திருப்பதியில் செருப்பு தொலையுதா?.. பக்தர்கள் புது டிரிக்.. பின்னணியில் இப்படி ஒரு காரணம் இருக்கா?
திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் இலவச காலணிகள் திருடு போகாமல் இருக்க புதுவிதமான முறையை கடைபிடிக்கின்றனராம். செருப்பு திருடு போனால் ஏதாவது பாதிப்பு வருமா? கோவிலில் செருப்பு திருடு போனால் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
செருப்பை தொலைத்த அனுபவம் நம்மில் பலபேருக்கு இருக்கும். கோவில், திருமண மண்டபம், இப்படி கூட்டம் சேரும் இடத்தில் செருப்பை வெளியே விட்டு விட்டு சென்றால், செருப்பு மாறி போவதற்கும் வாய்ப்பு உள்ளது. செருப்பு தொலைந்து போவதற்கும் வாய்ப்பு உள்ளது. நிறைய கோவில்களின் வாசல்களில் செருப்புகள் குவியலாக கேட்பாரற்று கிடக்கும். பலர் தங்களின் செருப்புகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்கள் அது தவறானது என்று சாஸ்திரம் சொல்கிறது.

ஏழுமலையான் அருள்பாலிக்கும் திருமலையில் உள்ள நான்கு மாட வீதிகளில் பக்தர்கள் செருப்புகளை அணிந்து நடமாட தடை உள்ளது. பக்தர்களின் வசதிக்காக திருப்பதி மலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் உள்ளன.
சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அவற்றில் தங்களுடைய செருப்புகள் உள்ளிட்ட காலணிகளை பத்திரப்படுத்திவிட்டு கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டு திரும்பி வந்தபின் எடுத்து செல்வது வழக்கம்.
தேவஸ்தானத்தின் இலவச காலணி காப்பகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே சரியான கண்காணிப்பு இல்லாத காரணத்தால் பக்தர்கள் விட்டு செல்லும் விலை உயர்ந்த செருப்புகளை குறிவைத்து சிலர் திருடி செல்வதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் திருப்பதி மலையில் நான்கு மாட வீதிகள் அருகே உள்ள காலனி காப்பகத்தில் தங்கள் காலணிகளை வைத்து அவற்றிற்கு பூட்டு போட்டு பூட்டிவிட்டு சாமி தரிசனம் செய்யச் செல்கின்றனராம்.
செருப்பு என்பது சாதாரண விசயமில்லை. மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது மகாவிஷ்ணுவும் நம்முடைய பாதங்களில் வாசம் செய்கிறார் எனவேதான் நம்முடைய செருப்பை நாம் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ளவேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்கின்றனர்.
வீட்டிலோ, வெளியிடங்களிலோ நாம் செருப்பை கழட்டி விடும் போது, இரண்டு செருப்பையும் ஒன்றாக விடவேண்டும். இரண்டு செருப்பையும் நேராக ஒன்றாக கழட்டி விடுவது உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை தேடி தரும். சில நேரங்களில் கோவில் வாசலில் கழற்றி விட்டு விட்டு செல்லும் செருப்பு தொலைந்து போக வாய்ப்பு உள்ளது. அப்படி தொலைந்து போனால் நம்முடைய அதிர்ஷ்டம் போய் விடுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கும் எனவேதான் செருப்பை பாதுகாப்பு மையங்களில் கழற்றி விடுகின்றனர்.
ஜீவசமாதிகளில், கோவில்களில் சித்தர்கள் அணிந்து கொண்டிருந்த செருப்பை வைத்து வணங்குவதை பார்த்திருப்போம். பெரிய பெரிய மகான்களின் செருப்பை மட்டும் வைத்துக் கூட சில இடங்களில் வழிபடுவார்கள். இப்போது புரிகிறதா? செருப்புக்கு எதற்காக இத்தனை பாதுகாப்பு என்று? உங்களது செருப்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒருவேளை செருப்பு தொலைந்து போனால் அதற்கு பதிலாக புதிய செருப்பு வாங்குவதற்கு முன்பு, மகாவிஷ்ணு கோவிலுக்கு சென்று, உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு சென்று புதிய செருப்பு வாங்கி அணிந்து கொண்டால், தோஷம் நீங்கி அதிர்ஷ்டம் நிரந்தரமாக இருக்கும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications