படுக்கையறையில் இதை கவனிச்சீங்களா? உங்க பெட்ரூமில் கண்ணாடி இருக்கா? இப்படி திருப்பி வைங்க: செம டிப்ஸ்
சென்னை: வீடுகளிலுள்ள படுக்கையறையை எந்த திசையில் வைத்திருக்க வேண்டும்? எந்தெந்த பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்பதுகுறித்து வாஸ்து நிபுணர்கள் துல்லியமாகவே கணித்து கூறியிருக்கிறார்கள். இதில் ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம்.
வீடுகளை கட்டும்போது, படுக்கையறையை வாஸ்துபடியே திட்டமிட்டு கட்டுவார்கள்.. இதற்கு காரணம், வீட்டில் மகாலட்சுமி தங்கியிருப்பதுடன், மனநிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு அமையும் என்று நம்பப்பட்டு வருகிறது.

படுக்கையறை: பெரும்பாலும் படுக்கையைறையை தென்மேற்கு அல்லது தெற்கு அல்லது மேற்கு திசைகளில் கட்ட அறிவுறுத்துகிறார்கள்.. முக்கியமாக, வட கிழக்கு திசையில், தென்கிழக்கு திசையிலும் படுக்கையறையை அமைக்க கூடாது. ஏனெனில் வடகிழக்கு திசை பிரார்த்தனை வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது.
படுக்கையறை சுவரின் நிறமும் மிகவும் முக்கியம்.. நீலம், பச்சை, மஞ்சள், வெள்ளை இப்படியான நிறங்களில் சுவர்கள் இருந்தால், நேர்மறை ஆற்றலை பெருகும்.. தூங்கும்போது தலையை தெற்கு அல்லது கிழக்கு திசை நோக்கியே படுக்க வேண்டுமே தவிர வடக்கு திசை நோக்கி தலைவைத்து படுக்கக்கூடாது.
கண்ணாடிகள்: படுக்கையறையில் கண்ணாடிகளும், செவ்வக, சதுர வடிவிலேயே இருக்க வேண்டும்.. மற்ற எந்த வடிவமாக இருந்தாலும் ஆரோக்கிய குறைபாடுகள் குடும்பத்தில் வரலாம்.. படுக்கைக்கு முன்பு கண்ணாடி வைத்திருக்கக்கூடாது.. படுக்கையை பார்த்தவாறும் கண்ணாடி வைக்கக்கூடாது.. கண்ணாடியின் பிரதிபலிப்பு படுக்கையில் கொஞ்சமும் விழாதவாறு வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் இரவில் கண்ணாடியை துணியால் மூடிவைத்துவிட்டு, மறுநாள் காலை திரையை எடுத்துவிடலாம்
வடகிழக்கு மற்றும் வடக்கு திசையில் கண்ணாடியை வைக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் கிழக்கு திசையில் மட்டும் கண்ணாடிகளை வைக்ககூடாது.. 2 கண்ணாடிகளையும் ஒரே அறையில் வைக்கக்கூடாது.
கதவுகள்: படுக்கையறை கதவுகளும், கிழக்கு மேற்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும்படியும், படுக்கையறை ஜன்னல் கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்க வேண்டும். படுக்கைகள் எப்போதுமே மரத்தினால் செய்யப்பட்டதாக இருப்பது நல்லது.. ஆனால், விதவித வடிவங்களில் இருப்பதைவிட, செவ்வகம் அல்லது சதுர வடிவில் படுக்கைகள் இருக்க வேண்டும்.
படுக்கையறை கதவு சுவரின் வடக்கு, கிழக்கு அல்லது மேற்கு பக்கமாக இருக்க வேண்டும். படுக்கையறை கதவு 90 டிகிரி கோணத்தில் திறக்கப்பட வேண்டும். படுக்கையறையின் உட்புற வண்ணங்களும் நேர்மறை ஆற்றலைக் கொடுக்கும். மஞ்சள், பச்சை, நீலம், வெள்ளை போன்ற நிறங்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியவையாம்.
ஜன்னல்கள்: படுக்கையறையின் கிழக்கு மற்றும் வடக்கு சுவர்களில் அதிக ஜன்னல்கள் இருக்கும்படி பார்த்து கொள்ளவேண்டும்.. படுக்கையறை கதவு 90 டிகிரி கோணத்தில் திறக்கப்பட வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications