சோழிகள் பண்ணும் அதிசயம்.. வீட்டில் சோழி இருப்பது நல்லது.. சோழியில் பல்லாங்குழி விளையாடுவது இதுக்கா?

sozhi

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோழியின் நன்மை என்னென்ன தெரியுமா? அன்றைய காலத்தில் பெண்கள் ஏன் பல்லாங்குழி விளையாடினார்கள்? பல்லாங்குழி விளையாட்டில் சோழிகளை ஏன் பயன்படுத்தினார்கள் தெரியுமா? சோழிகள் ஆன்மீகத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன? சோழியை வைத்து செய்யப்படும் எளிய பரிகாரம் என்ன? அனைத்தையும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

மகாலட்சுமியின் பிறப்பிடமான கடலில் தோன்றிய காரணத்தினால்தான், மகாலட்சுமிக்கு செய்யப்படும் பூஜைகளில் சோழிகள் பயன்படுகின்றன.. 130 வகை சோழிகள் இருப்பதாக சொல்கிறார்கள். எந்த வகையாக இருந்தாலும் கடலிலிருந்து கிடைப்பதால் அது நன்மையை தரக்கூடியதே.

மகாலட்சுமியின் வடிவம்

முக்கியமாக, நவராத்திரி காலங்களில் வீடுகளுக்கு வரும் பெண்கள், தேவியின் வடிவமாக கருதப்பட்டு மஞ்சள், குங்குமத்தோடு சோழிகளை வழங்கும் நடைமுறை இன்றும் உள்ளது. அதுமட்டுமல்ல, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக பல்லாங்குழி கருதப்படுகிறது. பெண்கள் இந்த விளையாட்டை சோழிகளைவைத்துதான் விளையாடுவார்கள்..

ஏனென்றால், சோழியில், சுண்ணாம்பு சத்தான கால்சியம் அதிகமாக உள்ளது.. இந்த கால்சியம் சத்துக்களுடன் தொடர்பு உள்ளபோது, பெண்கள் மீது கெட்ட ஆவி தொல்லை ஏற்படாமல் பாதுகாக்கப்படுமாம்.. அதனால்தான் பல்லாங்குழியில் சோழி பயன்படுத்தப்பட்டது.

பல்லாங்குழி சூப்பர் விளையாட்டு

அதுமட்டுமல்ல, சோழிகளை வைத்து விளையாடப்படும், மனம் ஒருமுகப்பட்டு, ஒன்றையே கூர்ந்து கவனிக்கும்.. நினைவித்திறன், செவி, கண்களுக்கு மட்டுமல்லாமல், கை விரல்களுக்கும் சிறந்த பயிற்சியை பல்லாங்குழி விளையாட்டு தருகின்றன. எந்த காரியம் நிறைவேற வேண்டுமானாலும் சோழிகளை குலுக்கி உருட்டி போட்டு எடுப்பார்கள்..

இதில், 1, 4, 5, 7, 9, 11, என்ற எண்ணிக்கையில் "நிமிர்ந்த" நிலையில் சோழிகள் இருந்தால், நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும். இதற்கு எதிராக, 2, 3, 8, 10, 12 என்ற எண்களில் சோழிகள் நிமிர்ந்து இருந்தால் காரிய தாமதம் ஏற்படும். அத்துடன் மனதில் சஞ்சலமும், தவிப்பும் இருந்து கொண்டே இருக்குமாம்.

வாஸ்து குறைக்கு சோழிகள்

அதேபோல, வீட்டிலுள்ள வாஸ்து குறைகளை நீக்கவும் சோழிகள் உதவுகின்றன.. ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில், பாதி அளவு நீரை ஊற்றி, 5 வெள்ளை சோழி, 1 கருப்பு சோழிகளை போட வேண்டும். இதில், 3 வெள்ளை சோழிகளை மேல்நோக்கியிருக்குமாறு, நிமிர்த்தி தண்ணீருக்குள் போட வேண்டும்.மிச்சமுள்ள 1 கறுப்பு சோழி, 2 வெள்ளை சோழிகளை கவிழ்த்து தண்ணீருக்குள் போடவேண்டும்.

மொத்தத்தில் 3 சோழிகள் கவிழ்ந்தும், 3 சோழிகள் நிமிர்ந்தும் இருக்க வேண்டும். இப்படி செய்வதால், வீட்டிலுள்ள திருஷ்டி மொத்தமும் நீங்குவதுடன், மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

சோழிகள் சத்தம்

அதுமட்டுமல்ல, அந்த சோழியின் சத்தம் ஒலித்து கொண்டேயிருந்தால், வீட்டில் கண்ணுக்கு தெரியாத அமானுஷ்ய கெட்ட சக்திகள் தங்காமல் வெளியேறிவிடும். அல்லது சோழிகளை 9 வரக்கூடிய கணக்குகளில் வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது 9, 18, 27 என்று எண்ணிக்கையில் 9 வரக்கூடியதுபோல வாங்கி, ஒரு சின்ன டப்பாவில் போட்டு விட வேண்டும். நேரம் கிடைக்கும்போது இந்த டப்பாவை எடுத்து குலுக்கலாம்.. இதனால், சோழிகள் உரசி சத்தம் வீட்டிற்குள் எழும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+