்காமல் போவதுண்டு.. இதனால் கழுத்தை நெரிக்கும் கடன்களும் அதிகமாகி விடுவதுண்டு. இந்த கடன் தொல்லையை தீர்ப்பதற்கும், குடும்பத்திலுள்ள நிதி நிலைமை சீராக்கவும், எளிய பரிகாரங்களை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். வீட்டிலுள்ள நிதி சிக்கல் தீர்ந்து, பணப்பிரச்சனை சீராக வேண்டுமானால், ஏலக்காய்களை வைத்து சில எளிய பரிகாரங்களை செய்யலாம். அந்தவகையில், ஏலக்காய் பரிகாரம் எப்படி செய்யலாம்? இந்த பரிகாரங்களை செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

சில வீடுகளில் சண்டை சச்சரவுகள் எந்நேரமும் இருக்கும்.. இதுபோன்ற நேரங்களில், சட்டை பையில் 3 ஏலக்காய்களை வைத்திருக்கலாம்.. இது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்க உதவகிறது. முக்கியமாக இந்த பரிகாரம் கணவன் மனைவிக்குள் உள்ள சண்டைகளை நீக்க உதவுகிறது.

Astro remedies Cardamom Pariharam

தம்பதிக்குள் இணக்கம்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் ஏலக்காய் கொடுப்பது நல்லது என்கிறார்கள்.. இதனால் தம்பதிகளுக்கு இடையே உள்ள காதல் அதிகரிக்குமாம்.

அதேபோல, தினமும் காலையில் குளிக்கும்போது 2 சிறிய ஏலக்காயை குளிக்கும் நீரில் போட்டு, இஷ்ட தெய்வத்தையும் மனதில் சொல்லிக்கொண்டே குளிக்கலாம்.. இதனால் மனதில் நல்லெண்ணம் மேம்பட்டு, நிதி பிரச்சனைகளும் மெல்ல தீரும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டுமானால், ஒரு பச்சை துணியில் நான்கைந்து ஏலக்காயை வைத்துக்கட்டி, அதை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டும். மறுநாள் அந்த ஏலக்காய் மூட்டையை யாரிடமாவது தந்துவிட வேண்டும்.. இப்படி செய்வதன் மூலம் வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கிறார்கள்..

ஒருவேளை, உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், 2 ஏலக்காயை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்ட காய்ச்ச வேண்டும்.. இந்நீரை குளிக்கும் நீரில் ஊற்றி, குளிக்க வேண்டும். ஓம் ஜெயந்தி மங்கள காளி பத்ரகாளி என்ற மந்திரத்தை உச்சரித்தபடி குளிக்கும்போது, ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாகும்.

3 ஏலக்காய்கள்

அதேபோல, 3 ஏலக்காய்களை உள்ளங்கையில் வைத்து மூடி, பிரச்சனைகள் நீங்க வேண்டுமென்று லட்சுமியை வணங்கி, நவகிரக யந்திரத்திற்கு அருகில் ஏலக்காயை வைத்துவிட வேண்டும்.. இதனால் கடன் பிரச்சனைகள் விலகும்.

3 கற்பூரம் 5 கிராம்பு எடுத்து, நெருப்பிலிட்டு எரிக்க வேண்டும். காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் இதனை செய்தாலும் நிதி நிலைமை சீராகும்.

வீட்டில் திருஷ்டி அதிகமாகிவிடும்போது, ஒரு கிண்ணத்தில் 5 கற்பூரம், 5 கிராம்பு, 5 ஏலக்காய் சேர்த்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை வீடு முழுக்க காட்ட வேண்டும. இதனால் நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வரும்.

அதேபோல ஒருவர் மாத சம்பளம் வாங்கியதும், அல்லது வியாபாரத்தில் கிடைத்த முதல் லாபத்திலிருந்து வெறும் ரூ.500 நோட்டை மட்டும் எடுத்து, ஒரு கிண்ணத்தில் போட வேண்டும். இந்த 500 ரூபாயுடன் 1 மற்றும் 5 ரூபாய் நாணயம் என இரண்டையுமே போட வேண்டும்.

வாசனை ஏலக்காய் பரிகாரம்

இந்த சில்லறை காசுகளுடன் 2 ஏலக்காய், துண்டு பட்டை, 2 அண்ணாச்சி மொக்கு, கிராம்பு 3, குண்டு மஞ்சள் போன்ற மசாலா பொருட்களையும் போட வேண்டும். கிண்ணத்திலுள்ள ரூபாய் நோட்டின்மீது அனைத்து சில்லறை, வாசனை பொருட்களும் பரப்பி இருக்க வேண்டும்.. ஏனென்றால், இந்த வாசனை பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது.

இந்த கிண்ணத்தை பூஜை அறையில் வடகிழக்கு மூலை அல்லது குபேரன் வாசம் செய்யும் வடக்கு திசையில் வைக்க வேண்டும். இதற்கு தினந்தோறும் பூஜை செய்ய வேண்டும். இதனால் நிதி நிலைமை சீராகி, கடன் பிரச்சனை தீரும்.

பர்ஸில் நறுமணம் தரக்கூடிய ஏலக்காய் வைத்திருக்கலாம்.. இது பணத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. அல்லது ஏலக்காய், சோம்பு, பச்சைக் கற்பூரம் உள்ளிட்டவற்றை பச்சை நிற பட்டுத் துணி அல்லது பச்சை காகிதத்தில் கட்டி பர்ஸினுள் வைத்து கொண்டாலும் கடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

அமாவாசை தர்ப்பணம் தரும்போது, அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் நெய், முந்திரி, திராட்சை, போன்றவற்றுடன் ஏலக்காயையும் 5 பேருக்கு தனித்தனியாக தானம் செய்யலாம்.. இதனால், முன்னோர்களுக்கு ஏதாவது குறை ஏற்பட்டிருந்தாலும் அது சரியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+