என் சுவாசக்காற்றே.. மூச்சு விடுவதில் உள்ள ஆயுள் ரகசியம்.. சித்தர்கள் சொன்னதை செய்ய மறக்காதீங்க
சென்னை: நம்முடைய சுவாசம்தான் நம்முடைய ஆயுளை நிர்ணயம் செய்கிறது. மூச்சு நின்று போனால் சகலமும் போய்விடும். நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்களும் சுவாசக்கலையைப் பற்றி பல அற்புத பாடல்களை பாடி வைத்துள்ளனர். நாம் பெருமூச்சு விடவே கூடாது. பெருமூச்சு விட்டால் துன்பங்கள் அதிகரிக்கும் அதனால் நம்முடைய ஆயுள் குறையும்.
இந்த உலகில் உள்ள ஒரு செல் உயிரினம் முதல், ஆறறிவு படைத்த மனித இனம் வரை, அனைவரின் வாழ்க்கைக்கும், தேவையானது காற்று! உயிரினங்கள் உயிர் வாழத்தேவையான ஆக்சிஜன் காற்று நிரம்பிய ஒரே கோளாக பூமி உள்ளது. அதன் மகத்துவம் பலருக்கும் தெரியாமல் போனதால்தான் பலரும் இயற்கையாக கிடைக்கும் ஆக்சிஜனை உதாசீனம் செய்கிறோம்.

காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!" என்று மனித உடலைப்பற்றி பாடினார், பட்டினத்தார். அது தத்துவம்! ஆயினும், உண்மையும் அதுதானே! "உடலை வளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே!" என்றார், திருமூலர். உள்ளத்தில் உள்ள உற்சாகம், முகத்தில் உள்ள பொலிவு, உடலில் உள்ள வலிமை, இவை அனைத்துக்கும் காரணம், நாம் சுவாசிக்கும் காற்றுதான்.
தினமும் நாம் சாப்பிட்டாலும், இல்லையென்றாலும், தண்ணீர்தாகம் எடுத்து நீர் பருக முடியாமல் இருந்தாலும், நாம் மூச்சுவிடுவதையும், சுவாசிப்பதையும், செய்துகொண்டுதான் இருக்கிறோம், ஆனால் அந்த சுவாசத்தை நாம் சரியாக விடுகிறோமோ என்று நிறைய பேருக்கு தெரியாது. நம்முடைய சுவாசம் சரியாக இருந்தால் வாழ்க்கையில் சகலமும் சரியாக இருக்கும் என்பது சித்தர்கள் வாக்கு.
நம் சுவாசத்தில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொண்டுதான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கும். சுவாசத்திற்கு அடிப்படையான காற்று, மூக்கின்வழியே உள்ளே இழுக்கப்பட்டு, தொண்டைவழியே, நுரையீரலை சென்றடைகிறது. நுரையீரலே, உள்ளேவரும் காற்றை, அதன் நுண்ணிய காற்றுப்பைகளுக்கு அனுப்பி, ஏற்கெனவே உள்ள சுத்திகரித்தபின் எஞ்சிய காற்றை, திருப்பி மூச்சின் வழியே, வெளியேற்றும்!. நுரையீரலின் பைகளில் உள்ள காற்று, இரத்தக்குழாய்களின் வழியே, உடலில் பரவும், இதன்மூலம் காற்றிலுள்ள பிராணவாயு எனும் ஆக்சிஜன், செல்களில் சேமிக்கப்பட்டு, உடலின் இயக்கத்தில் வெளியாகும் கார்பன், மூச்சுக்காற்றின் வழியே, வெளியேற்றப்படுகிறது. நாம் மூச்சு விடுவதன் அர்த்தம் செயல்பாடு இதுதான்.
