சம்பளம் வந்ததுமே காலியாயிடுதா? வீட்டில் பண கஷ்டமா? இந்த 2 பொருள் இருந்தால் போதுமே.. பரிகார டிப்ஸ்
சென்னை: எவ்வளவுதான் சம்பாதித்தாலும், கையில் பணமே நிற்பதில்லை என்ற வருத்தம் பலருக்கும் உண்டு. இதற்கு சாஸ்திரங்களில் ஒருசில தீர்வுகள் சொல்லப்பட்டுள்ளன.
நீங்கள் சம்பளதாரராக இருந்தால், முதல் சம்பளம் வாங்கியதுமே, கல் உப்பு பாக்கெட் , மல்லிகைப்பூ இரண்டினையும் வாங்கிட வேண்டும்.. காரணம், மகாலட்சுமியின் இருப்பிடமாக இது திகழ்வதால், சம்பளம் வாங்கிய அன்றைய தினமே, கல் உப்பு, மல்லிப்பூ வாங்க வேண்டும். சம்பளதாரராக இல்லாவிட்டால், வருவாயின் முதல் பணத்தில் இதனை வாங்கலாம்.
உப்புக்கல்: இந்த உப்புக்கல்லை, வீட்டு வசாலில் ஒரு கிண்ணத்தில் நிரம்பி வழியும் அளவுக்கு போட்டுவிட்டால் போதும்.. அத்தனை திருஷ்டிகளும் உங்கள் மீதிருந்தால் கழிந்துவிடும்.

கல் உப்பு போலவே, இந்து உப்பையும் வாங்கி வைக்கலாம்.. வெள்ளிக்கிழமைகளில் உப்பை வாங்கி, சமையலறையில் வைத்து, இதனுடன் 1 ரூபாய் நாணயத்தையும் வைத்து பிரார்த்திக்க வேண்டுமாம். இதனாலும், பணக்கஷ்டம் தீரும் என்கிறார்கள்.
பணக்கஷ்டம்: அதேபோல வீட்டிலுள்ள கஷ்டம், வறுமை நீங்கி, பணம் தங்கும் என்கிறார்கள்.. மல்லிகைப்பூவை வண்டி, வாகனத்திற்கு போட்டுவிடலாம்.. அல்லது, உங்களது பணம் வெளியிலுள்ள நபர்களிடம் சிக்கியிருக்கிறது என்றால், அதை எளிதாக திரும்ப பெற வேண்டுமானால், உங்களின் உள்ளங்கையில் 3 மிளகுகளை வைத்துக்கொண்டால் போதுமாம்.. இந்த மிளகை கையில் வைத்து கொண்டு பணத்தை கேட்டால், உடனடியாக உங்கள், கைக்கு வந்து சேரும் என்கிறார்கள்.
அல்லது வீட்டு வாசலில் கிழக்கு திசையை பார்த்து தீபம் ஏற்ற வேண்டும். நீங்கள் சம்பளம் வாங்கியதுமே, அதில், எண்ணெய், விளக்கு, திரியை வாங்கி, இப்படி விளக்கேற்றினால், நவகிரகங்களின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்குமாம். வீட்டில் ஏதாவது தோஷம் இருந்தாலும் நீங்கிவிடும் என்கிறார்கள்.
குலதெய்வம்: அதேபோல, உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று, எடைக்கு எடை பச்சரிசியை தானமாக தரலாம்.. பச்சரிசி மாவுடன் சர்க்கரையும் கலந்து குல தெய்வ கோவிலில் எறும்புக்கு தருவதால், கடன் பிரச்சினை தீரும் என்பார்கள்.. செவ்வாய்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலையிட்டு வழிபட்டு வந்தாலும் கடன் பிரச்சினை தீரும்.
சங்கு வாங்கி வீடுகளில் வைக்கலாம்.. இந்த சங்கிலிருந்து வெளிவரும் ஓம் ஒலியானது, கெட்ட சக்திகளை அழிக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.. அதுவும் இல்லாமல், லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு பொருள் என்பதாலும், சங்கை வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். இதனால், வீட்டில் பணம் தங்குவதுடன், சகல செல்வங்களும் சேர்ந்து கொண்டே இருக்குமாம்.












Click it and Unblock the Notifications