பழைய விளக்கு திரிகளை என்ன பண்றீங்க? பழைய காலண்டரை இப்படி யூஸ் செய்தால், வீட்டில் பணக்கஷ்டம் வருமாம்
சென்னை: நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகள்தான், குடும்பத்தில் பாதிப்பையும், சிக்கலையும் உண்டுபண்ணிவிடுவதாக கூறப்படுகிறது. அதனால்தான், ஒவ்வொரு விஷயத்திலும் , நாள், கிழமை, திசை என நம்முடைய முன்னோர்கள் விரிவாக பதிவுசெய்துள்ளார்கள். அந்தவகையில், காலண்டர்களோ, அல்லது விளக்கு திரிகளோ பழையதாகிவிட்டால் என்ன செய்வது? அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வீடுகளில், தினந்தோறும் மாலை நேரத்தில் முன்பக்க வாசலில் தீபம் ஏற்றினால், மகாலட்சுமி மகிழ்ச்சியடைந்து அந்த வீட்டிற்கு வரக்கூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால் குடும்பத்தில் பொருளாதார நிலையும் வலுப்பெறுவதுடன், வீட்டிலிருந்து எதிர்மறைகள் அகற்றப்பட்டு, நேர்மறை சக்திகள் பெருகும் என்பார்கள்.

அதேசமயம், விளக்கேற்றும் திரிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டுமாம்.. அதாவது, விளக்கேற்றும்போது, சில மணி நேரம் கழித்து திரி கருகும் முன்போ அல்லது எண்ணெய் தீர்ந்து விடும் முன்போ உடனடியாக விளக்கை அணைத்து விட வேண்டும்.
பித்தளை குச்சிகள்: எக்காரணம் கொண்டும் வாயால் ஊதி விளக்கை அணைக்க கூடாது.. விளக்கு தானாகவும் அணைந்து விடவும் கூடாது. விளக்கை எப்போதுமே கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது.. பூக்களால் தீபத்தை அணைத்துவிடலாம்.. அல்லது இதற்கெனவே பித்தளை குச்சிகள் கடைகளில் விற்கப்படுகின்றன.

தீபத்திரியை மாற்றும்போது பழைய திரியை, குப்பையில் போடக்கூடாது. இந்த திரிகள் ஒவ்வொன்றையும் சிறிது சிறிதாக சேர்த்து வைத்து வரவேண்டும். திரிகள் ஓரளவு சேர்ந்ததுமே, ஏதாவது ஒரு நாளில், இரவு தூங்க செல்வதற்கு முன்பு, குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக கிழக்கு பார்த்து உட்கார வைத்து, திரிகளை தூபக்காலில் போட்டு அனைவருக்கும் வலமிருந்து இடமாக 3 முறையும், இடமிருந்து வலமாக 3 முறையும் திருஷ்டி கழிக்க வேண்டும்.
திருஷ்டி திரிகள்: திருஷ்டி கழித்த திரிகளையும் குப்பையில் போடக்கூடாது. இந்த திரிகளை வீட்டின் வாசலில் வைத்து எரிக்க வேண்டும். திரிகள் அனைத்துமே எரிந்து சாம்பலானதும், அந்த சாம்பலை, யார் காலடியும் படாத இடத்தில் கொண்டுபோய் போட்டுவிடவேண்டும். அல்லது வீட்டு கிச்சனிலுள்ள சிங்க்கில் கொட்டி தண்ணீர் ஊற்றிவிட வேண்டும். இதனால், வீட்டிலுள்ள மொத்த திருஷ்டியும் கழிந்து, நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் பரவும்.
அதேபோல, சாமி படம் இருக்கும் காலண்டர்கள் பழையதாகிவிட்டால், அவைகளை என்ன செய்வது என்று பலருக்கும் சந்தேகம் வரலாம்.. பழைய காலண்டரை கோவிலிலோ அல்லது மரத்தடியிலோ சிலர் கொண்டுபோய் வைத்துவிடுவார்கள்.. மேலும் சிலர் காலண்டர்களில் சாமி படம் உள்ளது என்பதற்காகவே, வீட்டிலேயே வைத்திருப்பார்கள். மேலும் சிலர், இந்த பழைய காலண்டர் மேலேயே, புது காலண்டரையும் மாட்டி விடுவார்கள். ஆனால், இவை எல்லாமே தவறான செயல்பாடுகளாம்.
பழைய காலண்டர்கள்: பழைய காலண்டர்களை எப்போதுமே வீட்டில் வைத்திருந்தால் பல்வேறு முட்டுக்கட்டைகளை உருவாக்கிவிடுமாம். இந்த பழைய காலண்டர் மேல் புது காலண்டரை மாட்டி வைத்தால், அது முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்தி, பணவரவுக்கும் முட்டுக்கட்டையை தந்து, குடும்பத்திலும் எதிர்மறை ஆற்றலையும் உண்டுபண்ணிவிடும். அதனால், பழைய காலண்டர், கிழிந்த காலண்டர்கள், எதுவானாலும், உடனடியாக வீட்டிலிருந்து அகற்றி, குப்பையில் போடாமல் ஓடும் நீரில் விட்டு விட வேண்டும்.












Click it and Unblock the Notifications