கழிவறை இங்கே மட்டும் இருக்க கூடாது.. கிச்சனில் பாத்திரம் கழுவும்போது இதைதான் முதல்ல கிளீன் பண்ணனும்
சென்னை: ஒரு வீட்டில் கழிவறை, சமையலறை இரண்டுமே முக்கியமாகும்.. அந்தவகையில், வீட்டில் கழிப்பறைக்கு ஒரு குறிப்பிட்ட இடம் மற்றும் திசை இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல, சமையலறையில் ஒருசில விஷயங்களை கடைப்பிடிப்பதால், வீட்டிலுள்ள வறுமையிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள்.
சிலரது வீட்டில், படிக்கட்டுக்கு அடியில் கழிவறை கட்டப்பட்டிருக்கும். ஆனால், இப்படி படிக்கட்டுக்கு அடியில் கழிப்பறை கட்டினால், அது, எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணிவிடுமாம்.

கழிவறை: வீட்டிலுள்ளவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதுடன், பணப்பிரச்சனையும் அதிகரிக்க செய்துவிடுமாம். எனவே, கூடுமான வரை கழிவறையாக உபயோகிப்பதை தவிர்த்துவிட்டு, அந்த இடத்தில் கண்ணாடிகள், செடிகள், ஓவியங்கள் போன்றவற்றை வைத்தால் எதிர்மறை ஆற்றல் நீங்கும் என்கிறார்கள்.
அதேபோல் சமையலறையில், எப்போதுமே உப்பு ஜாடியில், உப்பு நிறைந்திருக்க வேண்டும். அடுத்தபடியாக ஊறுகாயும் கிச்சனில் அவசியம் இருக்க வேண்டும். ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போன்றவைகளை குறைவில்லாமல் வைத்திருக்க வேண்டும்.
மளிகை பொருட்கள்: பருப்பு, புளி, சர்க்கரை, வெல்லம் போன்றவைகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த பொருட்களின் பாத்திரங்கள் காலியாக விடவே கூடாது.. வீட்டில் வறுமை சூழ்ந்துவிடுமாம். செல்வமும் விரையமாகுமாம்.
எனவே, இந்த மளிகை பொருட்கள் குறிப்பிட்ட அளவாவது வீட்டில் வைத்திருப்பதால், மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இந்த பொருட்களை வாரத்தில் வெள்ளிக்கிழமையில் வாங்கினால் சிறப்பு. அதேபோல, மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பொருள்களில் ஒன்றான நெய் மற்றும் நல்லெண்ணெய்யும் குறைவில்லாமல் கிச்சனில்இருக்க வேண்டும்.
அலமாரிகள்: வாஸ்து படி சமையலறையில் உள்ள அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு நோக்கி இருக்க வேண்டும். மசாலா மற்றும் உணவுப் பொருட்களை வடமேற்கு திசையில் வைக்க வேண்டும். மைக்ரோவேவ் ஓவன், மிக்சி போன்ற மின்சாதனங்களை தென்கிழக்கு மூலையில் வைக்க வேண்டும். வீட்டில் வைக்கப்படும்
பாத்திரத்தை தெற்கு திசை அல்லது மேற்கு திசையில் வைக்க வேண்டும். சமையலறையின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் சிறிய பொருட்களை வைப்பது நல்லது. சமைத்த பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைப்பது அபசகுணமாகும்.. அதேபோல, வீட்டிலுள்ள பாத்திரங்களை தலைகீழாக வைக்கக்கூடாது. இப்படி செய்தால் வீட்டில் உள்ளவர்களின் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படலாம்.. ஆரோக்கிய குறைபாடும் வரலாம்.
டைனிங் டேபிள்: அதேபோல, பாத்திரம் கழுவும்போது, பலரும் அரிவாள்மனை மற்றும் கத்தியை சுத்தம் செய்வதில்லை. இதனால் குடும்பத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். எனவே முதலில், அரிவாள்மனை, கத்தியை கழுவிவிடவேண்டும். அதேபோல, டைனிங் டேபிள் இருக்கும் திசைக்கு எதிரில் ஒரு கண்ணாடியை மாட்டி வைப்பதால், வீட்டிற்குள் வறுமை தொற்றாது என்கிறார்கள்.. அதாவது, டைனிங் டேபிள் அந்த கண்ணாடியில் பிரதிபலிக்க வேண்டுமாம்.
அதேபோல, சமைப்பதற்காக அரிசியை எடுத்த பிறகு, மறுபடியும் அரிசியை நிரப்பி கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் அரிசி ஆழாக்கு கவிழ்ந்து வைக்கக்கூடாது. நேராக நிமிர்ந்து அரிசியுடன் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். சமையலறை குழாயில் தண்ணீர் சிந்தக்கூடாது.. ரிப்பேராகி இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வறுமை வந்துவிடும். எப்போதும் பானையில் தண்ணீர் நிரம்பியிருக்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications