பிரம்ம முகூர்த்தத்தின் ஸ்பெஷல்.. வீட்டில் ஆண்கள் விளக்கேற்றலாமா? எப்போது ஏற்றலாம்? பெஸ்ட் எண்ணெய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் சிறப்புகள் என்னென்ன தெரியுமா? அதிகாலையில் பெண்கள் செய்ய வேண்டியது என்ன? பெண்களுக்கு பதிலாக ஆண்கள் வீட்டில் விளக்கேற்றலாமா? இதுகுறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன? அவைகளை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

பெண்கள் தினமும் அதிகாலையிலேயே கண்விழித்துவிட வேண்டுமாம். ஏனென்றால், இந்த நேரத்தில்தான் தேவர்களும், பித்துருக்களும் வீடு தேடி வருவார்களாம். பிரம்ம முகூர்த்தத்தில் விழித்து, யார் முகத்தையும் பார்க்காமல் வாய் கொப்பளித்து விட்டு, இரண்டு மடக்கு தண்ணீர் குடித்துவிட்டால், லஷ்மி கடாட்சம் எப்போதும் வீட்டில் கிடைக்கும் என்பார்கள்.

spirituality bramma muhurtha neram pooja lamp

பிரம்ம முகூர்த்தத்தில்தான் லட்சுமிதேவி வீதி வலம் வருவதாக நம்பப்படுகிறது.. எந்த வீட்டில் விளக்கேற்றி வைத்திருக்கிறார்களோ, அங்கே நுழைவாள் என்பது ஐதீகம்.. இதனால் லட்சுமிதேவியின் அருள் கிடைக்கும். அதுமட்டுமல்ல, பிரம்ம முகூர்த்தத்தில், காற்று மண்டலம் மிகவும் தூய்மையாக இருக்கும்.. இந்த தூய்மையான காற்றை சுவாசிப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

மாக்கோலம்: காலையில் தூங்கி எழுந்ததும் வாசற்கதவை திறக்கும்போது, "மகாலஷ்மியே வருக" என்று 3 முறை சொல்லிவிட்டுதான் திறக்க வேண்டும். காலை 4.30 லிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து, அரிசி மாவினால் கோலம் போடுவதால், மகாலட்சுமியின் அருள் பூரணமாக கிடைக்கும்.

அதேபோல, காலையில் குளிக்கும்போது, ஒரு சிட்டிகை மஞ்சளையும் தண்ணீரில் கலந்து குளிப்பதால் விஷ்ணு பகவான், பிரஹஸ்பதியின் அருள் விலகாமல் இருக்கும். வெள்ளி, செவ்வாய்களில் ஒரு செம்பு தண்ணீரில் மஞ்சளை கரைத்து, வீட்டை சுற்றி தெளித்துவிடுவதால், வீட்டை சுற்றிலும் துர்சக்திகள் நெருங்காது... இந்த 2 கிழமைகளிலும், 5 முகம் கொண்ட குத்து விளக்கேற்றி திருமகளை வழிபட்டால் பல்வேறு சிறப்புகள் கிடைக்கும்.

ஆண்களும் விளக்கேற்றலாமா?: அதேபோல, வீட்டில் பெண்கள் விளக்கேற்ற முடியாத சூழலில், ஆண்கள் விளக்கேற்றலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம்.. கண்டிப்பாக ஆண்களும் தாராளமாக விளக்கேற்றலாம்.. காலையில், சூரியன் உதிப்பதற்குள், மாலையில் சூரியன் மறைவதற்குள் விளக்கை ஏற்றலாம் என்கிறார்கள் பெரியவர்கள்.

அப்படி விளக்கேற்றும்போது, தேங்காய் எண்ணெய் விட்டும் விளக்கு ஏற்றலாம். அதேபோல, நெய், நல்லெண்ணெய் ஆகிய எண்ணெய்களை விட்டும் விளக்கேற்றலாம். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது. அதேபோல பசு நெய் தீபமும் ஏற்றி வழிபடலாம். பொதுவாக சுத்தமான, கலப்படமில்லாத நல்லெண்ணை ஏற்றி வீட்டில் விளக்கேற்றினாலே போதும். சிறிய வெள்ளி காமாட்சி விளக்கு வாங்கி அதில் நெய் ஊற்றி காலையிலும், மாலையிலும் ஏற்றி வைப்பது சிறப்பை தரும்.

பஞ்சமி திதி: மகாலட்சுமிக்கு பசு நெய் ஊற்றியும்,மகாவிஷ்ணுவுக்கு நல்லெண்ணை ஊற்றியும் விளக்கேற்றலாம். பரிகாரத்திற்காக பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த 5 எண்ணெய்யையும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி 5 முகம் ஏற்றிவைத்து, பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபட்டால் அம்மனின் அருள் பூரணமாக கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+