ஸ்கூல் திறக்க போகுது! ஆனாலும் திருப்பதியில் கூட்டம்! தர்ம தரிசனத்திற்கு இத்தனை மணி நேரமா?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய 12 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். நேற்று ஒரே நாளில் 79,398 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகிலேயே பணக்கார கடவுள் என்று ஏழுமலையான் அழைக்கப்படுகிறார். தினசரியும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.
திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானமாக கிடைக்கிறது. மேலும் வைர, தங்க, வெள்ளி நகைகளும் காணிக்கையாக கிடைக்கின்றன. பல பக்தர்கள் தங்களின் சொத்துக்களையும் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிடுகின்றனர். இப்படி திருப்பதி பணக்கார தெய்வம் என சொல்லப்பட்டாலும் புரட்டாசி மாதமும் சனிக்கிழமைகளிலும் ஏழைகள் போடும் படையலை பெருமாள் ஏற்று அவர்களின் வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தை காக்கிறார். கோடி கோடியாக யார் கொட்டி கொடுத்தாலும் ஏழைகளுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் திருமலை ஏழுமலையானை காண லட்சக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இதனால் திருப்பதியில் கூட்டம் அலைமோதுகிறது. அது போல் வார விடுமுறை என்பதாலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் பல மணி நேரம் காத்திருந்தே ஏழுமலையானை தரிசித்தனர்.
அது போல் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் எடுத்தவர்கள் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். அது போல் உண்டியல் வசூலும் அதிகமாகவே இருந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கோயிலில் நேற்று 79,398 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 43,557 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ. 2.90 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 22 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 12 மணி நேரத்திற்கு பிறகே ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள் என தெரிகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமலை திருப்பதி ஏழுமலையானை 67,320 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். ரூ 4.03 கோடி காணிக்கை செலுத்தியிருந்தனர். இவர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications