Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவில் நகம் வெட்ட கூடாதுனு சொல்றாங்களே, ஏன்னு தெரியுமா? நைட்டில் நகங்களை வெட்டினால் இதுதான் நடக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரவில் நகங்களை வெட்டக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.. இது இன்றும் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு என்ன காரணம்?

இரவு நேரத்தில் நகங்களை வெட்டக்கூடாது என்பதற்கு ஆன்மீக காரணமும் உண்டு, அறிவியல் காரணமும் உண்டு.. அதாவது, ஆன்மீகப்படி, மாலை நேரங்களில்தான், லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைந்து வாசம் செய்வாள் என்று நம்பப்படுகிறது.

Spirituality Spiritual News cut Nails nail cutting Health Spiritual reasons

வீட்டில் செழிப்பும், ஆரோக்கியமும் தங்கியிருக்க கூடிய ஆசீர்வாதத்தை தருவதே லட்சுமி தேவிதான்.. எனவே, மாலை நேரங்களில் வீட்டிற்குள் நுழையும் லட்சுமி தேவி, அங்கேயே தங்கியிருந்து, வீடு செழிப்பதற்கான ஆசீர்வாதத்தை தருவதாகவும் நம்பப்படுகிறது. அதனால்தான், இரவு நேரத்தில் வீட்டை பெருக்கக்கூடாது குப்பைகளை வெளியில் கொட்ட கூடாது, நகம், தலைமுடி வெட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

தரையில் நகங்கள்: ஏனென்றால், பில்லி, சூனியம் போன்ற செய்வினைகளுக்கு பெரும்பாலும் உடைந்த நகத் துண்டுகளையே பயன்படுத்துவார்களாம். எனவே, நகங்கள் தரையில் விழும்போது, நமக்கு எதிராக சூனியம் செய்யும் நபர்களோ அல்லது வேறு ஏதாவது தீய சக்தியோ, நம்முடைய நகங்களை சேகரித்து நமக்கு தீங்கினை உண்டாக்கலாம் என்பதால், இந்த செயல்களை செய்வதை இரவில் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, துஷ்ட சக்திகள் எல்லாம், இரவில்தான் அதிகமாக உலாவுமாம்.. இரவில் நகத்தை வெட்டி, கீழே போடும்போது, அந்த சக்திகளால் நாம் ஈர்க்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.. அதுவும் இல்லாமல் நகம் வெட்டுவது என்பது, நம்மிடமுள்ள ஒரு விஷயத்தை தனியே வெட்டி எடுப்பது போன்றது.. அதனால்தான், இரவில் நகம் வெட்ட வேண்டாம் என்கிறார்கள்.

கிழமைகள்: நகம் வெட்டுவதற்கெனவே நாட்களையும் குறித்து வைத்திருக்கிறார்கள்.. சனிக்கிழமைகளில் நகம் வெட்டினால், உங்களுடைய மன உறுதியை குறைக்க வாய்ப்பு உள்ளதாம்.. எனவே, சனிக்கிழமை நகம் வெட்டுவதை தவிர்க்கலாம்.. ஞாயிற்றுக்கிழமைகளிலும் நகத்தை வெட்டக்கூடாது.

புதன்கிழமை நகம் வெட்டுவது உங்களுடைய பூர்வீக சொத்தை பெருக்க உதவும்.. வியாழனன்று நகம் வெட்டினால் கெட்ட விஷயங்கள் நடக்காமல் தடுக்கப்படும்.. வெள்ளிக்கிழமை நகம் வெட்டினால் உங்களுடைய விருப்பத்திற்குரியவர்களை சந்திக்கக்கூடும்.. திங்கள்கிழமை நகம் வெட்டுவது உங்களுடைய உடல்நலத்தை மேம்படுத்தும். செவ்வாய் என்று நகம் வெட்டினால் கடன் சுமை குறையும் என்கிறார்கள்.

அழுக்குகள்: அதேசமயம், அறிவியல் ரீதியாக பார்த்தோமானால், சுகாதாரத்தை பேண வேண்டியிருக்கிறது. நம்முடைய நகங்களின் இடுக்குகளில் கீழ் அழுக்குகள், கிருமிகள், பாக்டீரியாக்கள் போன்றவை அடைந்து கிடக்கின்றன.. எனவே, நகங்களை அடிக்கடி வெட்டி சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.

ஆனால், அன்றைய காலகட்டங்களில் மின்சாரம் எங்கேயுமே கிடையாது. அதேபோல, நகங்களை வெட்டவும், நெயில் கட்டர்கள் கிடையாது. பெரும்பாலும் கத்தியை வைத்துதான், நகங்களை வெட்டி வந்துள்ளார்கள்... மாலையில் குறைந்த வெளிச்சத்தில் நகங்களை வெட்டும்போது, கத்தியில் உடலில் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டுவிட்டால், அதற்கு சரியான மருத்துவ வசதிகளும் இரவு நேரத்தில் கிடைக்காது...

வயிற்று போக்கு: அதுவும் இல்லாமல், நம்முடைய நகங்கள் கீழே விழுந்துவிட்டாலும், அதனை இருட்டில் தேடி எடுக்க முடியாது.. கீழே விழாமல் சாப்பாட்டு பொருட்களில் விழுந்துவிட்டால், அது இன்னும் உபாதைகளை உடலுக்கு ஏற்படுத்திவிடும். அதனால்தான், இரவில் நகம் வெட்ட வேண்டாம் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

மொத்தத்தில், நகங்களை வெட்டுவது சுகாதாரமான செயற்பாடு... நகங்களை வெட்டி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+