மூச்சு எண்ணிக்கை குறையக்குறைய, ஆரோக்கியம் கூடும் என்பது சித்தர்கள் வாக்கும். நாம் எதையும் நிதானமாக யோசித்து செய்தால் செயல்கள் வெற்றியடையும். அதை போலத்தான் நம்முடைய சுவாசமும் இருக்க வேண்டும். மனிதன் சுவாசிக்கும் மூச்சுக்காற்றின் எண்ணிக்கை, ஒரு நிமிடத்துக்கு சராசரியாக பதினைந்து என்ற அளவில் இருந்தால், நூறு ஆண்டுகள் வரை வாழலாம், என்று சித்தர்கள் உரைத்துள்ளனர். நிமிடத்திற்கு பதினெட்டு முதல் இருபது என்ற அளவில் சுவாசித்தால், எழுபது ஆண்டுகள் முதல் எண்பது ஆண்டுகள் வரை உயிர்வாழலாம். இதுவே இன்றைய மனிதர்களின் சராசரி மூச்சின் அளவாகும்.
நாம் அமர்ந்திருக்கும்போது பனிரெண்டும், நடக்கும்போது பதினெட்டு மூச்சும், கோபத்தில் கத்துதல் போன்ற உணர்ச்சிகளில் சிக்கும்போது, நிமிடத்திற்கு அறுபத்திநான்கு மூச்சுகளும் ஏற்படுகின்றன. அதிகம் கோபப்பட்டு ஆத்திரப்பட்டு கத்தினால் நம்முடைய ஆயுள்தான் குறையும் எனவே நாம் கத்தி கத்தி பேசி கோபப்பட்டு பேசி சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. அமைதியாக சாந்தமாக இருந்தால் நம்முடைய ஆயுள் அதிகரிக்கும் நடைபெற உள்ள காரியங்களும் நலமாக நடைபெறும்.
மனிதர்கள் சராசரியாக ஒருநாளைக்கு இருபத்தியோராயிரம் முறை சுவாசிக்கின்றனர் என்பது கணக்கு, அந்த சுவாசத்தில் அதில் கிட்டத்தட்ட பனிரெண்டாயிரம் சுவாசங்கள் மட்டுமே, உடலில் பரவி, வெளியேறும், மீதம் உள்ள சுவாசங்களால் பலன்கள் ஏதுமில்லை!. நாம் சுவாசிக்கும் போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து, அதில் மூன்று மடங்கு நேரம் உள்ளே அடக்கி, பின்னர், ஒரு மடங்கு நேரத்தில் மூச்சை மெதுவாக வெளியேவிட வேண்டும்!, இதுதான் மூச்சுக்கணக்கு! மூச்சை, கணக்குபோட்டு சுவாசிக்கும் முறையே, பிரணாயாமம் என்று பண்டை மருத்துவம் அழைக்கிறது. பிரணாயாமம் என சித்தர்கள் கூறிய, இந்த அரியகலையை, முறையாகச்செய்து, மூச்சையடக்கி வாழப்பழகுவது, இன்று அனைவருக்கும் அத்தியாவசியமானது.
பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும். மனதில் எதைப்பற்றியும் நினைக்காது மூச்சுக்கற்றின் பாதையை மட்டும் நினைவில் வைத்து நிறுத்தி, அந்த மூச்சு போகும் வழி, வரும் வழியைக் கூர்ந்து நோக்க வேண்டும்.
முறையான சுவாசத்தினால், மூச்சு உள்ளே நிற்கும் அளவுக்கு, உடலின் நன்மைகளை அதிகரிக்கும். மூச்சை உடனே வெளியிடாமல், சற்றுநேரம் அடக்கி வைக்கும்போது, காற்றில் உள்ள சக்தி அதிக அளவில் உடலில் சேகரிக்கப்படுகிறது, உடலில் தேங்கும் பிராண சக்தியே, மனதின் ஆற்றலை அதிகரிக்கிறது
இதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். முகத்தின் பொலிவும் அதிகரிக்கும். முயன்றுதான் பாருங்களேன்.. எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்க நாம் சரியாக நிதானமாக சுவாசிப்போம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications