பௌமாஸ்வினி.. செவ்வாய் தோஷம் இருக்கா? அம்மனை இன்று வழிபட்டால் சொந்த வீடு கட்டும் யோகம் தேடி வரும்
சென்னை: செவ்வாய் கிழமை அஸ்வினி நட்சத்திரம் கூடிய சுபதினத்தை தான் பெளமாஸ்வினி என்று பெரியோர்கள் தேவி வழிபாட்டை செய்தனர்.
பௌமன் என்றால் பூமியின் புதல்வர் செவ்வாய். அங்காரகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக இணையும் நாள் பௌமாஸ்வினி புண்யகாலம் எனப்படுகிறது. இந்த நாளில் அம்மனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும் வீடு கட்டும் யோகம் தேடி வரும்.
சில நட்சத்திரங்களும் கிழமைகளும் சேரும் போது, அந்த நாட்கள் அமிர்த சித்தி யோக தினங்கள் என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட விசேஷமான புண்ணிய தினங்களில் தெய்வங்களை பூஜித்தால் மிகுந்த பலன் கிடைக்கும். அந்த வகையில் ஒரு சிறப்பு தினம் தான் பௌமாஸ்வினி.
இன்றைய தினம் செவ்வாய்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் இணைந்து வந்துள்ளது.

அம்மனுக்கு உகந்த நாளான பெளமாஸ்வினி தினத்தில் தேவியின் தோற்றத்தைப் பார்த்து வியந்த தேவர்கள், யார் நீ என்று கேட்பதாகவும், தேவி அதற்கு பதில் சொல்லும் விதமாக, தானே ப்ரும்ம ஸ்வரூபமாகவும், ப்ரக்ருதியாகவும், ஆனந்தமாகவும், விக்ஞானமாகவும், பஞ்சபூதங்களாகவும் இருப்பதாக சொல்கிறாள். அதேசமயம் , இவைகளுக்கு எதிர்மறையாக உள்ள அப்ரும்மம், அவிக்ஞானம், அபஞ்ச பூதமாக இருப்பதும் நானே என்று சொல்கிறாள். ருத்ர, வசுக்கள், ஆதித்ய, விஸ்வதேவர்கள், தேஜஸ், மித்ர வருண, அக்னீ, அஸ்வினிகள் (இருவர்) - அதாவது தேவர்கள் அனைவரின் சக்தியும் நானே என்று சொல்லவும் தேவர்கள் அவளை வணங்குகின்றனர்.
இந்த ஆண்டு இன்றைய தினம் பௌமாஸ்வினி புண்ணிய காலமாகும். இன்று மாலையில் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். ஈசான்ய மூலையில் சுத்தம் செய்து ஒரு பலகையில் கோலமிட்டு, அதன் மேல்தீபம் ஏற்றி, ஒன்பது முறை துர்கா சப்த ச்லோகி பாராயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பாராயணம் முடியும்போது, ஒரு ப்ரதக்ஷிண நமஸ்காரம், இப்படியாக ஒன்பதுமுறை செய்ய வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், அந்த தோஷ நிவர்த்திக்கான, வழிபாட்டுக்குரிய நாளாக இந்த நாளைக் கருதுகின்றனர். எத்தனை முயன்றாலும் வீடு கட்ட நிலம் வாங்க முடியாதவர்கள், சொந்த நிலத்தில் வீடு கட்ட முடியாதவர்கள் இந்த விரதம் இருப்பதன் மூலமாக விரைவில் நிலம் வாங்கி வீடு கட்டலாம். சொந்த வீடு கட்டியும் பிரச்சினையில் சிக்கியுள்ளவர்கள், நிலம் வாங்கியும் சிக்கலில் சிக்கி தவிப்பவர்கள் இன்றைய தினம் அம்மனை வழிபடலாம்.
மிகவும் அரிதான இந்த நன்னாளில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களும் அதிகமான நன்மையைத் தரும். ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக லக்ஷ்மி நரசிம்மரை வழிபட வேண்டும். செவ்வாய் இரத்தத்தைக் குறிக்கின்றவர் என்பதால் இரத்தக் குறைபாடு நோய் உள்ளவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து நோயிலிருந்து விடுதலை பெறலாம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications