கோயிலில் ஈர ஆடையுடன் வழிபாடு செய்யலாமா? ஈரத்துணியுடன் பூஜையில் விளக்கேற்றினால் என்னாகும் தெரியுமா?
சென்னை: ஈரத்துணியை உடம்பில் உடுத்திக்கொண்டு கடவுள்களை வழிபாடு செய்யலாமா? ஈரம் தோய்ந்த துணியை அணிந்து கொண்டு விளக்கு ஏற்றலாமா? இதுகுறித்து ஆன்மீகத்தில் சொல்வதென்ன? ஈரத்துணிகளை குளியலறையில் வைத்திருக்கக் கூடாது என்று சொல்வதற்கு என்ன காரணம்? இரவில் துணிகளை துவைக்கக்கூடாது, துணிகளை ஊற வைக்கவும் கூடாது என்று சொல்ல காரணம் என்ன? ஈரத் துணியுடன் வழிபட நேர்ந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
இறைவன் வழிபாடுகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற நியதியை முன்னோர்கள் வகுத்துள்ளனர்.. அதில் ஈரத்துணிகளுடன் வழிபாடு செய்யலாமா? என்பது குறித்தும் விளக்கமாகவே சொல்லி வைத்துள்ளனர்.

ஈர ஆடைகள்
ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.. வழிபாடு செய்யும் நேரங்களில் உலர்ந்த ஆடைகளை அணிந்து கொள்வதுதான் நல்லது.
பெற்றோருக்கு செய்யும் ஈமச்சடங்கிற்கு மட்டுமே, ஈரம் தோய்ந்த ஆடைகளுடன் வழிபாடு செய்வார்கள்.. இறை வழிபாட்டிற்கு, ஈர உடையுடன் செய்யக்கூடாது..
ஈரத்துணிகளாக இருக்கும்பட்சத்தில், அந்த துணிகளை நன்றாக பிழிந்து லேசாக உலர்த்தியபிறகே அதை அணிந்து கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். அல்லது ஈரம் சொட்ட சொட்ட துணி இருக்கிறது என்றாலோ, காயவைக்க முடியாத சூழல் இருந்தாலோ துணிகளை நன்றாக பிழிந்து 7 முறை நன்றாக உதறிய பிறகு, உடுத்திக்கொண்டு வழிபாடு செய்யலாம்.
அங்கப்பிரதட்சணம்
அப்படி ஈர உடையுடன் வழிபாடு செய்ய நேரிடும்போது 'ஓம் அஸ்த்ராய பட்' என்று 7 முறை கூறி உதறிவிட்டு பிறகே அணிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல, அங்கப்பிரதட்சணம் செய்யும்போதும், அம்பாளுக்கு கரகம், பூச்சட்டி எடுக்கும்போதும், உடம்பில் மஞ்சள் நீரை ஊற்றிக் கொண்டு ஈரம் சொட்ட சொட்ட வழிபாடு செய்வார்கள்.. இந்த பூஜையை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதால், இதில் தவறேதும் இல்லை..
ஈர துணியுடன் பூஜைகள்
மற்ற சாதாரண நாட்களில்தான் ஈர துணியுடன் ஈரத்துடன் வழிபாடு செய்யக்கூடாது.. அதேபோல தீர்த்த தலமான ராமேஸ்வரத்தில் கோவில் பிரகாரத்திலுள்ள 22 தீர்த்தங்களில் நீராடியதுமே, அப்படியே ஈர உடையுடன் சுவாமி, அம்மன் கருவறைக்கு பக்தர்கள் செல்கிறார்கள்.. ஆனால், இதுவும் தவறானதாகும்.. பக்தர்கள் இதனை தவிர்த்துவிட்டு, லேசாக ஆடைகள் உலர்ந்தபிறகு வழிபாட்டுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் பெரியவர்கள்.
விளக்கை ஏற்றினாலும் ஈர உடம்புடன் அல்லது ஈர துணியை கட்டிக்கொண்டும் விளக்கு ஏற்ற கூடாது. விளக்கேற்றுவதற்குரிய முறைகளை மட்டுமே கடைப்பிடித்தால்தான், வேண்டுதல்களுக்கு பலன் கிடைக்கும்.
குடும்பத்தில் நிதி நெருக்கடி
பூஜை அறையில் மட்டுமல்ல, வீட்டின் எந்த அறைகளிலுமே ஈர துணிகளை போட்டு வைத்திருக்கக் கூடாது.. எந்த அறைகளிலும் துணிகளை ஊறவைத்து அப்படியே விட்டுவிட கூடாது.. துவைத்து முடித்தாலும்கூட, உடனே உலர்த்திவிட வேண்டும். காயவைக்க முடியாத சூழலில் துணிகளை துவைப்பதை தவிர்த்துவிட வேண்டும். இவ்வாறு ஈரத் துணிகள் வீட்டில் இருந்தால், குடும்பத்தில் நிதி நெருக்கடி, நஷ்டம், ஆரோக்கிய குறைபாடு சேர்ந்து விடுமாம்.
கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிந்து கொண்டு கோயிலுக்கு செல்லக்கூடாது என்று விதிகள் உள்ளதுபோல, கவர்ச்சியான ஆடைகள், ஈர துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்கு செல்லக் கூடாது என்பதும் முக்கியமானதாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications