Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டு பூஜை அறையில் அனுமன் படம் வைக்கிறீர்களா? ஆஞ்சநேயர் படத்தை வைக்கலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம் என்பது தெரியுமா. குறிப்பிட்ட சில தெய்வங்களின் படங்களை வைக்கும் போது அதற்கான விதிமுறைகள் சிலவற்றை பின்பற்ற வேண்டும்.

இதுகுறித்து குவோராவில் ரத்தினம் சேகர் வடிவேல் என்பவர் கூறியிருப்பதாவது: எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்??
*உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும் அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

hanuman

இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும் எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள்/ தெய்வங்கள் /தேவதைகள்
அவரவா் குல தெய்வத்தின் படத்தினை வைத்து கண்டிப்பாக வணங்கி வரவேண்டும்.

இது மிகவும் நன்மை பயக்கும். குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும். குல தெய்வத்தை விட உயா்ந்த தெய்வம். உலகில் இல்லை குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது. அவரவா் இஷ்ட தெய்வத்தின் படத்தை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும் நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே.

குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே. எந்த ஒரு விநாயகா் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம காரிய சித்தி உண்டாக்குபவா் இவரே விக்னங்களையும் வினைகளையும் களைபவரும் இவரே நல்வழி காட்டுபவரும் இவரே.

குழந்தை கடவுளின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும் குழந்தை இல்லாதவா்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல குழந்தைகள் பிறக்கும் பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். ராஜ அலங்கார முருகாின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும் அரசு வேலைக்கு முயற்சிப்பவா்களும் அரசியலில் முன்னேற துடிப்பவா்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.

இவாின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை. மணக்கோலத்தில் இருக்கும் முருகாின் படத்தை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவா்களுக்கு திருமணத் தடையை போக்கும் வடிவம் ஆகும். திருமணம் ஆனவா்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும்.

இல்லறம் நல்லறமாக நடக்கும். அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. பிரிந்த தம்பதியா் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவாா்கள். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை அன்பு, காதல் பாசம் உண்டாகும். தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.

சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சிவசக்தி கலப்பே உலகம்: சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம். எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.

ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத் தடையை நீக்கும் வடிவம் ஆகும் இந்த வடிவம் தம்பதியா் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும். தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும். குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம்.

இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும் குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும். தனது மனைவியான சொர்ணதா தேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ண பைரவாின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத்தக்கதே பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தை வணங்கி வர அறம்; பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.

* ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய ஹனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக ஹனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவா் ஹனுமனின் படம் வைத்தால், அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும். லக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீ நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.

இதனால் திருமகளின் அருள் கிட்டும் நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும். *சிவகாமசுந்தாியுடன் நடனமாடும் நடராஜரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம் இது சிவசக்தி அருளைத் தரும் 16 பேறுகளும் கிட்டும் நடனம் இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும்.

கா்மவினைகள் தொலையும் மாயை விலகும் முக்தி கிட்டும். ஞானத்தினை போதிக்கும் தட்சிணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும் ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும். ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே.

கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும். கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத்தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவா்களுக்கும் பேச்சுத் திறமையும் எழுத்துத் திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள்.

போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும். லக்ஷ்மியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். குபேரனுக்கு அருள் பாலிக்கும் லக்ஷ்மி படமும் லக்ஷ்மி மற்றும் குபேரன் இவா்களுக்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை. இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும், 8 ஐஸ்வா்யங்களும் உண்டாகும்.

அலா்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும் சுகமான வாழ்க்கையும் அமையும். மேற்கண்ட படத்துடன் லக்ஷ்மியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.
துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது.

இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்; கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும் செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும். அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை அகலும் பசி., பட்டினி பஞ்சம் தீரும் வேலை இல்லாமல் இருப்பவா்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

சித்தா்கள், மகான்கள், முனிவா்கள், யோகிகள், ரிஷிகள் இவா்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம் இதனால் குருவருள் வந்து சேரும் தோஷங்கள் விலகும் கா்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும் வளமான; நிம்மதியான வாழ்க்கை கிட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+