Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மார்கழி திருவாதிரை.. ஆடல்வல்லான் நடராஜரின் ஆருத்ரா தரிசனம்.. தயாராகும் சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வரும் 18 ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வரும் 27ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது.

மார்கழி திருவாதிரை நாளில் சிவபெருமான் தம் திருநடனக் காட்சியை பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். இதனையே ஆருத்ரா தரிசனம் என்கிறார்கள். இதையடுத்து நடராஜர் கோயில் உள்பட சிவபெருமானின் பஞ்ச சபைகளிலும் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா எனப்படும் திருவாதிரை திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

சென்னை

நடராஜருக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இது உஷ்ணம் மிகுந்த நட்சத்திரமாகும். அதோடு வெம்மை மிகுந்த சுடலையின் சூடான சாம்பலை திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியையும் ஏந்தியிருப்பதால் நடராஜர் கடுமையான வெப்பத்தால் சூழப்பட்டிருக்கிறார். இந்த வெப்பத்தை தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

சித்திரை மாத திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாத திருவாதிரை ஆகிய நாட்களில் நிகழ்த்தப்பெறும் திருமஞ்சனங்கள் நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுகின்றன. மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசியில் நடராஜருக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.

ஆடி முதல் மார்கழி வரை தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது. கடைசி பகுதியான மார்கழி மாதம் தனுர் மாதம் என போற்றப்படுகிறது. இது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகும். இந்த மாத திருவாதிரை நட்சத்திர தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக ஐதீகம். அப்போது சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சம் திருவிழாவும் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்க்கான மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வரும் 18 ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

வரும் 26ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வரும் 27ஆம் தேதி புதன்கிழமை நடைபெற இருக்கிறது. இதையொட்டி அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்த பின்னர், காலை 6 மணி முதல் திருவாபரண அலங்கார காட்சி நடைபெறுகிறது.

பின்னர் மதியம் 2 மணிக்கு ஆயிரம்கால் மண்டபமான ராஜசபையில் நடராஜரும், அம்பாளும் எழுந்தருளும் ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து 28ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் உலா வருதல், 29ஆம் தேதி ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறும்.

ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 27ஆம் தேதி அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 6 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். அவசர அலுவல்களை கவனிக்கும், பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+