பிச்சிக்கிட்டு வரும் அதிர்ஷ்டம்.. பிரிஞ்சி இலையோடு கற்பூரமும் சேர்க்கலாமா? கற்பூரம் திடீர்னு அணையுதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்மீகத்தில் கற்பூரத்தின் முக்கியத்துவம் என்னென்ன? பூஜைகளின்போது கற்பூரம் ஏன் ஏற்றப்படுகிறது? கற்பூரம் ஏற்றும்போது திடீரென அணைந்துவிட்டால் என்ன செய்வது? அது அபசகுணமாக எடுத்து கொள்ளலாமா? கற்பூரத்துடன் சேர்த்து ஏற்றும் மூலிகை பொருட்கள் என்னென்ன? கிருமிநாசினியான கற்பூரத்தை இரவு நேரம் ஏற்றலாமா? அதன் பலன்கள் என்னென்ன? அவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

ஆண்டிபயாடிக் நிறைந்த கற்பூரங்கள் சுவாச பிரச்சனைகளுக்கும், சரும வியாதிகளுக்கும் பயன்படுகிறது.. அவ்வளவு ஏன்? வலுவான தலைமுறைக்கும் கற்பூரம் உபயோகப்படுகிறது.

Spirituality camphor burning Bay leaf

சுத்தமாகும் காற்று மண்டலம்

அதேபோல ஆன்மீகத்தில் மிக முக்கிய இடத்தை கற்பூரங்கள் பெற்றுள்ளன. எங்கு கற்பூரம் ஏற்றப்படுகிறதோ, அங்கு தெய்வீக உணர்வும் தோன்றும். கற்பூரம் எரியும்போது, வளிமண்டலம் தூய்மையடைகிறது. எதிர்மறை ஆற்றல்கள் நம்மிடம் நெருங்காது.

காரணம், கடவுளிடம் இந்த கற்பூரத்தை ஏற்றினால், அது முற்றிலும் எரிந்து, அணைந்து, காற்றில் கரைந்துவிடும். அதுபோல பக்தியில் கரைந்து நாமும், கடவுளிடம் சரணாகதி அடைய வேண்டும் என்ற நோக்கத்தையே கற்பூரங்கள் உணர்த்துகின்றன. அதேபோல, அறியாமை என்ற இருள் மறைந்து ஞானம் பெற வேண்டும் என்ற மற்றொரு பொருளை கற்பூரங்கள் உணர்த்துகின்றன.

கற்பூரம் ஏற்றினால், குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.. செழிப்பு பெருகும்.. அமைதி தழுவும்.. தம்பதிகளிடையே விரிசல், பிணக்குகள் இருந்தாலும் கற்பூரம் அதை சரிசெய்துவிடும்.

பரிகாரங்கள், கடன் பிரச்சனை

அதேபோல, திருஷ்டிக்கும், பரிகாரங்களுக்கும் இந்த கற்பூரங்கள் பயன்படுகின்றன.. புதிதாக வாடகைக்கு குடி சென்றால், கற்பூரத்தை ஏற்றிவைத்துவிட்டு, அதன்பிறகே வீட்டிற்குள் செல்வார்கள்.. இதன்காரணமாக, அங்கு ஏதாவது தீய சக்திகள் இருந்தால் விலகும்.

அளவுக்கு அதிகமான நிதி சிக்கல், கடன் சிக்கல் இருந்தால் 2 கிராம்பினை கற்பூரத்துடன் சேர்த்து ஏற்றி வைத்தால், கடன் தொல்லைகள் மெல்ல விலகும்... சிவப்பு ரோஜாவில், கற்பூரத்தையும் சேர்த்து எரித்து, அந்த பூவை துர்கா தேவிக்கு அர்ச்சனை செய்வதாலும் நிதி நெருக்கடி சீராகும்.. ஜாதகத்தில் தோஷமிருந்தால், பசு நெய்யுடன் கற்பூரத்தையும் சேர்த்து ஏற்றி வைப்பதால் அந்த தோறும் நீங்குமாம்.

கற்பூரங்கள் திருஷ்டியை கழிக்க பயன்படுகிறது.. வெறுமனே கற்பூரத்தை சுற்றி திருஷ்டி கழிக்காமல், கருப்பு கடுக்காயை வைத்து கற்பூரம் ஏற்றும்போது கண் திருஷ்டி வீட்டிற்குள் நுழையாது.

அபசகுணம் - திருஷ்டி பொருள்

தூங்க செல்வதற்கு முன்பு வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் கற்பூரத்தை ஏற்றலாம்...இதனால், தூங்குவதற்கான நிம்மதியான சூழல் உருவாகும். கற்பூரம் அணைந்தால் அது அபசகுணம் என்று நினைக்க தேவையில்லை.. அப்படி அணைந்துவிட்டால் வேறு கற்பூரம் எடுத்து மாற்றி பூஜை செய்து கொள்ளலாம்.

பிரிஞ்சி இலைகளுடன் சேர்த்து கற்பூரம் ஏற்றுவது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை கொண்டு வருமாம்.. கருமிளகை வைத்து கற்பூரம் ஏற்றினால் சனி பகவான் நேரடியாக அருள் புரிவார் என்பது நம்பிக்கையாக உள்ளது.. பெரிய ஏலக்காயை வைத்து கற்பூரம் ஏற்றினாலும், வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் வெளியேறிவிடும். அதேபோல, இலவங்கப்பட்டையை சேர்த்து கற்பூரம் ஏற்றினால் குடும்பத்தில் மகிழ்ச்சியை தழைக்க செய்யும்..

வாசலில் கற்பூரம்

வீட்டின் வாசலில்தான் அனைத்து சக்திகளும் வீட்டிற்குள் நுழைவால், வாசலில் தினமும் ஒரு கற்பூரத்தை ஏற்ற வேண்டும். இதனால், லட்சுமி தேவியும் வீட்டிற்குள் நுழைவாள்.. லட்சுமியின் வாசம் சமையலறையிலும் உள்ளதால், சமையலறைக்குள் பூச்சி, வண்டுகள் நுழையாது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+