தீபாவளி, ஐப்பசி அமாவாசை.. சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதியில்லை.. வனத்துறை சொன்ன காரணம்
விருதுநகர்: சதுரகிரி வனப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஓடைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. தீபாவளி, ஐப்பசி அமாவாசை நாட்களில் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் யாரும் வனப்பகுதிக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு.

நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர்.
சதுரகிரி என்பது திருக்கைலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை வணங்குவதற்கு வானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்கிறார் அகஸ்தியர். சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு பாதுகாப்பு கருதி ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை பௌர்ணமி என எட்டு நாட்கள் மட்டுமே மக்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த முறை தீபாவளி பண்டிகை, ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு நவம்பர் 10 முதல் 14 வரையில் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாக விருதுநகர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், சதுரகிரி மலையில் உள்ள நீரோடைகள் நிறைந்து நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுகாப்பு கருதி இம்முறை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, ஐப்பசி அமாவாசை நாட்களில் பக்தர்கள் யாரும் சதுரகிரி மலை ஏறுவதற்கு வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications